"அந்த" உறுப்பை பெரிதாக வரைந்து.. இதெல்லாம் ஒரு உலக சாதனையா.. கடுப்பான கின்னஸ் அமைப்பு! அட துயரமே

வினோதமான உலக சாதனையை அமெரிக்க நபர் ஒருவர் படைக்க முயன்றுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் வினோதமான உலக சாதனையைப் படைக்க முயன்றுள்ளார். இதற்காக அவர் அனுப்பிய ஒரு படத்தைப் பார்த்து கின்னஸ் அமைப்பே கடுப்பாகிவிட்டது.

உலகில் அசாத்தியமான செயல்களைச் செய்வோர் கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பெறுவார்கள். அதிக எடை தூக்கியவர்கள், அதிக தூரம் நீச்சலடிப்பவர்கள் எனப் பல பிரிவுகளில் இப்படி உலக சாதனைகளைப் படைப்பார்கள்,

அதேநேரம் சில வினோதமான சாதனைகளும் கூட இதில் இடம்பெறும். அதாவது நீண்ட நேரம் முத்தம் கொடுத்தவர்கள், நீருக்கு அடியே அதிக நேரம் முத்தம் கொடுத்தவர்கள் உள்ளிட்ட சாதனைகளும் இடம் பெறும்.

அமெரிக்கா

அமெரிக்கா

இதற்கிடையே அப்படித்தான் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் வினோதமான ஒரு உலக சாதனையைப் படைக்க முற்பட்டுள்ளார். இருப்பினும், அவர் கூறியதைக் கேட்டு கின்னஸ் உலக அமைப்பே டென்ஷனாகிவிட்டதாம். அவரது சாதனையை முயற்சியையும் அங்கீகரிக்க மறுத்துவிட்டது. அப்படி என்ன தான் செய்தார் வாங்கப் பார்க்கலாம். உலக சாதனை படைக்க இந்த நபர் உலகின் மிகப்பெரிய ஆணுறுப்பு படத்தை டிஜிட்டல் முறையில் வரைந்துள்ளார்.

 பெரிய படம்

பெரிய படம்

இந்த வினோத செயலில் ஈடுபட்டது யார் என்பது குறித்துத் தெளிவான தகவல் இல்லை. இருப்பினும், அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனை சேர்ந்த ஒருவரே இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். இதை கின்னஸ் உலக சாதனைக்கும் அனுப்பியுள்ளார். அந்த நபர் தன்னை எக்பிளான்ட் என்று அழைத்துக்கொள்கிறார். 2021இல் என்எப்டிக்கள் டிரெண்டிங்கில் இருந்த நிலையில், இவர் முதலில் அதையே உருவாக்க முயன்றுள்ளார். இருப்பினும், தான் தனித்துவமாக எதையாவது உருவாக்க வேண்டும் என்று நினைத்து அவர் தனது எண்ணத்தை மாற்றி இதை உருவாக்கியுள்ளார்.

 ஏன இந்த முயற்சி

ஏன இந்த முயற்சி

இது தொடர்பாக அவர் கூறுகையில், "அனைவரும் என்எப்டிக்கள் பின்னால் தான் அப்போது இருந்தார்கள்.. எனக்கும் அதேபோல இருக்க விருப்பம் இல்லை. அப்போது தான் ஒரு மாபெரும் கார்ட்டூன் ஆணுறுப்பை டிஜிட்டல் முறையில் உருவாக்கலாம் என்ற எண்ணம் எனக்கு வந்தது" என்றார். இப்போது 351,063,244,800 பிக்சல்கள் கொண்ட படமே உலக சாதனையாக உள்ளது. அதை விட 290 மடங்கு பெரியதாக எக்பிளான்ட் இந்த படத்தை உருவாக்கினார்.

 எவ்வளவு பெரியது

எவ்வளவு பெரியது

இது சுமார் 102,040,171,200,000 பிக்ஸல் பெரிதாகும். எக்பிளான்ட் உருவாக்கியுள்ள இந்தப் படத்தை நாம் 2டி பிரிண்ட் எடுத்தால் அது விண்வெளி வரை செல்லுமாம். தனி மென்பொருள் ஒன்றின் மூலமே அவர் இதை உருவாக்கியுள்ளார். இதற்கு மட்டும் சுமார் ஐந்து வாரங்கள் வரை ஆகியுள்ளது. இது எந்தளவுக்கு பெரியது என்றால்.. இதை பிரிண்ட் செய்தால் 2.7 முறை பூமியைச் சுற்றி வர முடியும். மேலும், இது ஒரு கோடி கால்பந்து மைதானங்களை அளவுக்கு பெரியது.

 கின்னஸ் அமைப்பு

கின்னஸ் அமைப்பு

தனது படைப்பு இழிவானதோ அல்லது பெண்களுக்கு எதிரானதோ இல்லை என்று குறிப்பிடும் எக்பிளான்ட், இது ஜாலியாக உருவாக்கப்பட்ட ஒரு படைப்பு என்று குறிப்பிடலாம் என்றார். இதை அவர் கின்னஸ் உலக சாதனைக்கும் அனுப்பி வைத்தார். இருப்பினும், கின்னஸ் உலக சாதனையில் இடம்பெறத் தேவையான சில அடிப்படை அளவுகோல்களை இந்தப் படம் பூர்த்தி செய்யவில்லை என்று கூறி இதை கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்க மறுத்துவிட்டனர். மேலும், இது தொடர்பாக கின்னஸ் சாதனை அமைப்பு அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் அளித்துள்ளது.

நிராகரிப்பு

நிராகரிப்பு

அவர்கள் அளித்துள்ள விளக்கத்தில், "எங்கள் குழு நீங்கள் அனுப்பிய படத்தைச் செய்த ஆய்வின் அடிப்படையில் உங்கள் இந்த முயற்சி உலக சாதனைக்குத் தகுதி பெறாது என்பதைக் கூறிக் கொள்கிறோம்.. உங்கள் படத்தில் குறிப்பிட்ட வண்ண தொகுப்பைத் தான் மீண்டும் மீண்டும் பயன்படுத்தியுள்ளீர்கள். (அதாவது ஒரே காலரை காப்பி பேஸ்ட் செய்துள்ளார். எனவே, இதை உலக சாதனையாக அங்கீகரிக்க முடியாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

கோபம்

கோபம்

இருப்பினும், இதை முற்றிலுமாக மறுத்துள்ள எக்பிளான்ட். தனது படம் தொடர்ச்சியானது என்றும் இதில் ஒரே கலர் பேட்டன் எதுவும் இல்லை என்றும் கூறி மேல்முறையீடு செய்தார். இருப்பினும், இந்த முறையீட்டையும் கின்னஸ் அமைப்பு அதே காரணத்தைச் சொல்லி நிராகரித்தது. தனது படிப்பைப் பிடிக்காததால் அவர்கள் இப்படி ஏதோ காரணங்களைச் சொல்லி நிராகரிப்பதுள்ளதாக எக்பிளான்ட் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+