டிரம்பிடம் சரணடைந்த விவேக் ராமசாமி! ஓ இதுதான் மேட்டரா! அதிபர் ரேஸில் இருந்து விலக என்ன காரணம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி நேற்று அறிவித்தார். இதற்கு என்ன காரணம்.. அவர் அதிபர் தேர்தல் ரேஸில் இருந்து விலக என்ன கரணம் என்பதைப் பார்க்கலாம்.
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கே அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வே ரொம்ப சுவாரசியமாக இருக்கும். அங்கே குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் மட்டுமே பிரதானமாக இருக்கிறது.

இரு கட்சிகள் சார்பிலும் போட்டியிடப் பலரும் விருப்பம் தெரிவிப்பார்கள். அவர்களிடையே உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வேட்பாளர் தேர்வு நடக்கும். மேலும், ஒருவரால் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும்.
அதிபர் தேர்தல்: இந்த முறை ஜனநாயக கட்சி சார்பில் அதிபராக இருக்கும் பைடன் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. அதேநேரம் குடியரசு கட்சி சார்பில் பலரும் ரேஸில் உள்ளனர். அதில் விவேக் ராமசாமி முக்கியமானவர் இந்திய அமெரிக்கத் தொழிலதிபரான விவேக் ராமசாமி, ஆதரவு சிறப்பாக இருந்தது. இதற்கிடையே ஐயோவாவில் நடந்த குடியரசுக் கட்சி உட்கட்சி தேர்தலில் 4ஆவது இடத்தை பிடித்த நிலையில், அவர் குடியரசு கட்சி ரேஸில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
விவேக் ராமசாமி அதிபர் ரேஸில் இருந்து விலகிய போது, "அடுத்த அதிபராக நான் வருவதற்கு எந்த வழியும் இல்லை" என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும், இந்த அதிபர் தேர்தலில் டிரம்பை அதிபராக்குவதே இலக்கு என சொல்லி, டிரம்பை நேரடியாக சந்தித்து ஆதரவும் தெரிவித்துள்ளார்.
குடியரசு கட்சி: எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடப் பலரும் விருப்பம் தெரிவித்து இருந்தனர். அவர்களுக்கு இந்த ஐயோவா உட்கட்சி தேர்தல் முக்கிய சோதனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த உட்கட்சி தேர்தலில் டிரம்ப் முதலிடம் பிடித்தார். அதேநேரம் ரான் டிசாண்டிஸ், நிக்கி ஹேலி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நிலையில், விவேக் ராமசாமி கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
இது குறித்து விவேக் ராமசாமி கூறுகையில், "நான் ஒவ்வொரு வழியையும் ஆய்வு செய்தேன். இன்றிரவு நான் எதிர்பார்த்த தேர்தல் முடிவு எங்களுக்குக் கிடைக்கவில்லை. இதனால் இந்த அதிபர் தேர்தல் பிரச்சாரத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறோம்" என்றார். அவர் தனது எக்ஸ் பக்கத்திலும் இதே கருத்தைக் கூறியிருந்தார். மேலும், டிரம்பை அடுத்த அதிபராக்க வேலை செய்வோம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
என்ன சொன்னார்: இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "எனது முழுப் பிரச்சாரமும் உண்மையை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும் எங்கள் இலக்கை எங்களால் இன்றிரவு அடைய முடியவில்லை. அமெரிக்காவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒருவர் அதிபராக வேண்டும். மக்கள் தங்களுக்கு யார் வேண்டும் என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட்டனர். இன்றிரவுடன் நான் எனது பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்கிறேன். அடுத்து அதிபராக டிரம்பை ஆக்க நாங்கள் தேவையான நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
என்ன காரணம்: விவேக் ராமசாமி அதிபர் தேர்தலுக்கான ரேஸில் இருந்து திடீரென விலகியது ஏன் என்பது குறித்துப் பார்க்கலாம். அதாவது விவேக் ராமசாமி அப்படியே டிரம்ப் பாணியில் தான் பிரச்சாரம் செய்து வருகிறார். டிரம்ப் சொல்வது போல அமெரிக்காவே முதலில்.. புலம்பெயர்வைத் தடுக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாகப் பேசி வருகிறார். அவர் டிரம்பை போலவே பேசுவது தான் அவருக்குச் சிக்கல்.
இப்போது டிரம்ப் களத்தில் இருக்கும் நிலையில், அவரை தாண்டி விவேக் ராமசாமிக்கு வாக்களிக்க எந்தவொரு காரணமும் இல்லை. மேலும், அவர் வெள்ளை இனத்தைச் சேர்ந்தவராக இல்லாமல் இருப்பது ஒரு மைனஸ்.. இவை எல்லாம் சேர்த்து விவேக் ராமசாமியை கீழே தள்ளிவிட்டது. இதுவே, அதிபர் தேர்தல் ரேஸில் இருந்து விவேக் ராமசாமி விலகக் காரணமாக இருக்கிறது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications