Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நொடிகளில் வெடித்து சிதறிய உலகின் பெரிய ராக்கெட்.. ஆனாலும் எலான் மஸ்க்கிற்கு ஒரே கொண்டாட்டம்! ஏன்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை நேற்று தோல்வியில் முடிந்த போதிலும், எலான் மஸ்க் அதைக் கொண்டாடவே செய்துள்ளனர். தோல்வியில் முடிந்த ராக்கெட் சோதனைக்கு ஏன் கொண்டாடினார்கள் என்பது நெட்டிசன்களுக்கு குழப்பமாகவே இருக்கிறது.

உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதன்படி அவர் ஸ்பேஸ்எக்ஸ் என்ற விண்வெளி ஆய்வு தொடர்பான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

Why Elon Musk and his employees celebrate starship failure

செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப வேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்டது தான் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.. இப்போது இவர்கள் விண்வெளி துறையில் தொடர்ச்சியாகப் பல வித ஆய்வுகளைச் செய்து வருகின்றனர்.

ஸ்டார் ஷிப்: முன்பு ராக்கெட்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்த நிலையில், அதை மாற்றி மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் ராக்கெட்டை ஸ்பேஸ்எக்ஸ் கண்டுபிடித்தது. இதனால் செலவும் வெகுவாக குறைந்தது. இந்தச் சூழலில் தான் நேற்று ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை நடந்தது. இதுவரை மனிதர்கள் உருவாக்கியதிலேயே மிகப் பெரிய மற்றும் வலிமையான ராக்கெட்டாக இது கருதப்படுகிறது.

சுமார் 400 அடி (120 மீட்டர்) உயரம் கொண்ட ல்டார் ஷிப் மொத்தம் 33 என்ஜின்களை கொண்டதாகும். நாம் உருவாக்கியதிலேயே மிகப் பெரிய இந்த ராக்கெட்டின் சோதனை நேற்று நடைபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த டெஸ்டிங்கில், முதலில் வெற்றிகரமாகவே கிளம்பியது. இருப்பினும், அது கிளம்பிய சில நொடிகளிலேயே பூஸ்டர் தனியாகப் பிரிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ராக்கெட் நடுவானில் வெடித்துச் சிதறியது.

கவலைப்படவில்லை: இதன்மூலம் உலகின் மிகப் பெரிய ராக்கெட்டின் சோதனை தோல்வியில் முடிவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், எலான் மஸ்கும் சரி, ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்களும் சரி இதை நினைத்துக் கவலைப்படவில்லை. சொல்லப்போனால் கொண்டாடுவது போலவே ட்வீட் செய்திருந்தனர். தோல்வியில் முடிந்த ராக்கெட் சோதனைக்காக ஏன் எல்லாரும் கொண்டாடுகிறார்கள் என்று அனைவருக்கும் குழப்பம் இருந்தது. அதற்கான காரணத்தைப் பார்க்கலாம்.

நேற்று நடந்த சோதனையில் ஸ்டார்ஷிப் ராக்கெட் டெஸ்டிங் மொத்தம் 1.30 மணி நேரம் நடக்க இருந்தது. கீழே இருந்த கிளம்பிய ராக்கெட் பூமியின் முழு சுற்றுப்பாதையில் சுற்ற வேண்டும். ஸ்டார்ஷிப் கிளம்பிய மூன்று நிமிடங்களில் பூஸ்டர் பிரிந்து மெக்சிகோ வளைகுடாவில் விழ வேண்டும். இதுவே ஒர்ஜினல் திட்டம். ஆனால், திட்டமிட்டபடி பூஸ்டர் பிரியாததால் ராக்கெட் நடுவானில் வெடித்துச் சிதறியது.

Why Elon Musk and his employees celebrate starship failure

கொண்டாட்டம் ஏன்: இருப்பினும், எலான் மஸ்க் உட்பட எந்தவொரு ஸ்பேஸ்எக்ஸ் ஊழியரும் ராக்கெட் முழு பிளானையும் நிறைவு செய்யும் என்று நம்பவில்லை. ராக்கெட் பூமியில் இருந்து வெற்றிகரமாகக் கிளம்பிவிட்டாலேயே போதும் என்றே பார்த்தார்கள். இதன் காரணமாகவே மஸ்க் தொடங்கி அனைவரும் ராக்கெட் முழு பிளானையும் நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கவில்லை என்றே தொடக்கம் முதல் கூறி வந்தனர்.

முன்னதாக இது குறித்து எலான் மஸ்க் கூறுகையில், "இது சுற்றுப்பாதையில் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இதில் எதாவது சுவாரசியமாக நடக்கும் இது நிச்சயம் சலிப்பை ஏற்படுத்தாது.. சுற்றுப்பாதையை அடைய 50% வாய்ப்பு மட்டுமே உள்ளது" என்று அவர் தெரிவித்தார். அதாவது இத்திட்டம் முழு வெற்றியைப் பெறாது என்பது அவர்களுக்கு முன்கூட்டியே தெரியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+