ட்விட்டரை தன்வசப்படுத்திய எலான் மஸ்க்! பராக் அக்ரவால் வெளியே? புதிய சிஇஓ அவரா.. அடுத்து என்ன
வாஷிங்டன்: கடந்த சில நாட்களாகவே இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த ட்விட்டர் - எலான் மஸ்க் இறுதி ஆகியுள்ள நிலையில், அந்த டீல் குறித்தும் அந்நிறுவனத்தில் ஏற்பட உள்ள முக்கிய மாற்றங்கள் குறித்தும் பார்க்கலாம்.
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் கடந்த சில ஆண்டுகளாகவே ட்விட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகளை விமர்சித்து வந்தார். ட்விட்டர் நிறுவனத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்று கூறி வந்தார்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், அவர் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2% பங்குகளை வாங்கினார். இதன் மூலம் அவர் ட்விட்டர் நிறுவனத்தின் போர்ட் உறுப்பினராவார் என எதிர்பார்க்கப்பட்டது.

எலான் மஸ்க்
இருப்பினும், போர்ட் உறுப்பினர் ஆக மறுத்த எலான் மஸ்க், சில நாட்களிலேயே ஒட்டுமொத்த ட்விட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் டாலருக்கு வாங்கத் தயாராக இருப்பதாக அறிவித்தார். முதலில் எலான் மஸ்கின் இந்த முயற்சியைத் தடுக்கவே ட்விட்டர் போர்ட் முயன்றது. இருப்பினும், பேச்சுவார்த்தைக்குப் பின்னர் எலான் மஸ்கின் ஆஃப்ருக்கு ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துவிட்டனர். இன்று காலை தான் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

ட்விட்டர் டீல்
ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு ஷேரை சுமார் 54 டாலருக்கு எலான் மஸ்க் வாங்குகிறார். இதன் மூலம் தற்போது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனமாக உள்ள ட்விட்டர் இனி தனிநபர் நிறுவனமாகச் செயல்படும். ட்விட்டர் நிறுவனத்தில் கருத்துச் சுதந்திரம் மேலும் வலுப்பெறும் என்று எலான் மஸ்க் தெரிவித்தார். இதனிடையே ட்விட்டர் எலான் மஸ்க் டீல் குறித்துப் பல முக்கிய தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளது.

கடன் தரும் நிறுவனங்கள்
சர்வதேச அளவில் நடைபெறும் மிகப் பெரிய நிறுவன விற்பனையில் இதுவும் ஒன்றாகும். தேவைப்படும் நிதியில் சுமார் 25.5 பில்லியன் டாலரை எலான் மஸ்க் கடனாகப் பெற்றுள்ளார். Goldman Sachs Group Inc. மற்றும் JPMorgan Chase ஆகிய நிறுவனங்களிடம் இருந்து எலான் மஸ்க் இந்த நிதியை ரெடி செய்துள்ளார். மீதி தொகையை அவர் சொந்த முதலீடாகச் செய்கிறார். இதன் மூலம் ட்விட்டர் நிறுவனம் முழுக்க முழுக்க ஒரு தனியார் நிறுவனமாக மாறுகிறது.

முக்கிய பதவி
இப்போது ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஆக உள்ள பராக் அக்ரவால் மற்றும் தலைவர் பிரட் டெய்லர் இப்போது வரை அதே பதவியில் தான் தொடர்கின்றனர். இருப்பினும், எலான் மஸ்க் வருகைக்குப் பின்னர், இதில் மாற்றங்கள் நிகழலாம் என்றே சொல்லப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாகவே ட்விட்டரின் போர்டு மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகளை எலான் மஸ்க் தொடர்ந்து விமர்சித்தே வருகிறார்.

அடுத்து யார்
அதுமட்டுமின்றி பொதுவாகவே ஒரு நிறுவனத்தை மற்றொருவர் வாங்கும்போது, நிர்வாக மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. அதேநேரம் எலான் மஸ்க் ஏற்கனவே டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின் சிஇஓ ஆக உள்ளார். எனவே, ட்விட்டர் நிறுவனத்தில் அவர் சிஇஓ பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களில் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

கருத்து சுதந்திரம்
எலான் மஸ்க் தலைமையில் ட்விட்டர் முழுக்க முழுக்க கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கும் வகையிலேயே செயல்படும் எனக் கூறி வருகிறார். ட்விட்டரில் கருத்துச் சுதந்திரம் மேலும் வலுப்பெறத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்தார். கருத்துச் சுதந்திரத்தைத் தான் நம்புவதாகவும் தன்னை மிக மோசமாக விமர்சிக்கும் நபரும் கூட ட்விட்டர் தளத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications