"நான் ஒரு வெர்ஜின்.." சொல்வது ஆபாச பட நடிகை.. கூடவே டிரம்பை இழுத்து.. ஐயயோ இப்படி சொல்லிட்டாரே
வாஷிங்டன்: அமெரிக்காவின் ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் அதிபர் டிரம்ப் மீது மீண்டும் பாய்ந்துள்ளது. அவர் இப்போது கூறிய கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2020ஆம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலை மாற்ற முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டில் டிரம்ப் தவறு செய்துள்ளதாக ஜார்ஜியா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், இந்த விவகாரத்தில் டிரம்ப் நேரடியாகச் சரணடையவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜார்ஜியாவில் உள்ள சிறையில் சரணடைந்தார். அப்போது அனைத்து கைதிகளிடமும் எடுக்கப்படுவதைப் போல டிரம்பின் கைரேகை எடுக்கப்பட்டு அவரது போட்டோவும் எடுக்கப்பட்டது. இது இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியிருந்தது.
டிரம்ப்: ஜார்ஜியா சிறையில் டிரம்பின் எடை, உயரம் உள்ளிட்ட தகவல்களும் சேகரிக்கப்பட்டது. அதில் டிரம்பின் எடை 97.5 கிலோ எனக் கூறப்பட்டிருந்த நிலையில், அதைத்தான் ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் கேலி செய்துள்ளார். இந்த விவகாரத்தில் அவர் டிரம்பை சாடும் வகையில் சொன்ன கருத்துகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த ஸ்டார்மி டேனியல்ஸ் வேறு யாரும் இல்லை. இதற்கு முன்பு டிரம்புடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்தவர் தான் இவர்.
கடந்த 2016 தேர்தல் சமயத்தில் தன்னுடன் இருந்த உறவு குறித்து பொது வெளியில் பேசக் கூடாது என்று ஸ்டார்மி டேனியல்ஸ் உடன் டிரம்ப் ஒப்பந்தம் போட்டார். அதற்கு $130,000 டாலரும் அவர் செலுத்தியிருக்கிறார். அந்நாட்டின் சட்டப்படி இப்படி ஒப்பந்தம் போடுவதும் பணம் கொடுப்பதும் சட்ட விரோதமானது இல்லை. இருப்பினும், டிரம்ப் இதற்குத் தேர்தல் நிதியைப் பயன்படுத்தினார் என்பதே புகாராக எழுந்தது. இந்த விவகாரத்திலும் டிரம்ப் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி இருந்தது.
நக்கல்: இருப்பினும், டிரம்ப் இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து மறுத்தே வருகிறார். தனக்கு ஸ்டார்மி டேனியல்ஸ் என்றால் யார் என்றே தெரியாது என்றும் அவரை பார்த்தே இல்லை என்றும் தொடர்ந்து கூறி வருகிறார். அதேபோல ஸ்டார்மி டேனியல்ஸும் இவரை விடுவதாக இல்லை. சமூக வலைத்தளங்களில் டிரம்பை தொடர்ந்து விமர்சித்தே வருகிறார். அதுபோல தான் இப்போது ஜார்ஜியா சிறையில் எடுக்கப்பட்ட டிரம்பின் எடை குறித்த தகவல்களையும் ஸ்டார்மி டேனியல்ஸ் நக்கலடித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "ம்ம்ம் ஓகே! அப்போது நானும் சொல்வேன் நான் 50 கிலோ மற்றும் நான் ஒரு வெர்ஜின். இதைச் சொல்ல நான் எனது எடையைப் பார்க்கவில்லை. நான் மருத்துவரும் இல்லை. ஆனால், 97 கிலோ எடை கொண்ட நபருக்குக் கீழ் கொஞ்ச நேரம் இருந்து இருக்கிறேன். நான் சொல்கிறேன் நிச்சயம் அந்த நபர் ஒன்றும் லைட் வெயிட் ஆனவர் இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.
ஏன்: ஜார்ஜியா சிறையில் டிரம்பின் எடை மற்றும் உயரம் மார்க் செய்யப்பட்டிருந்தது. அதில் டிரம்பின் எடையாக 97.5 கிலோ எனக் குறிப்பிட்டிருந்தனர். அதை நக்கல் செய்தே ஸ்டார்மி டேனியல்ஸ் இதை பதிவிட்டுள்ளார். அவர் அதிபராக இருந்த போது கடைசியில் அவரது எடை 110 கிலோவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவரது எடை 6.3 அடி எனக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஒருவரது படம் இதுபோல சிறையில் எடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications