கடுங்கோபத்தில் ஒபாமா.. கமலா ஹாரிஸ் சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஆதரவே இல்லை கவனிச்சீங்களா.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ரேஸில் இருந்து பைடன் விலகி இருக்கும் நிலையில், அவருக்குப் பதிலாக ஜனநாயக கட்சியில் இருந்து கமலா ஹாரிஸ் போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அவருக்கு ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா ஆதரிக்கவில்லை. இதற்கான காரணம் இப்போது வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட இருந்த பைடன் போட்டியிடக் கூடாது என அழுத்தம் அதிகரித்தது. இதையடுத்து வேறு வழியின்றி அவர் அதிபர் ரேஸில் இருந்து விலகுவதாகச் சமீபத்தில் அறிவித்தார்.

US Presidential Election 2024 Kamala Harris 2024

ஆதரிக்கவில்லை ஏன்: பைடன் அதிபர் ரேஸில் இருந்து விலகிய பிறகு ஜனநாயகக் கட்சி சேர்ந்த பல தலைவர்கள் கமலா ஹாரிஸை ஆதரித்துள்ளனர். இருப்பினும், பராக் ஒபாமா இதுவரை வாய் திறக்கவில்லை. அதிபர் ரேஸில் இருந்து விலகிய பைடன் கூட கமலா ஹாரிஸை தான் அதிபர் வேட்பாளராக முன்மொழிந்து இருந்தார். ஆனால், ஒபாமா இதுவரை கமலா ஹாரிஸை ஆதரிக்கவில்லை.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறுகையில், "ஒபாமா மிகவும் வருத்தமாக இருக்கிறார்.. ஏனென்றால் கமலா ஹாரிஸால் டிரம்பை வீழ்த்த முடியாது என்றே ஒபாமா நினைக்கிறார். டிரம்பை வீழ்த்துவதற்கான திறமை கமலா ஹாரிஸுக்கு இல்லை என நினைக்கிறார். எல்லை கடந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் வருவோர் குறித்து ஆய்வு செய்யும் பொறுப்பைக் கமலா ஹாரிஸுக்கு அதிபர் பைடன் வழங்கி இருந்தார். ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் ஒரு முறை கூட கமலா ஹாரிஸ் எல்லை பக்கம் கூட வரவில்லை.

தேவையில்லாத பேச்சு: இப்படி இருக்கும் போது புலம்பெயர்ந்தோர் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு இருக்க வேண்டும் என்று வேறு அவர் கூறினார். இது எவ்வளவு பெரிய பிரச்சினையை உருவாக்கும் என்பதைக் கூட அவர் புரிந்து கொள்வதில்லை. உங்கள் கொள்கை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் அதிபர் தேர்தலில் போட்டியிடும் போது எதைச் சொல்ல வேண்டும். எதையெல்லாம் பொதுவெளியில் சொல்லக் கூடாது என்று இருக்கிறது. அதை முதலில் அவர் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

அதிபர் பதவியில் இருந்து விலகி 8 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் கூட ஒபாமாவுக்கு இன்னுமே ஜனநாயக கட்சியில் மிகப் பெரிய செல்வாக்கு இருக்கிறது. பைடன் கூட பலரும் அழுத்தம் கொடுத்தும் விலகவில்லை. அதேநேரம் பைடன் போட்டியிட வேண்டாம் என ஒபாமா நினைப்பதாகத் தகவல் வந்த இரண்டே நாட்களில் அதிபர் ரேஸில் இருந்து விலகினார்.

என்ன காரணம்: இந்தளவுக்கு ஜனநாயக கட்சியில் செல்வாக்கு கொண்ட ஒபாமா கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தரவில்லை என்றால்.. அவரது ஆதரவு யாருக்கு என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இப்போது அரிசோனா செனட்டராக இருக்கும் மார்க் கெல்லி அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்க வேண்டும் என ஒபாமா விரும்புகிறார். இதன் காரணமாகவே கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவிக்காமல் ஒபாமா மவுனம் காத்து வருகிறார்.

கடும் கோபத்தில் ஒபாமா: பைடன் அதிபர் ரேஸில் இருந்து விலக வேண்டும் என்று ஒபாமா நினைத்ததுப் போல நடந்தாலும் மார்க் கெல்லிக்கு பதிலாக கமலா ஹாரிஸுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளதால் ஒபாமா கடுங்கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், மார்க் கெல்லிக்கு ஜனநாயக கட்சியில் ஆதரவு குறைவாக இருப்பதால்.. ஒபாமா தனது முடிவை மாற்றிக் கொண்டு விரைவில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவிக்க இருக்கிறாராம். டிரம்பை வீழ்த்த வேண்டியது ஜனநாயகக் கட்சிக்கு முக்கியம் என்பதால் ஒபாமா இப்போதெல்லாம் தொடர்ந்து கமலா ஹாரிஸ் டீமுடன் டச்சில் இருக்கிறாராம். மேலும், விரைவில் இருவரும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+