டிரம்ப் vs பைடன்.. அமெரிக்காவில் வெல்ல போவது யார்? அடடே "அவரே" சொல்லிட்டாரே.. அப்போ முடிவு கன்பார்ம்
வாஷிங்டன்: இந்தாண்டு இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், அங்கே யார் வெல்ல வாய்ப்புகள் அதிகம் என்பது குறித்த கணிப்புகள் இப்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கும் ஒரு முறை தேர்தல் நடக்கும். இதில் யார் வெல்வார்கள் என்பதை ஒவ்வொரு முறையும் பலரும் கணிப்பார்கள்.

கணிப்பு: அப்படி அமெரிக்க அதிபர்களைத் துல்லியமாகக் கணிப்பவர் தான் ஆலன் லிக்ட்மேன்.. இவர் ஏதோ ஓரிரு முறை மட்டும் அதிபர் தேர்தல் முடிவைத் துல்லியமாகக் கணிக்கவில்லை. கடந்த 10 முறை நடந்த அதிபர் தேர்தல்களில் 9 முறை தேர்தல் முடிவுகளை அவர் துல்லியமாகக் கணித்துள்ளார்.
ஆலன் லிக்ட்மேன்: மேலும், ஆலன் லிக்ட்மேன் ஏதோ சும்மா அதிபர் தேர்தல் முடிவுகளைக் கணிப்பதில்லை. அவர் இதற்காக 13 கீ பாயிண்டுகளை வைத்துள்ளார். அதன் அடிப்படையிலேயே தேர்தல்களில் யார் வெல்வார் என்பதை அவர் கணிப்பாராம். அதாவது பொருளாதார செயல்திறன், சமூக ஸ்திரத்தன்மை மற்றும் தற்போதைய அதிபரின் செயல்பாடுகள் உள்ளிட்ட விஷயங்களை அவர் கணக்கில் கொள்கிறாராம்.. மேலும், ஆபிரகாம் லிங்கன் காலத்தில் இருந்து பதிவான வாக்குகளையும் அவர் கணக்கில் எடுத்துக் கொள்கிறாராம்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்தாண்டு யார் வெல்வார்கள் என்ற இறுதி கணிப்பைச் செய்யவில்லை. இருப்பினும் என்னிடம் 13 கீ பாயிண்டுகள் உள்ளன. கடந்த 1984 முதல், அதாவது தொடர்ச்சியாக 10 தேர்தல் முடிவுகள் இதை வைத்து துல்லியமாகக் கணித்துள்ளோம். அதாவது 13 பாயிண்டுகளில் 6 பாயிண்டுகள் தற்போதுள்ள ஆளும் தரப்பிற்கு எதிராகச் சென்றால் ஆளும் தரப்பு தோற்று, எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்துவிடும்.
எப்படி: அதேநேரம் 6க்கு குறைவான பாயிண்டுகள் ஆளும் தரப்பிற்கு எதிராக இருந்தால் அவர்கள் வெல்வார்கள் என்பதே இந்த கணிப்பாகும். இப்போது ஜோ பைடன் இந்தத் தேர்தலில் தோல்வியடைய நிறைய பாயிண்டுகள் தவறாக செல்ல வேண்டியிருக்கும். இரண்டு விஷயங்களில் மட்டுமே அவர் தற்போது மோசமாக இருக்கிறார். எனவே, அவர் தோற்க வாய்ப்பு குறைவு.. இருப்பினும், தேர்தல் நெருங்கும் போது அவை எப்போது வேண்டுமானாலும் மாறலாம்" என்றார்.
இந்தாண்டு இறுதியில் நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் போட்டியிடும் நிலையில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் களமிறங்குகிறார். தற்போது இருக்கும் சூழலை வைத்து பார்க்கும் போது பைடன் தோல்வியடைய வாய்ப்புகள் மிக மிககுறைவு என்றே சொல்லப்படுகிறது.
பைடன்: நாட்டின் பொருளாதாரத்தைக் கையாள்வதில் பைடன் உடன் ஒப்பிடும் போது டிரம்ப் சிறப்பாக இருப்பதாக அமெரிக்க மக்கள் கூறுகிறார்கள். 41 சதவீதம் பேர் பைடனை விட டிரம்பின் பொருளாதார அணுகுமுறை சரியாக உள்ளதாக கூறியுள்ளனர். அதேநேரம் 34 சதவீதம் பேர் பைடனை ஆதரித்தனர். மற்றவர்கள் கருத்து கூறவில்லை.
அதேநேரம் இப்போது வரும் கருத்துக் கணிப்புகளை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்கிறார் ஆலன் லிச்ட்மேன்.. அவர் மேலும் கூறுகையில், "முன்கூட்டியே வரும் சர்வேக்கள் தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பு குறைவு.. அவை அந்த நேரத்தில் மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவே உதவும்.
2016ல் கருத்துக்கணிப்புகள் டிரம்ப் தோற்பார் என்றே சொன்னது. ஆனால், நான் டிரம்ப் தான் வெல்வார் என்பதைத் துல்லியமாகக் கணித்தேன். 1988ஆம் ஆண்டிலும் புஷ் சர்வேக்களில் பின்னால் தான் இருந்தார். ஆனால், அவர் தேர்தலில் வென்று அதிபரானார்" என்றார்.












Click it and Unblock the Notifications