உலகமே முடங்கும் அபாயம்.. பூமியை தாக்கும் X சூரியப் புயல்.. சூரியன் உடைந்தது காரணமா! பகீர் தகவல்

சூரிய புயலால் உலகமே முடங்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சூரியினின் ஒரு பகுதி திடீரென தனியாக உடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறம் இருக்கச் சூரிய புயலால் சர்வதேச அளவில் கூட மோசமான பாதிப்பு ஏற்படக்கூடும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பூமிக்குச் சூரியன் தான் அடிப்படை... இங்கு வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் சூரியன் நிச்சயம் தேவைப்படுகிறது. சூரிய கதிர்கள் மூலமே செடிகள் உணவுகளை உற்பத்தி செய்கிறது. அதுவே பூமியில் பல உயிர்கள் தோன்றவும் காரணமாக உள்ளது.

பல கோடி மைல் அப்பால் உள்ள சூரியன் குறித்துத் தெரிந்து கொள்ள விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.. அமெரிக்கா தனது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.

 சூரியன்

சூரியன்

இதற்கிடையே ஆய்வாளர்கள் சூரியனின் ஒரு பெரிய பகுதி அதன் மேற்பரப்பில் இருந்து உடைந்துள்ளதைச் சமீபத்தில் கண்டுபிடித்தனர். இது சூரியனின் வட துருவத்தைச் சுற்றி ஒரு சூறாவளி போன்று சுழற்சியை உருவாக்கியுள்ளது.. இது எப்படி நடந்தது என்பதைக் கண்டறியும் முயற்சியில் ஆய்வாளர்கள் இறங்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோவையும் டாக்டர் தமிதா ஸ்கோவ் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இது பூமிக்கு என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்தும் ஆய்வாளர்கள் கவலையுடன் ஆய்வு செய்து வருகிறார்கள்..

 சூரியப்புள்ளிகள்

சூரியப்புள்ளிகள்

இது ஒரு பக்கம் இருக்க விண்வெளி வல்லுநர்கள் புதிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது இப்போது சூரியனில் இரண்டு புதிய சூரிய புள்ளிகள் தோன்றியுள்ளது. இது தான் ஆய்வாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சூரியப்புள்ளிகள் என்பது சூரியினின் மேற்பரப்பில் இருக்கும் மங்கலாக அல்லது கருமையாகப் பெரிய புள்ளிகளாகும். சூரியனின் வாயுக்கள் மோதல் கொள்ளும்போது இவை தோன்றுகின்றன. இவை சூரியினின் மேற்பரப்பு வெப்பத்தைக் குறைத்து காந்தப் புயலையும் மின்காந்த அலையில் தடங்கலும் ஏற்படுகிறது.

 சூரிய புயல்

சூரிய புயல்

இப்போது ஏறப்பட்டுள்ள இந்த சூரிய புள்ளிகளால் ஏற்படும் சூரிய புயல் பூமியைத் தாக்கும்போது, பாதிப்புகள் ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல அமைப்பு சமீபத்தில் வரவிருக்கும் சூரிய புயல் குறித்து எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.. இது பூமியில் மின்சார சேவையிலும் தகவல் தொழில்நுட்பத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளனர். சூரியனின் மேற்பரப்பில் தோன்றியுள்ள சூரிய புள்ளிகளே இதற்குக் காரணம்.

 பூமிக்கு பாதிப்பு

பூமிக்கு பாதிப்பு

இந்த சூரிய புயல் பூமியில் சில பகுதிகளில் மின்சாரம் மற்றும் இணையத் தடையை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. மேலும் பல பகுதிகளில் இது ரேடியோ மற்றும் ஜிபிஎஸ் சிக்னல்களை பாதிக்கும் ஆபத்தும் உள்ளது. அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல அமைப்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், M-நிலை சூரிய புயல் வெடிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்றும் X-நிலை சூரிய புயல் வெடிப்பு ஏற்பட லேசான வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. X-நிலை சூரிய புயல் ஏற்பட்டால் பாதிப்பு ரொம்பவே மோசமானதாக இருக்கும்.

எப்போது

எப்போது

இந்த சூரிய புயல் அடுத்து வரும் நாட்களில் பூமியைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... சமீப காலங்களில் இந்த சூரிய புயல்களால் ஏற்கனவே பசிபிக் பகுதிகளில் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தான் சூரியினின் ஒரு பகுதி அதன் வடக்கு பகுதியில் பிரிந்ததாக நாசா ஆய்வாளர்கள் வீடியோவை பகிர்ந்தனர்.. இருப்பினும், இப்போது ஏற்படும் சூரிய புயலுக்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் இதுவரை எதுவும் கூறவில்லை. இதற்கிடையே தான் இந்த சூரிய புயல் பூமியைத் தாக்கலாம் என்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

 உலகமே முடங்கும்

உலகமே முடங்கும்

இந்த சூரிய புயல் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது. M-நிலை சூரிய புயல் ஒரு சில பகுதிகளில் மட்டுமே பாதிப்பு மோசமாக இருக்கும். அதேநேரம் X-நிலை சூரிய புயல் ஏற்பட்டால், கிட்டத்தட்ட உலகமே முடங்கும். சர்வதேச அளவில் பல இடங்களில் இணையச் சேவை பாதிக்கப்படும். மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், சில பகுதிகளில் ரேடியோ, மொபைல் சிக்னல்களை இழக்கும் அபாயமும் கூட இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+