வயசு வெறும் 24! எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை 15 முறை கொடூரமாக குத்திய இளைஞர் யார்.. பரபர தகவல்
வாஷிங்டன்: சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கத்திகுத்து நடந்துள்ள நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தவர் சல்மான் ருஷ்டி. 75 வயதான சல்மான் ருஷ்டி, கடந்த சில ஆண்டுகளாகவே பிரிட்டன் நாட்டில் வாழ்ந்து வருகிறார்.
இவர் பல்வேறு புத்தகங்களை எழுதி இருந்தாலும் இவரது தி சாத்தானிக் வெர்சஸ் புத்தகம் கடும் சர்ச்சையைக் கிளப்பி இருந்தது.

தி சாத்தானிக் வெர்சஸ்
1988ஆம் ஆண்டு தி சாத்தானிக் வெர்சஸ் என்ற இவரது புத்தகம் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருந்தது. இதற்கு பல்வேறு இஸ்லாமிய நாடுகளிலும் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. அவரை கொலை செய்ய வேண்டும் என்று கூட பல இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வெளிப்படையாகவே அறிவித்தனர். இதன் காரணமாகவே அவர் பிரிட்டன் நாட்டில் வசித்து வந்தார். பல ஆண்டுகளாக அவர் பொதுநிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ளவில்லை.

சல்மான் ருஷ்டி
ஈரான் மதகுருவான ஆயத்துல்லா ருஹோலா கூட சல்மான் ருஷ்டி கொல்லப்பட வேண்டியவர் என்ற ரீதியில் கருத்து தெரிவித்து இருந்தார். இந்தச் சூழலில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் சல்மான் ருஷ்டி கலந்து கொண்டு இருந்தார். அந்தச் சமயத்தில் யாருமே எதிர்பாராத வகையில் மேடையிலேயே ஒருவர் சல்மான் ருஷ்டிவை சரமாரியாகக் கத்தியால் குத்தினார்.

என்ன நடந்தது
உடனே அருகில் இருந்தவர்கள் தாக்குதல் நடத்தியவரை பிடித்த, சல்மான் ருஷ்டியை காப்பாற்றினர். அவர் உடனடியாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது தொடர்பாக நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் கூறுகையில், "நிகழ்ச்சி தொடங்க இருந்த சமயத்தில் திடீரென மேடையில் ஏறிய ஒருவர் சல்மான் ருஷ்டியை கீழே தள்ளி தாக்கினார். பின் திடீரென கத்தியை எடுத்து சரமாரியாக குத்த தொடங்கினார். இது எல்லாம் சில நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டது" என்றார்.

கைது
இந்த விவகாரம் தொடர்பாக 24 வயது இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த நபர் நியூ ஜெர்சி பகுதியைச் சேர்ந்த ஹாதி மாதர் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது. அவர் எந்த ஆயுதத்தைப் பயன்படுத்தினார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. அதேபோல எதற்காகத் தாக்குதல் நடத்தினார் என்பது குறித்தும் துல்லியமாகத் தெரியவில்லை. இருப்பினும், எஃப்.பி.ஐ உடன் இணைந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

விசாரணை
அங்குக் கைப்பற்றப்பட்ட பொருட்களை வைத்து அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளனர். ஹாதி மாதர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் தானா இல்லை வேறு நாட்டில் இருந்து குடியேறியவரா என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், தற்போது வரை கிடைத்துள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும் போது ஹாதி மாதர் தனியாகவே செயல்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கண்ணை இழக்கும் அபாயம்
சல்மான் ருஷ்டி மேடைக்கு வந்த சில நொடிகளில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அவரது கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதிகளில் கத்தி குத்து நடந்துள்ளது. தற்போது வென்டிலெட்டர் உதவி உடன் சிகிச்சை பெற்று வரும் அவர், ஒரு கண்ணை இழக்கும் அபாயம் உள்ளது. சல்மான் ருஷ்டி மிகவும் இக்கட்டான சூழலில் இப்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications