‛ரீப்பிட் தி லைன்’.. டெலிப்ராம்டரால் கேலிக்குள்ளான அமெரிக்க அதிபர் ஜோபைடன்! காலை வாரிய எலான் மஸ்க்
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோபைடன் டெலிப்ராம்டர் பயன்படுத்திய உரையில் தவறு செய்ததால் அதனை உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் கிண்டல் செய்துள்ளார்.
அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான அரசியலமைப்பு உரிமையை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது. இதற்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் கருக்கலைப்பு செய்வது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசினார்.

டெலிப்ராம்டர் உரையில் தவறு
இந்த உரையின்போது ஜோபைடன் டெலிப்ராம்டரை பயன்படுத்தினார். கருக்கலைப்பு தொடர்பான விஷயம் பற்றி ஜோபைடன் தொடர்ந்து பேசினார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் ‛Repeat the line' என கூறி மீண்டும் தான் படித்த அதே வரிகளை கூறினார். அதாவது டெலிப்ராம்டர் பயன்படுத்தி பேசும் தலைவர்களுக்காக முக்கியமான வரிகளை இரண்டாவது முறையாக கூறுங்கள் என்பதை நினைவுப்படுத்தும் வகையில் ‛Repeat the line' என டெலிப்ராம்டரில் எழுதப்பட்டு இருக்கும். இதை அறிந்திருந்தாலும் கூட ஜோபைடன் எதிர்பாராத விதமாக ‛Repeat the line' என தனக்கான அறிவுரைகளையே படித்துவிட்டார்.

எலான் மஸ்க் கிண்டல்
தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஜோபைடனை ஏராளமானவர்கள் விமர்சனம் செய்வதோடு, கிண்டலும் செய்கின்றனர். சிலர் அவருக்கு ஆதரவான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இந்த விஷயத்தில் உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லாவின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் ஜோபைடனை கிண்டல் செய்துள்ளார்.

படத்தின் போட்டோ
ஜோபைடனின் டெலிப்ராம்டர் உரையாடல் தொடர்பான வீடியோவை Greg Price என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு எலான்மஸ்க் பதில் அளித்துள்ளார். அதில் 2004ல் வெளியான ‘ஆங்கர்மேன்: தி லெஜண்ட் ஆப் ரான் பர்கண்டி' எனும் திரைப்படத்தின் ஒரு போட்டோவை அவர் பதிவிட்டுள்ளார். அதில், ‛‛டெலிப்ராம்டரில் எதை எழுதி இருந்தாலும் நம் தலைவர் படித்துவிடுவார்'' என வேடிக்கையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Recommended Video

கூறியது என்ன?
இந்த படத்தில் கதாநாயகன் டெலிப்ராம்டர் பயன்படுத்தி பேசுவார். முழுவதுமாக டெலிப்ராம்டரை மட்டுமே நம்பும் அவர் அதில் தனது பெயர் மீதே சந்தேகம் எழுப்பும் வகையில் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கும். அதனை அவர் அப்படியே படித்துவிடுவார். இதனை தான் தற்போது எலான் மஸ்க் உவமையாக குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில், ‛டெலிப்ராம்டரை யார் கட்டுப்படுத்துகிறாரோ அவர் தான் உண்மையான அதிபர்' எனவும் அவர் விமர்சனம் செய்துள்ளார். இதன்மூலம் டெலிப்ராம்டரை யார் பயன்படுத்துகிறாரோ அவர் தான் அமெரிக்க அதிபராக இருக்க முடியும் என பொருள்படும்படி எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications