சினிமா "ஏலியன்" மட்டுமில்லை.. சூறாவளி கூட அமெரிக்காவை மட்டும் குறி வைச்சு தாக்குதே ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவை இப்போது அதி ஆபத்தான மில்டன் என்ற சூறாவளி தாக்கியுள்ளது. இது அங்கு மிகப் பெரியளவில் தேசத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் இதுபோன்ற சூறாவளிகள் அடிக்கடி ஏற்படுவது ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழும். இதற்கு என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

அமெரிக்காவை அடிக்கடி சூறாவளி தாக்குவதாக நாம் செய்திகளில் படித்து இருப்போம்.. சினிமாவில் வரும் ஏலியன்கள் மட்டுமின்றி சூறாவளியும் கூட ஏன் அமெரிக்காவை மட்டும் அதிகம் குறிவைத்துத் தாக்குகிறது என்ற கேள்வி நம்மில் பலருக்கும் எழுந்து இருக்கும்.. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

hurricane milton america us

நம்ம ஊரிலும் தான் புயல் ஏற்படும்.. ஆனால், அவை அமெரிக்காவில் ஏற்படும் அளவுக்குத் தீவிரமானதாக பெரும்பாலும் இருப்பதில்லை.. இதற்குக் காரணமே அமெரிக்காவின் புவியியல் அமைப்பு தான். சூறாவளி உருவாகத் தேவையான அனைத்து சூழல்களும் அமெரிக்காவில் மிகப் பொருத்தமாக இருக்கிறது.

அமெரிக்காவில் தான் அதிகம்: அமெரிக்காவில் ஏற்படுவது சக்தி வாய்ந்த வெப்பமண்டல சூறாவளிகள் ஆகும்.. சூடான கடல் நீரில் உருவாகும் இந்த சூறாவளியால் பேரழிவு மற்றும் உயிரிழப்புகள் கூட ஏற்படும். அமெரிக்காவில் உள்ள மிக நீண்ட கடற்கரையும் அங்கு நிலவும் புவியியல் சூழலும் அமெரிக்காவை, குறிப்பாகக் கிழக்கு கடற்கரையை ஒட்டிய மாகாணங்களை, சூறாவளி தாக்க ஏற்ற இடமாக மாற்றுகிறது.

hurricane milton america us

இதுதான் காரணம்: அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மெக்சிகோ வளைகுடாவில் உருவாகும் சூறாவளிகள் செல்லும் பாதையில் மிக சரியாக அமெரிக்கா அமைந்துள்ளது. இந்த வெதுவெதுப்பான கடல் நீரால் சூறாவளிகள் எளிதாக உருவாகி, தீவிரமடைகிறது. மேலும், அமெரிக்காவின் கடற்கரையின் மொத்த 19,312 கிமீ.. இந்தளவுக்குக் கடற்கரை மிகப் பெரியதாக இருப்பதும் அங்குச் சூறாவளி கரை கடக்க முக்கிய காரணமாக இருக்கிறது.

மெக்சிகோ வளைகுடாவில் நிலவும் காற்று மற்றும் கடல் நீரோட்டங்கள், சூறாவளிகளை மேற்கு நோக்கி, அதாவது அமெரிக்காவை நோக்கிச் செல்ல காரணமாக அமைகிறது.. இந்த ஜெட் ஸ்ட்ரீம்கள் தான் எப்போதும் சூறாவளி பாதைகளைப் பாதிக்கின்றன. ஜூன் 1 முதல் நவம்பர் 30 வரையிலான இந்த காலகட்டத்தை அட்லாண்டிக் சூறாவளி பருவம் என்கிறார்கள்.

பாதிப்பு அதிகரிப்பது ஏன்: அமெரிக்காவின் உட்பகுதிகளில் பெரியளவில் மக்கள் தொகை இருக்காது. அதேநேரம் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் மக்கள்தொகை அதிகமாக இருக்கும். அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் தான் மக்கள் தொகை அதிகம். ஏனென்றால் இந்த பகுதியில் தான் முதலில் அமெரிக்கர்கள் செட்டிலாக ஆரம்பித்தனர். மேலும், அங்கு வீடுகளும் நம்மைப் போல கான்கிரீட்டில் செய்யப்பட்டு இருக்காது.. மரத்திலேயே செய்யப்பட்டு இருக்கும். இதன் காரணமாகவே சூறாவளி ஏற்படும் போது பாதிப்புகள் மோசமாக ஏற்படுகிறது.

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 20+ சூறாவளிகள் ஏற்படுகிறது. முகனால் கிழக்கு கடற்கரையில் உள்ள புளோரிடா, லூசியானா, டெக்சாஸ், வடக்கு கரோலினா மற்றும் தெற்கு கரோலினா ஆகிய மாகாணங்களில் சூறாவளி பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.

கோரதாண்டவம் ஆடிய மில்டன் சூறாவளி: அதன்படியே இப்போது இந்த மில்டன் சூறாவளியும் அமெரிக்காவைத் தாக்கியுள்ளது. சமீப காலங்களில் உருவானதிலேயே இதுதான் வலிமையான சூறாவளி என்று கூறப்படுகிறது. இந்த மில்டன் சூறாவளி அமெரிக்காவின் புளோரிடாவில் நேற்றிரவு கரையைக் கடந்தது. அதி ஆபத்தான இந்த மில்டன் புயலால் அங்குப் பாதிப்புகள் மிக மோசமாக ஏற்பட்டுள்ளது. பல லட்சம் பேரின் வீடுகள் இன்னும் இருளில் மூழ்கியுள்ளது. இதில் சிலர் உயிரிழந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+