"ரொம்பவே ஆபத்து.. ஹமாஸ், புதின் இரண்டும் ஒன்று தான்.." அதிர வைத்த பைடன்.. கவனிக்கும் உலக நாடுகள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இஸ்ரேல் ஹமாஸ் படைகளுக்கு இடையேயான யுத்தம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சில முக்கியமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைக்கு இடையே கடந்த பல நாட்களாகப் போர் தொடர்ந்து நடந்து வருகிறது. முதலில் இஸ்ரேல் படை திடீரென அத்துமீறித் தாக்குதல் நடத்திய நிலையில், அதில் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரேலும் இறங்கியுள்ளது.

 Why US President Biden compares Hamas and Putin and place them in same plate

இப்படி இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் அங்கே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேரடியாகவே இஸ்ரேல் சென்று தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்.

ஜோ பைடன்: இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சில அதிர வைக்கும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.. ஹமாஸ் மற்றும் ரஷ்யா என இரண்டும் ஜனநாயகத்தை அழிக்கத் தயாராக இருக்கும் சக்திகள் என விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "ஹமாஸ் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் என இருவருமே நமக்கு வெவ்வேறு அச்சுறுத்தல்களைத் தருகிறார்கள்.. ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையே ஒற்றுமை இருக்கிறது. அதாவது இருவரும் அண்டை நாடுகளை முற்றிலுமாக அழிக்க விரும்புகிறார்கள்.

ஒரு பெரிய தேசம் தனது அண்டை நாடுகளைப் பாகுபாட்டுடன் நடத்துவதை ஏற்கவே முடியாது. ஹமாஸ் போன்ற பயங்கரவாதிகளும், புதின் போன்ற கொடுங்கோலர்களையும் வெற்றி பெற விட முடியாது. வெல்ல விடவும் மாட்டோம்.. அவர்கள் வெல்வதை நாங்கள் நிச்சயம் அனுமதிக்க மாட்டோம்.

 Why US President Biden compares Hamas and Putin and place them in same plate

பாதுகாப்பை உறுதி செய்ய: உக்ரைன் மற்றும் இஸ்ரேலுக்கு உதவுவதற்கு மிகப் பெரிய நிதியுதவி தேவை. அதற்கு ஒப்புதல் அளிக்குமாறு நாடாளுமன்றத்தைக் கேட்கிறேன். இது சர்வதேச அளவில் பாதுகாப்பான உலகம் அமையவும் அமெரிக்காவின் எதிர்காலத்திற்குமான முதலீடாகும். இது ஒரு புத்திசாலித்தனமான முதலீடாக இருக்கும்.. இது பல தலைமுறைகளுக்கு அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்யப் போகிறது.

அமெரிக்கத் தலைமைதான் உலகை ஒன்றாக வைத்திருக்கிறது. அமெரிக்கா சர்வதேச அளவில் ஏற்படுத்தும் கூட்டணிகள் அமெரிக்காவைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. அமெரிக்காவின் கொள்கைகள் தான் மற்ற நாடுகள் நம்முடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கக் காரணமாக இருக்கிறது.. அமெரிக்கா தான் உலகிற்கு ஒரு கலங்கரை விளக்கமாக உள்ளது. எப்போதும் அமெரிக்காவே கலங்கரை விளக்கமாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

பைடன்: அமெரிக்காவில் அடுத்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கு பைடன் ரெடியாகி வருகிறார். அமெரிக்காவில் உள்ள யூதர்கள் மற்றும் போரைக் கடுமையாக எதிர்க்கும் மக்களைக் கவரும் வகையிலேயே அமெரிக்க அதிபர் பைடன் சமீபத்தில் நேரடியாக இஸ்ரேலுக்குச் சென்று திரும்பினார். அமெரிக்கா காலங்காலமாக இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்து வருகிறது. அதை பைடனும் உறுதி செய்துள்ளார்.

 Why US President Biden compares Hamas and Putin and place them in same plate

ஹமாஸ் போர், ரஷ்யா படையெடுப்பு ஆகிய விவகாரங்களில் இரு தரப்பிற்கும் உதவ 100 பில்லியன் டாலர் உதவி தொகுப்பை அமெரிக்கா வழங்க உள்ளது. இதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் அனுமதி தர வேண்டும் என்றே பைடன் கோரியிருந்தார். அமெரிக்காவுக்கு வெளியே நடக்கும் இந்த இரு மோதல்களைச் சுமுகமாக முடிப்பதன் மூலம் அமெரிக்காவைப் பாதுகாக்க முடியும் என்பது பைடன் கருத்தாகும்.

குறைவு: இருப்பினும், உலகெங்கும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அமெரிக்காவிலும் பொருளாதார மந்த நிலை ஏற்படுமோ என அஞ்சப்படுகிறது. இந்த நேரத்தில் இவ்வளவு பெரிய உதவி தொகுப்பிற்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புகள் குறைவு என்றே தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+