Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பயமா இருக்கு! என்ன செய்ய போறோமோ!" சாட் ஜிபிடியால் இத்தனை ஆபத்துகளா! உருவாக்கியவரே சொன்ன பகீர் தகவல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சாட் ஜிபிடி குறித்த கவலைகளை அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாகவே உலகில் எங்குத் திரும்பினாலும் சாட் ஜிபிடி பற்றியே பேச்சாக இருந்து வருகிறது.. சாட் ஜிபிடி என்று இல்லை அனைத்து ஏஐ கருவிகளும் தான் இப்போது தொழில்நுட்ப துறையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

Why OpenAI CEO Sam Altman Is A Bit Scared Of AI, ChatGPT

இது அத்தனையையும் தொடங்கி வைத்தது என்னவோ சாட் ஜிபிடி தான்.. நாம் இதுவரை பார்த்ததிலேயே சக்திவாய்ந்த ஒரு ஏஐ கருவியாக சாட் ஜிபிடி இருக்கிறது. நாம் என்ன கேள்வி கேட்டாலும் சாட் ஜிபிடி துல்லியமாகப் பதில் சொல்லும்.

ஏஐ கருவிகள் கேள்விகள் என்று மட்டும் இல்லை, கவிதை கேட்டால் கவிதை சொல்லும், லவ் லெட்டர் கேட்டால் அதைக் கூடி எழுதித் தரும். அந்தளவுக்கு ஒரு மேம்பட்ட ஏஐ கருவியாகவே சாட் ஜிபிடி உள்ளது. இதனால் சாட் ஜிபிடி பயன்பாடு பயங்கர வேகமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது மட்டுமின்றி கல்லூரி தேர்வுகள், போட்டி தேர்வுகளில் கூட தேர்ச்சி பெற்று அதிர்ச்சி தருகிறது.

இது ஒரு தரப்பினருக்குக் கொண்டாட்டமாக இருந்தாலும் மற்றொரு தரப்பினர் இதை எச்சரிக்கையுடனேயே அணுகுகிறார்கள். மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே சாட் ஜிபிடியை உருவாக்கியுள்ளனர். நாம் கற்பனை கூடச் செய்ய முடியாத அளவுக்குச் சக்தி வாய்ந்த ஒன்றாக இந்த சாட் ஜிபிடி இருக்கிறது. இருப்பினும், மனித வேலைகள் பறிபோகும் என்ற அச்சம் அதிகமாக உள்ளது. இதனிடையே இதை உருவாக்கிய சாம் ஆல்ட்மேன் என்பவரே இது குறித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

Why OpenAI CEO Sam Altman Is A Bit Scared Of AI, ChatGPT

என்ன சிக்கல்: மேலும், சாட் ஜிபிடியை தவறான காரணங்களுக்கும் பயன்படுத்தும் ஆபத்து இருக்கிறது. மேலும், ஹேக்கர்கள் இந்த சாட்ஜிபிடியை வைத்து சமூக வலைத்தளங்களில் பொய்யான மற்றும் தவறான தகவல்களையும் மிகப் பெரியளவில் பரப்பவும் வாய்ப்புகள் இருக்கிறது. இப்படி நல்ல விஷயங்கள், கெட்ட விஷயங்கள் என இரண்டுமே கொட்டி கிடப்பதால் சாட் ஜிபிடி மீது பாராட்டும் விமர்சனமும் ஒரு சேர இருக்கிறது.

வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், புரோகிராமர்கள் என அனைவரும் இப்போது சாட் ஜிபிடியை பார்த்து அச்சப்படுகிறார்கள். இதற்கிடையே சாட்ஜிபிடியை உருவாக்கிய சாம் ஆல்ட்மேன் சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த விசாரணைக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆஜராகியிருந்தார். அப்போது அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று சாம் ஆல்ட்மேன் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தற்போது பெரும் பயன் தருவதாக அமைந்தாலும் கூட தேவையான பாதுகாப்பு அம்சங்களைச் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Why OpenAI CEO Sam Altman Is A Bit Scared Of AI, ChatGPT

என்ன சொன்னார்: சாம் ஆல்ட்மேன் மேலும் கூறுகையில், "ஏஐ என்பது நமது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் மேம்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை நம்பியே நாங்கள் ஓபன் ஏஐ நிறுவனத்தைத் தொடங்கினோம். அதேநேரம் அதில் ஆபத்துகளும் இருக்கவே செய்கிறது என்பது எங்களுக்குத் தெரியும்.

வரும் காலத்தில் பவர்புல் ஏஐ கருவிகள் அதிகம் உருவாகி வரும் நிலையில், அரசின் ஒழுங்குமுறை தலையீடு முக்கியமானதாக இருக்கும். இந்த தொழில்நுட்பம் தவறாகப் போனால், பாதிப்புகள் மோசமாக இருக்கும்.

அதேநேரம் நாங்கள் ஓபன் ஏஐ நிறுவனத்தில் இருந்து வரும் காலத்தில் உருவாக்கும் ஏஐ என்பது காலநிலை மாற்றம் மற்றும் புற்றுநோயைக் குணப்படுத்துதல் போன்ற மனிதக்குலத்தின் பெரிய சவால்களைச் சமாளிக்க உதவும். இருப்பினும், தவறான தகவல், வேலையிழப்பு உள்ளிட்ட ஆபத்துகளைக் கருத்தில் கொண்டு, அரசின் தலையீடு தேவை என்றே நாங்கள் நினைக்கிறோம். அபாயங்களைக் குறைக்க இது முக்கியமானதாக இருக்கும்" என்றார்.

சக்திவாய்ந்த ஏஐ கருவிகளை வெளியிட உரிமம் மற்றும் அனுமதி போன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது குறித்து அமெரிக்க அரசு பரிசீலிக்கலாம்.. விதிகள் மீறப்பட்டால் அனுமதியைத் திரும்பப்பெறும் அதிகாரத்துடன் இதை அரசு செய்யலாம். ஏஐ சார்ந்த அனைத்தையும் கவனிக்கத் தனியாக ஒரு அமைப்பை உருவாக்குவதும் சிறப்பாக இருக்கும். ஏஐ கருவிகளால் பல பயன்கள் இருக்கிறது என்றாலும் கூட, இதைக் கண்டு சற்று அச்சமும் இருக்கவே செய்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+