இது நடந்தால் அவ்வளவுதான்.. மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கு வந்துவிடுவோம்! சவுமியா சுவாமிநாதன் வார்னிங்
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பரவ தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடையும் சூழலில், இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சவுமியா சுவாமிநாதன் இது தொடர்பாக சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கொரோனா வைரசை இன்னும் எந்தவொரு நாடும் முழுமையாக அழிக்கவில்லை. சில நாடுகள் மட்டுமே தீவிர கட்டுப்பாடுகள் காரணமாக வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்துள்ளன.
கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், கொரோனா அலைகள் அடுத்தடுத்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில், இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆய்வாளர் சவுமியா சுவாமிநாதன், ப்ளூம்பெர்க் தளத்திற்குப் பேட்டி அளித்துள்ளார்.

அரசியல்
கேள்வி: அறிவியல் இப்படி அரசியலாக்கப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: நான் மிகவும் ஆச்சரியப்பட்ட விஷயங்களில் அதுவும் ஒன்று. அறிவியல் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் மீதான தாக்குதலைப் பார்க்கும்போது ஏமாற்றமாக உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க அதிகரிக்க இது போன்ற தாக்குதல்களும் வலுப்பெற்றது. இது அறிவியல் தளத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, இளைஞர்கள் மத்தியில் நாம் அறிவியல் கல்வியறிவு, சுகாதார கல்வியறிவு ஆகியவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா தோற்றம்
கேள்வி: கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து நமக்கு என்ன தெரியும்?
பதில்: இப்போது புதிய வைரஸ்கள் அனைத்தும் ஜூனோடிக் வைரசாகவே உள்ளது. அதாவது விலங்கு அல்லது பறவையில் இருந்து தான் மனிதர்களுக்குப் பரவுகிறது. எச்.ஐ.வி, ஜிகா வைரஸ், எபோலா, சார்ஸ் மற்றும் மெர்ஸ் இப்படி தான் விலங்கிலிருந்து பரவியுள்ளது. சில சமயங்களில் அவை நேரடியாக விலங்கில் இருந்து மனிதர்களுக்கும், சில சமயம் இடையில் ஒரு உயிரினத்திற்குப் பரவி, அதன் பின்னர் மனிதர்களுக்குப் பரவலாம்.
கோவிட்-19ஐ பொருத்தவரை அவை வௌவால்களில் இருந்து பரவி இருக்கும் எனக் கருதுகிறோம். ஆனால், இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு எப்படி, எப்போது, எங்குப் பரவியது என்பது குறித்த தகவல்கள் நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. வரும் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க இதை அறிந்து கொள்வது முக்கியம்.
கேள்வி: தோற்றம் குறித்து நமக்குத் தெளிவான தகவல் இல்லை என்பது புதிய ஒன்றா?
பதில்: இது ஒன்றும் அசாதாரணமானது இல்லை. கடந்த காலங்களில் கூட சில வைரஸ்களின் தோற்றத்தைப் புரிந்து கொள்ள நமக்குப் பல ஆண்டுகள் வரை ஆகியுள்ளது. SARS சிவெட் பூனைகளிலிருந்து வந்தது என்றும் MERS ஒட்டகங்களிலிருந்து பரவியது என்றும் அறிந்து கொள்ளப் பல ஆண்டுகள் ஆனது. இதேபோலத் தான் எச்.ஐ.வி. சிம்பன்சிகளிடமிருந்து வந்தது என்பதைப் புரிந்து கொள்ளக் கூட நமக்கு நீண்ட காலம் ஆனது.

வூஹான் மையம்
கேள்வி: சீனாவில் உள்ள வூஹான் மையத்தில் இருந்து கொரோனா வைரஸ் வந்தது என்ற கோட்பாட்டை நிராகரித்துவிட்டீர்களா?
பதில்: கொரோனா தோற்றம் குறித்த கோட்பாடுகளில் எதையும் நாங்கள் நிராகரிக்கவில்லை. ஆதாரங்களை வைத்துத் தான் நாம் ஆய்வு செய்ய வேண்டும். சீனாவுக்குச் சென்ற ஆய்வாளர்கள் கூட பெரும்பாலும் இது ஒரு விலங்கிலிருந்து பரவி இருக்கும் என்றே குறிப்பிட்டனர். அது வனவிலங்கா அல்லது வளர்ப்பு வனவிலங்கு அல்லது வீட்டு விலங்காக என்பது நமக்குத் தெரியாது. சீனாவுக்கு நேரடியாகச் சென்று இதில் நாம் அடுத்தகட்ட ஆய்வுகளைத் தொடங்க வேண்டும்.

கூடுதல் அதிகாரம்
கேள்வி: உலக சுகாதார அமைப்புக்குக் கூடுதல் அதிகாரம் தேவையா?
பதில்: ஆம்! குறிப்பாக பெருந்தொற்று ஏற்படும் காலங்களில் கூடுதல் அதிகாரம் தேவைப்படுவதாக உணர்கிறோம். 194 உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து, உலக சுகாதார அமைப்புக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் விதிகளை மாற்றுவதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த மாதிரி விவாதங்கள் தான் இப்போது நடக்கிறது.

நடவடிக்கை
கேள்வி: கொரோனா காலகட்டத்தில் இன்னும் கூட சிறப்பான ஒரு நடவடிக்கையை உலக சுகாதார அமைப்பு எடுத்திருக்க வேண்டுமா?
பதில்: இப்போது நாம் பின்னோக்கிப் பார்த்தால், விஷயங்களை வேறு விதமாகவோ அல்லது சிறப்பாகவோ செய்திருக்கலாம். ஆனால் சர்வதேச அளவில் பொதுச் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டபோது, 100க்கும் குறைவான கேஸ்களே இருந்தன. சீனாவுக்கு வெளியே இரண்டு கேஸ்கள் மட்டும் இருந்தன. உயிரிழப்புகளும் இல்லை. அப்போது மிகச் சில நாடுகள் மட்டுமே இதைத் தீவிரமாக எடுத்துக் கொண்டன. ஐரோப்பா, அமெரிக்காவில் தேவையான நடவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் மதிப்புமிக்க நேரம் வீணாகியது.

எப்போது முடிவடையும்?
கேள்வி: இந்த கொரோனா பெருந்தொற்று எப்போது முடிவடையும்?
பதில்: அதை யாராலும் கணிக்க முடியாது. ஆனால், இப்போதே தொற்றுநோய் முடிந்துவிட்டதாக நம்மால் அறிவிக்க முடியாது. இவ்வளவு காலமாக நாம் எடுத்துக்கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கைவிடுவது முட்டாள்தனமானது. நாம் அதைத் தொடர வேண்டும். அப்போது தான் 2022 இறுதியில், நம்மால் சிறப்பான நிலையில் இருக்க முடியும். மீண்டும் ஒரே ஒரு உருமாறிய கொரோனா ஏற்பட்டால், நாம் மீண்டும் தொடங்கிய இடத்திற்கு வந்துவிடுவோம். நாம் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உருமாறிய கொரோனா
கேள்வி: பணக்கார நாடுகள் பூஸ்டர் டோஸ் பணிகளைத் தொடங்கியுள்ளன. ஆனால், பல ஏழை நாடுகளால் 2 டோஸ் வேக்சின் கூட செலுத்த முடியவில்லை. இது உருமாறிய கொரோனா தோன்றக் காரணமா?
சுவாமிநாதன்: ஆமாம். ஆப்பிரிக்காவில் 85 சதவீத மக்கள் முதல் டோஸ் வேக்சின் கூடப் பெறவில்லை. இது புதிய வகைகளை உருவாக்கும் வாய்ப்பை அளிக்கும். கொரோனா குறைந்த பின்னரும் கூட மற்ற சுவாச வைரஸ் பாதிப்புகளைப் போலவே இந்த கொரோனா உடனும் இணைந்து தான் நாம் வாழ வேண்டும். பொது இடங்களுக்குச் செல்லும் போது மாஸ்க் போன்ற கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications