வெனிசுலா அதிபரை அமெரிக்கா நாடு கடத்தியது ஏன்? இரு நாடுகளுக்கும் என்னதான் பிரச்சினை.. பின்னணி
வாஷிங்டன்: வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி நாடு கடத்தப்பட்டுள்ளனர். வெனிசுலா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், இந்த அதிரடியை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையே அப்படி என்ன பிரச்சினை என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வெனிசுலா தலைநகர் கராகசின் பல பகுதிகளில் இன்று அதிகாலை பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டன. குண்டு வெடிப்பால் தீப்பிழம்புகள் ஏற்பட்டு கரும்புகை எழும்பியது. மேலும் தலைநகரின் பல இடங்களில் விமானங்கள் தாழ்வாக பறந்து சென்றன. இதனால், வெனிசுலாவில் பதற்றம் ஏற்பட்டது.

வெனிசுலா மீது தாக்குதல்
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். இதையடுத்து வெனிசுலா படைகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
வெனிசுலாவைச் சுற்றி கரீபியன் கடல் பகுதியில் அமெரிக்கா தனது படைகளை குவித்துள்ளது. வெனிசுலா அதிபர் பதவியில் இருந்து மதுரோ வெளியேற வேண்டும் என்று டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார். மேலும் வெனிசுலாவில் தரைவழித் தாக்குதல் நடத்தப்படலாம் என்று டிரம்ப் கூறியிருந்தார். இத்தகைய சூழலில் தாக்குதல் நடத்தப்பட்டதால், அதனை அமெரிக்காதான் நிகழ்த்தியிருக்கும் என்று கருதப்பட்டது. இதை சற்று நேரத்தில் டிரம்பும் உறுதி செய்தார்.
அமெரிக்கா செய்தது குற்றச் செயல்
தொடர்ந்து சிறிது நேரத்தில், "வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மற்றும் அவரது மனைவி சிறைபிடிக்கப்பட்டு, வெனிசுலாவை விட்டு வெளியேற்றப்பட்டனர். அமெரிக்காவின் இந்த செயல், வெனிசுலாவின் தேசிய இறையாண்மை மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல்" என்று ஈரான் கண்டித்திருக்கிறது. கொலம்பிய அதிபர், இந்த விவகாரம் குறித்து பேச ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அமெரிக்கா செய்தது குற்றச் செயல் என்று கியூபா சாடியுள்ளது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது
மதுரோவை நாடு கடத்தியது ஏன்? என்பது தொடர்பாக தற்போது வரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் அமெரிக்கா தரப்பில் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில், அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செயலர் கிறிஸ்டோபர் லண்டவு கூறுகையில், "வெனிசுலா அதிபர் தனது குற்றங்களுக்காக நீதியை எதிர்கொள்ளப் போகிறார்" என்று கூறினார். இதனால், அமெரிக்கா அவர் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது.
முக்கிய காரணம் என்ன?
வெனிசுலாவை பொறுத்தவரை இயற்கை வளங்கள் நிறைந்த நாடாக உள்ளது. எனினும், கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து அந்த நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. எண்ணெய் விற்பனையை பெருமளவு நம்பியிருக்கும் வெனிசுலா, அதை தாண்டி பொருளாதார பன்முகத்தன்மையை கொண்டிருக்காததே அதன் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதுபோக, அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளையும் வெனிசுலா மீது விதித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications