தொட்ட இடமெல்லாம் சர்ச்சை.. ஆனாலும் டிரம்பிற்கு ஆதரவு குறையவே இல்லையே ஏன்! அமெரிக்கர்கள் மனநிலை என்ன
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப் அதிபராக வேண்டும் என்பதற்கான ஆதரவு பெருகி வருகிறது. இத்தனை சர்ச்சைகளுக்கு பிறகும் மீண்டும் டிரம்பிற்கு எப்படி ஆதரவு அதிகரிக்கிறது என்பது குறித்து நாம் இதில் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்காவில் அடுத்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்குப் பல மாதங்கள் இருந்தாலும் இப்போதே தேர்தல் சர்வே, பிரசாரம் என அனைத்தும் தொடங்கிவிட்டது. சமீபத்தில் வெளியான சர்வே-இல் கூட டிரம்பிற்கு பைடனை காட்டிலும் 10% கூடுதலாக ஆதரவு இருந்தது.

கடந்த 35 ஆண்டுகளில் எந்தவொரு நபருக்கு இந்தளவுக்கு ஆதரவு இருந்ததே இல்லை. தொடர்ச்சியாகப் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் கூட டிரம்பிற்கு எப்படி இவ்வளவு பெரிய ஆதரவு இருக்கிறது என்று பலருக்கும் சந்தேகம் வரலாம். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
டிரம்ப்: முதலில் டிரம்ப் தனது ஆதரவாளர்கள் மத்தியில் எப்போதும் கிங் தான்.. இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் குடியரசுக் கட்சியினர் மத்தியில் டிரம்ப் ரொம்பவே பிரபலம்.. டிரம்ப் குறித்து எந்தளவுக்கு மோசமான செய்திகள் வந்தாலும் டிரம்பிற்கு வாக்களிக்கும் அதிதீவிர ஆதரவாளர்கள் டிரம்பிற்கு அதிகம். இதுவே குடியரசுக் கட்சி உட்கட்சி தேர்தலில் அவருக்கு மிகப் பெரிய பாசிட்டிவாக மாறுகிறது. இது அடுத்தாண்டு நடக்கும் அதிபர் தேர்தலிலும் அவருக்கு கை கொடுக்கும்.
பைடன் மீது கடும் கோபம்: மற்றொரு பக்கம் தற்போது அதிபராக இருக்கும் பைடன் அரசு மீது மக்கள் பயங்கர கோபத்தில் இருக்கிறார்கள். பைடன் அதிபரான முதல் சில மாதங்கள் மட்டுமே அவருக்கான ஆதரவு அதிகமாக இருந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக அவருக்கான ஆதரவு குறைவாகவே இருக்கிறது. அதிலும் கடந்த சில மாதங்களாக அது முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையாகச் சரிந்துள்ளது. மக்கள் பைடன் மீது கோபத்தில் இருப்பதே இதற்குக் காரணம்.
கொரோனா பரவலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காதது, உக்ரைன் போர் விவகாரம், அனைத்தையும் தாண்டி அமெரிக்காவில் அதிகரிக்கும் விலைவாசி ஆகியவை பைடனுக்கு எதிராக மக்கள் திரும்பக் காரணமாக அமைந்துவிட்டது. இதே நிலை நீடித்தால் அடுத்தாண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு இதுவே சாதகமாக மாறும்.
பொருளாதாரம்: அனைத்தையும் காட்டிலும் அமெரிக்கப் பொருளாதாரம் இப்போது பைடனுக்கு தலைவலியாக மாறி இருக்கிறது. அங்கு பெரும்பாலான வாக்காளர்களுக்கு இதுவே பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எப்போதும் பொருளாதார பாதிப்பு ஏற்படும் சமயத்தில் அது ஆளும் அரசையே காலி செய்வதாக இருக்கும். அங்குப் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலைவாசி அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள்.
பணவீக்கம், உயரும் வட்டி விகிதங்கள், விரைவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சம் ஆகியவை காரணமாகப் பொதுமக்கள் கலகத்தில் உள்ளனர். இதையே டிரம்ப் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார். தற்போதைய பொருளாதார சிக்கல்களைச் சரி செய்யத் துணிச்சலான முடிவுகளை எடுக்கும் வலிமையான தலைவர் என்று அவர் தன்னை தானே முன்னிறுத்திக் கொள்வார். இதுவும் நல்ல ஆதரவை அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.

பிரசார யுக்தி: அடுத்து டிரம்ப் முன்வைக்கும் பிரசாரமும் கவனிக்க வைப்பதாக இருக்கிறது. "America First" என்பதை முன்வைத்து அவர் பிரசாரம் செய்து வருகிறார். சிக்கலில் இருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பேன் என்ற முழக்கத்தை அவர் முன்வைக்கிறார். இது பழமைவாதிகள், வெள்ளை இன மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுகிறது. மேலும், டிரம்ப் பிளவுபடுத்தும் கருத்துகளைக் கூறுவது, எதிர்த் தரப்பை மிகக் கடுமையாகத் தாக்குவது போன்ற நடவடிக்கைகளால் தனது ஆதரவு வட்டத்தைத் தொடர்ந்து பெருக்கிக் கொள்கிறார்.
அதேநேரம் அங்கு அடுத்தாண்டு இறுதியில் தான் அதிபர் தேர்தல் நடைபெறும். அதற்குப் பல மாதங்கள் இருப்பதால் அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இருப்பினும், தற்போது டிரம்பிற்கு மிகப் பெரிய முன்னிலை இறுக்கும் நிலையில், அதே நிலை தொடர்ந்தால், பைடனை வீழ்த்தும் அளவுக்கு வலிமையான நபராக டிரம்ப் மாறுவார் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
-
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி











Click it and Unblock the Notifications