யுஎஃப்ஓக்களில் வரும் ஏலியன்கள்? அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது எதை தெரியுமா.. ராணுவ அதிகாரி பகீர்
அமெரிக்காவில் அதிகரிக்கும் யுஎஃப்ஓக்கள் நடமாட்டம் குறித்து ராணுவம் விளக்கமளித்துள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவில் 3ஆவது முறையாக மர்மப் பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இதற்கிடையே இவை ஏலியன்களாக இருக்கலாம் என்று அமெரிக்க ஜெனரல் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே மர்மப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.. அமெரிக்க வான்வழியில் தோன்றும் இந்த மர்மப் பொருட்கள் உலகெங்கும் மிகப் பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது.
முதலில் கடந்த வாரம் சீனாவின் பலூன் ஒன்று பறந்தது. சீனா இதை வானிலை ஆய்வு தொடர்பான பலூன் என்ற போதிலும், அமெரிக்கா இதை உளவு பலூன் என்றே சொல்லிச் சுட்டு வீழ்த்தியது பரபரப்பைக் கிளப்பியது.

மர்ம பொருள்
இது ஓய்வதற்கு முன்னரே அமெரிக்காவில் அடுத்தடுத்து மர்மப் பொருட்கள் பறக்கும் சம்பங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன. இதற்கிடையே அமெரிக்க ராணுவ அதிகாரிகள் இது தொடர்பாக சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அமெரிக்காவின் அலாஸ்கா மீது பறந்து சென்ற மர்மப் பொருளை நேற்று முன்தினம் அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. கார் அளவில் வேகமாகப் பறந்து கொண்டிருந்த அந்த மர்மப் பொருளை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. 40,000 அடி உயரத்தில் பறந்த அந்த மர்மப் பொருளை அமெரிக்காவின் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளன.

கனடா
இதையடுத்து கீழே விழுந்து கிடந்த மர்மப் பொருட்களின் பாகங்களை எடுத்து ஆய்வு செய்யும் பணிகளில் அமெரிக்க பாதுகாப்புத் துறை இறங்கியுள்ளது. இதற்கிடையே நேற்று கனடாவில் மர்மப் பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது. கனடா வான்வழியில் பறந்த அந்த மர்மப் பொருள் அமெரிக்க மற்றும் கனடா ராணுவங்கள் இணைந்து சுட்டு வீழ்த்தியுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவின்படி கனடா - அமெரிக்கா ராணுவங்கள் இணைந்து இந்த பணிகளைச் செய்துள்ளன. அதேநேரம் இது குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.. மூன்றாவது நாளாக இன்றும் அதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மூன்றாவது நாள்
அமெரிக்க-கனடிய எல்லையில் உள்ள ஹுரோன் ஏரிக்கு மேல், இன்றும் ஒரு மர்மப் பொருளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இந்த மர்மப் பொருள் பார்க்க எட்டு கோணங்களைக் கொண்ட அக்டோகோனல் (octagonal) அமைப்பைக் கொண்டதாக இருந்துள்ளது. . இதனால் தரையில் யாருக்கும் அச்சுறுத்தல் இருந்ததாகத் தெரியவில்லை.. ஆனால் அது சுமார் 20,000 அடி (6,000 மீட்டர் ) உயரத்தில் பறந்ததால் சிவில் விமானப் போக்குவரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ராணுவ அதிகாரி
இந்த மர்மப் பொருட்களில் இருந்து பொருட்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.. இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இது ஏலியன்களாக கூட இருக்கலாம் என்று அமெரிக்க ஜெனரல் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த ஜெனரல் க்ளென் வான்ஹெர்க், "வட அமெரிக்க வான்வெளியை ஆய்வு செய்து வருகிறோம்.. இது ஏலியன்களின் நடவடிக்கையாகக் கூட இருக்கலாம் என்றே சந்தேகிக்கிறோம். எதையும் இப்போதைக்கு நிராகரிக்க முடியாது.

ஏலியன்கள்
இது தொடர்பாகப் புலனாய்வு வல்லுநர்கள் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இப்போதைக்கு நாங்கள் அனைத்து ஆப்ஷன்களையும் ஓபனாகவே வைத்துள்ளோம். எதையும் நாங்கள் நிராகரிக்கவில்லை.. இந்த கட்டத்தில், அமெரிக்காவை அச்சுறுத்தும் அனைத்தையும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.. இந்த யுஎஃப்ஓக்களை "பலூன்கள்" என்று அழைக்க முடியாது.. அவை எப்படி இருந்தது என்று நமக்கு உறுதியாகத் தெரியவில்லை. அது உள்ளே பலூன் போல இருக்கலாம்.. அல்லது வேறு விதமாகக் கூட இருக்கலாம். எனவே, இப்போது அதை பலூன் என்று குறிப்பிட முடியாது" என்றார்.

முக்கிய தகவல்கள்
கடந்த 3 நாட்களாகவே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில், அங்கு ஒரு வித பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், யுஎஃப்ஓக்கள் நடமாட்டம் காணப்பட்ட பகுதிகளில் வான்வழி போக்குவரத்திலும் பாதுகாப்பு கருதி சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. மர்மப் பொருட்களின் பாகங்களை எடுத்து ஆய்வு செய்து வரும் பணிகள் தீவிரமாக நடக்கும் நிலையில், வரும் நாட்களில் இது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஈரானிடம் அணு ஆயுதத்தை விட மோசமான புதிய ஆயுதம்.. அமெரிக்க உளவுத்துறை வார்னிங்! -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications