டிரம்பை காலி செய்து.. தேர்தலில் வென்றாலும் கூட எலான் மஸ்கால் அமெரிக்க அதிபராக முடியாது! ஏன் தெரியுமா
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப்-எலான் மஸ்க் இடையேயான மோதல் உச்சமடைந்துள்ள நிலையில், எலான் மஸ்க் புதிய கட்சியைத் தொடங்கப் போவதாகக் கூறியிருந்தார். எலான் மஸ்க் புதிய கட்சியைத் தொடங்கினாலும் கூட அவரால் வெல்ல முடியுமா.. அதிபராக முடியுமா எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
அமெரிக்காவில் இப்போது திடீரென அதிபர் டிரம்ப்-எலான் மஸ்க் இடையே மோதல் வெடித்துள்ளது. இருவரும் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். உலக வல்லரசின் அதிபருக்கும் உலகின் மிகப் பெரிய பணக்காரருக்கும் ஏற்பட்டுள்ள இந்த மோதல் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

எலான் மஸ்க் புதிய கட்சி
இதற்கிடையே எலான் மஸ்க் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் போல் ஒன்றை நடத்தியிருந்தார். அதில் அமெரிக்காவின் 80% மிடில் கிளாஸ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் புதிய கட்சி தொடங்கப்பட வேண்டுமா எனக் கேட்டிருந்தார். அதற்குச் சரியாக 80% பேர் புதிய கட்சி தேவை என வாக்களித்திருந்தனர். போல் ரிசல்ட்டை பகிர்ந்த எலான் மஸ்க், சரியாக 80% மக்கள் புதிய கட்சியை விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், தி அமெரிக்கன் பார்டி என்ற பெயரில் கட்சியைத் தொடங்கப் போவதாக மற்றொரு ட்வீட்டை போட்டிருந்தார். எலான் மஸ்கின் இந்த ட்வீட் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது. அதேநேரம் எலான் மஸ்க் புதிய கட்சியைத் தொடங்கினாலும் கூட அவரால் வெல்ல முடியுமா.. அதிபராக முடியுமா எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
இரட்டை ஆட்சி முறை
அமெரிக்காவில் காலம் காலமாகவே இரட்டை கட்சி முறையே இருந்து வந்துள்ளது. தொடக்கம் முதலே குடியரசு கட்சி இருந்து வந்துள்ளது. எதிர்த் தரப்பில் நேஷனல் ரிப்பளிக்கன், விக்ஸ் எனக் கட்சிகள் உருவான நிலையில், கடைசியில் ஜனநாயக கட்சி அந்த இடத்தை இறுகப் பற்றிக் கொண்டது. இப்போது அமெரிக்காவில் குடியரசு கட்சியும் ஜனநாயக கட்சியுமே பிரதான கட்சிகளாக உள்ளன.
அங்குப் புதிதாக மூன்றாவது கட்சி இருக்கக்கூடாது என்று எந்தவொரு விதியும் இல்லை. ஆனால், இரு கட்சிகளைத் தாண்டி மூன்றாவது கட்சி நுழைந்து ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புகள் மிக மிகக் கடினம். இரு கட்சியில் ஒன்று தான் வெல்லும் என மக்கள் கருதுவதால், புதிய கட்சிக்கு இயல்பாகவே வாக்குகள் கிடைப்பதில்லை. அமெரிக்காவில் இரு கட்சிகளைத் தாண்டி 3வதாக ஒரு கட்சி கடைசியாக வென்றது 1850ல் தான். அதன் பிறகு 3வது கட்சியால் வெல்லவே முடியவில்லை. இது எலான் மஸ்கிற்கு உள்ள முதல் சவால்!
பெரிய சிக்கல்
அப்படியே அவர் கட்சியை ஆரம்பித்து, இரு கட்சிகளையும் காலி செய்து வென்றாலும் எலான் மஸ்க்கால் அதிபராகவே முடியாது. ஏனென்றால் அமெரிக்க சட்டப்படி அங்குப் பிறந்த ஒருவரால் மட்டுமே அந்நாட்டின் அதிபராக முடியும். அதாவது அமெரிக்காவில் குறிப்பிட்ட ஆண்டுகள் அங்கேயே இருப்பது, முதலீடு செய்வது எனப் பல வழிகளில் குடியுரிமை பெறலாம். அப்படி குடியுரிமை பெற்றாலும் கூட அவர்களால் அதிபராக முடியாது. அமெரிக்க மண்ணில் பிறந்து, அதன் மூலம் குடியுரிமை பெற்ற நபரால் மட்டுமே அதிபராக முடியும்.
தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர்
இதன் காரணமாகவே எலான் மஸ்க்கால் நிச்சயம் அமெரிக்க அதிபராக முடியாது. ஏனென்றால் பலரும் நினைப்பது போல எலான் மஸ்க் அமெரிக்காவில் பிறந்தவர் இல்லை. எலான் மஸ்க் உண்மையில் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர் தொடர்ந்து அவர் கல்லூரி படிப்பில் சேர கனடா வந்தார். அதன் பிறகே 1990களில் அவர் அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
அதன் பிறகே அவர் பல பிஸ்னஸ்களை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அவரிடம் தென்னாப்பிரிக்கா, கனடா, அமெரிக்க குடியுரிமை இருப்பதாகக் கூறப்படுகிறது. என்னதான் அமெரிக்க குடியுரிமை இருந்தாலும் அவர் அமெரிக்காவில் பிறக்கவில்லை என்பதால் அதிபராக முடியாது!
-
கண்கள் சிவந்த பிபி.. "டிரம்ப் இப்படி பண்ணிட்டாரு.." கடும் கோபத்தில் நெதன்யாகு.. என்ன நடந்தது? -
அடங்க மறுக்கும் ஈரான்.. விடாமல் விரட்டும் ட்ரம்ப்.. ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் வெடிக்கும் போர்? -
அமைதி பேச்சுவார்த்தையின் முக்கிய கட்டம்.. பாக்., பிரதமரை சந்தித்த அமெரிக்க துணை அதிபர்! -
திடீரென அமெரிக்க துணை அதிபர் விமானத்தை சூழ்ந்த போர் விமானங்கள்.. பாகிஸ்தான் வான் எல்லையில் பரபரப்பு! -
டிரம்ப் அடங்கவே மாட்டார் போல.. "இதுவரை கண்டிராத தாக்குதல் இருக்கு!" ஈரானுக்கு புதிய எச்சரிக்கை -
ஒப்பந்தம் ஏற்படாமல் போகட்டு, அப்புறம் இருக்கு.. பேச்சுவார்த்தைக்கு முன்பே ஈரானை மிரட்டும் அமெரிக்கா -
பறந்த 26 போன் கால்கள்.. பாகிஸ்தான் வெறும் 'முகமூடி' தான்.. அமெரிக்கா- ஈரான் போரில் சீனா ஆடிய கேம் -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி! நெதன்யாகு லேசுபட்ட ஆள் கிடையாது! -
விண்டோஸை தூக்கி எறியும் பிரான்ஸ்... அமெரிக்காவிற்கு பயப்படுகிறதா.. பின்னணி என்ன? -
போர் நிறுத்தத்திற்கு காரணம் பாகிஸ்தானா? வெளியான முக்கிய தகவல்.. உள்ளே புகுந்து விளையாடிய சீனா! -
“பிளான் எங்கே..?” ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்க நேட்டோ நாடுகளை நச்சரிக்கும் டிரம்ப்! -
வளைகுடா நாடுகளில் அமைதி.. இந்தியர்களுக்கு பெரிய நிம்மதி! ஈரான் எடுத்த நடவடிக்கை!











Click it and Unblock the Notifications