"இனி வாலாட்டினால்.." சீனாவுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய பைடன்.. இந்தியா குறித்தும் பரபர கருத்து
வாஷிங்டன்: சீனாவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசிய அமெரிக்க அதிபர் பைடன், இந்தியா உடனான உறவு குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
உலகின் இரு பெரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் என்றால் அது அமெரிக்காவும் சீனாவும் தான். இந்த இரு நாடுகளுக்கும் இடையே பல காலமாக மோதல் போக்கு நிலவி வருவது அனைவருக்கும் தெரியும்., அதிலும் டிரம்ப் அதிபராக இருந்த போது அவர் சீனாவை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதேநேரம் பைடன் அதிபராக வந்த பிறகு விமர்சனங்கள் குறைந்தன. சீனாவுக்கு எதிரான விமர்சனங்கள் குறைந்தாலும் சீனா உடன் அமெரிக்காவுக்கு ஒரு மோதல் போக்கே நிலவி வந்தது.
பைடன் பேச்சு: இதற்கிடையே சீனாவின் நியாயமற்ற பொருளாதார நடைமுறைக்கு அமெரிக்கா இப்போது வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தைவான் கடல் பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ள அமெரிக்கா இந்தியா போன்ற நட்பு நாடுகளுடன் அதன் உறவுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இந்தாண்டு அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், அதற்கு முன்பாக தனது கடைசி ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையை அதிபர் பைடன் வாசித்தார். ஸ்டேட் ஆஃப் யூனியன் உரை என்பது ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் அமெரிக்க அதிபர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாசிக்கும் உரையாகும். நம்ம ஊரில் எப்படி நாடாளுமன்றம் தொடங்கும் போது குடியரசுத் தலைவர் உரையை வாசிப்பாரோ அதேபோல அங்கே அதிபராக இருக்கும் நபர் இந்த ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையை வாசிப்பார்.
மோதலை விரும்பவில்லை: சீனாவைக் கடுமையாகத் தனது உரையில் விமர்சித்திருந்த அதிபர் பைடன், அதேநேரம் சீனாவுடன் அமெரிக்கா போட்டியை விரும்பினாலும் மோதலை விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த 21ஆம் நூற்றாண்டில் சீனா கடும் போட்டியைக் கொடுக்கும் நிலையில், அதைச் சமாளித்து உலகில் வெற்றிகரமான நாடகம் தொடர அமெரிக்கா வலுவாகவே இருப்பதாக பைடன் தெரிவித்தார்.
இந்தியா உடனான உறவு: இது தொடர்பாக பைடன் மேலும் கூறுகையில், "நாங்கள் சீனாவின் நியாயமற்ற பொருளாதார நடைமுறைக்கு எதிராக நிற்கிறோம், தைவான் கடல் முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படுத்த நாங்கள் தேவையான நடவடிக்கை எடுக்கத் துணை நிற்போம். மேலும், எங்கள் நட்பு நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தெற்கு மற்றும் கொரியா ஆகிய நாடுகளுடனான உறவுக்கு புத்துயிர் அளிக்கப் போகிறோம்.
எதிர்க்கட்சியினர் பல ஆண்டுகளாகச் சீனா வளர்ந்து வருகிறது.. அமெரிக்கா வீழ்ந்து வருகிறது எனத் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். உண்மையில் இதற்கு நேர் மாறாகவே நடந்து வருகிறது. அமெரிக்கா புதிய உச்சத்தைத் தொடும் வகையில் வளர்ந்தே வருகிறது. அமெரிக்கா உலகின் சிறந்த பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது.
அமெரிக்கா வளர்க்கிறது: நான் பதவிக்கு வந்ததிலிருந்து, நமது ஜிடிபி உயர்ந்தே வந்துள்ளது. மேலும் சீனாவுடனான நமது வர்த்தகப் பற்றாக்குறை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரியளவில் குறைந்துள்ளது. நமது நாட்டின் அதிநவீன ராணுவ தொழில்நுட்பங்களைச் சீனா தனது ஆயுதங்களில் பயன்படுத்தாமல் இருப்பதை நான் உறுதி செய்துள்ளேன். எனக்கு முன்னால் அதிபராக இருந்தவர் (டிரம்ப்) வெறுமன சீனா குறித்து கடுமையாகப் பேசிக் கொண்டு மட்டுமே இருந்தார்.
ஆனால், அவர் சீனாவைத் தடுக்க எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆனால், நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். 21 ஆம் நூற்றாண்டுக்கான போட்டியில் சீனா அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி அவர்களை வெல்லும் நிலையில் தான் அமெரிக்கா இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications