நியூ ஆர்லியன்ஸில் அவசர நிலை பிரகடனம்! வெள்ளை லாரியில் கருப்பு கொடி! தாக்குதல் நடத்திய டிரைவர் யார்?
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் லாரியை ஏற்றிய நபருக்கு 42 வயது இருக்கும் என சொல்லப்படுகிறது. அவருடைய லாரியில் இடம் பெற்றிருந்தது என்னென்ன என்பது குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒவ்வொரு நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த நாடுகளின் நேரப்படி, இரவு முதலே இந்த கொண்டாட்டங்கள் நடைபெறும். இதற்காக பப்புகள், ரிசார்டுகளில் மக்கள் கூட்டமாக கூடி புத்தாண்டை வரவேற்க தயாராக இருந்தது.

அந்த வகையில் லூசியானாவில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரில் போர்பன் தெருவில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஒரு நபர் லாரியை வேண்டுமென்றே கூட்டத்தினர் மீது ஏற்றினார். இதில் பலர் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 15 பேர் பலியாகிவிட்டனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. லாரியை கூட்டத்திற்குள் செலுத்திவிட்டு அங்கிருந்து டிரைவர் தப்பியோட முயன்றார்.
அப்போது போலீஸாருக்கும் அந்த நபருக்கும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் அந்த டிரைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் நியூ ஆர்லியன்ஸில் மாகாண ஆளுநர் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார்.
இந்த சம்பவத்தில் லாரியை விட்டு ஏற்றிய நபர் யார் என்பது குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் அவர் டெக்சாஸை சேர்ந்த 42 வயதான ஷாம்ஷத் டின் ஜப்பாராக இருக்கலாம். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அவர் வெள்ளை நிற லாரியை கொண்டு வந்திருந்தார். அதில் டெக்சாஸ் மாகாண நம்பர் பிளேட் இருந்தது.
அந்த லாரி கடந்த ஆகஸ்ட் மாதம்தான் வாங்கப்பட்டது. லாரியின் பின்புறத்தில் கருப்பு நிற கொடி இருந்தது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு 2 நாளுக்கு முன்புதான் அந்த லாரியானது அமெரிக்காவின் தெற்கு எல்லையான டெக்சாஸில் ஈகிள் பாஸ் என்ற இடத்தை தாண்டிச் சென்றதாம்.
அந்த எல்லையை தாண்டிய போதிலிருந்தே சுட்டுக் கொல்லப்பட்ட டிரைவர்தான் ஓட்டி வந்தாரா என்பது குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. அவருடைய இமிகிரேஷன் குறித்தும் எந்த தகவலும் தெரியவில்லை. புத்தாண்டு கொண்டாட்டத்தை பயங்கரவாதமாக மாற்றியவர் மெக்சிகனை சேர்ந்தவராக இருக்கலாம் என தெரிகிறது.
இந்த கூட்டத்தில் லாரியை விட்டு எத்தனை பேரை கொல்ல முடியுமோ அத்தனை பேரை வேண்டுமென்றே கொல்லும் நிலையில் டிரைவர் இருந்தார் என்பது தெரிகிறது. இதற்காக வாகனத்தை ஓட்டி வரும் போதிலிருந்தே வேகமாக ஓட்டினார் என அங்கிருந்தவர்கள் சொல்கிறார்கள். மேலும் அந்த நபர் புல்லட் ப்ரூக் ஜாக்கெட் அணிந்திருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் போலீஸார் சுட்டதில் இறந்திருக்கிறார். புல்லட் ப்ரூப் அணிந்திருந்தால் எப்படி இறந்திருக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications