‛மியா காலிஃபா’ கூறிய அந்த ஒற்றை வார்த்தை.. விரட்டி சென்ற யூத பெண்.. பரபர சம்பவம்.. என்ன காரணம்
வாஷிங்டன்: முன்னாள் ஆபாச பட நடிகையான மியா காலிஃபாவிடம் பொது இடத்தில் யூத பெண் ஒருவர் வம்பிழுத்தார். மியா காலிஃபா சொன்ன ஒற்றை வார்த்தையால் அவரை விடாமல் அந்த பெண் பின்தொடர்ந்து சென்ற வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது. உண்மையில் இருவருக்கும் இடையே என்ன நடந்தது? அதன் பின்னணி என்ன? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
லெபனான் நாட்டில் பிறந்தவர் மியா காலிஃபா. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஆபாச வீடியோக்களில் நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்றார். இவர் ஆபாச படம் நடிக்க கடும் எதிர்ப்பும் கிளம்பியது. மேலும் அவருக்கு மிரட்டல்களும் விடுக்கப்பட்டது.

இதையடுத்து மியா காலிஃபா தற்போது ஆபாச படங்களில் நடிக்காமல் உள்ளார். தற்போது அவர் தொழில்களை தொடங்கி அமெரிக்காவில் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தான் அமெரிக்காவின் மியாமி பீச் கன்வென்ஷன் சென்டருக்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கும், யூத பெண் ஒருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பான வீடியோவை மியா காலிஃபா நேற்று தனது வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அதில் யூத பெண் ஒருவர் தன்னை பின்தொடர்ந்து வந்து திட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பகிர்ந்த வீடியோவில் வெள்ளை நிற ஆடை அணிந்திருந்த பெண் யூதர்களின் ஒற்றுமைக்கான பாடலை ஹீப்ரு மொழியில் தொடர்ந்து பாடினார். மேலும் அவர் தனது கழுத்தில் அணிந்திருந்த செயினை காட்டினார். அதில் ஹீப்ரு மொழியில் வாழ்க்கை என எழுதப்பட்டு இருந்தது. தன்னிடம் வம்பிழுப்பதை அறிந்த மியா காலிஃபா அங்கிருந்து நகர முயன்றார்.
இருப்பினும் அந்த பெண் மியா காலிஃபாவை பின்தொடர்ந்து சென்றார். இதையடுத்து மியா காலிஃபா ‛‛என்னை விட்டு நகர்ந்து செல்லுங்கள். உங்கள் மூச்சு காற்றின் வாசனை என்பது மோசமாக இருக்கிறது’’ என கூறிவிட்டு நகர்ந்தார். இந்த வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதற்கிடையே தான் அந்த பெண் எதற்காக மியா காலிஃபாவிடம் வம்பிழுத்தார் என்பதன் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இஸ்ரேல் என்பது யூதர்களின் நாடாக உள்ளது. பாலஸ்தீனம் இஸ்லாமிய மக்களின் நாடாக உள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனத்தினத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் இடையே நீண்ட ஆண்டுகளாக இருந்து வந்த மோதல் கடந்த அக்டோபர் 7ம் தேதி போராக மாறியது. தற்போது 3 மாதங்களை கடந்து போர் நடந்து வருகிறது.
காசா பகுதிக்குள் இஸ்ரேல் நுழைந்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது வரை 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். முன்னதாக இந்த போர் தொடங்கியபோது மியா காலிஃபா காசா மற்றும் ஹமாசுக்கு ஆதரவாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மியா காலிஃபா பிறந்த லெபனான் பாலஸ்தீனத்துக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் நிலையில் அவரும் அப்படியே ஆதரவு வழங்கினார். இதனை அறிந்து தான் அமெரிக்காவில் அந்த யூத பெண், ‛‛நாங்கள் வாழ்கிறோம்’’ என மியா காலிஃபாவிடம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications