ஐயோ! அப்படியே நடக்குதே.. "அணு ஆயுத பேரழிவு.." அன்றே கணித்த பாபா வாங்கா.. காரணமே "புதின்" தான்
வாஷிங்டன்: பல நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்திருந்த பாபா வாங்கா அணு ஆயுத பேரழிவு நடக்கும் எனக் கணித்திருந்த நிலையில், இப்போது அவர் சொன்னது அப்படியே நடக்க ஆரம்பித்துள்ளதாக நெட்டிசன்கள் பதறுகிறார்கள்.
வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே அறியவே அனைவரும் விரும்புவார்கள். அப்படிப் பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே வரும் காலத்தில் என்ன நடக்கும் எனத் துல்லியமாகக் கணித்துச் சொன்னவர் பாபா வாங்கா.

இவரது இயற்பெயர் வாங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா.. 1911 முதல் 1996 வரை பல்கேரியா நாட்டில் வாழ்ந்த இவர், வரும் கால நிகழ்வுகளை அப்போதே துல்லியமாகக் கணித்தவர். இவரது பல கணிப்புகள் அப்படியே உண்மையாக நடந்துள்ளன.
பாபா வாங்காவுக்கு 12 வயதில் கண் பார்வை பறிபோனது. அவர் வசித்த பகுதியில் தாக்கிய புயலால் கண் பார்வை பறிபோன நிலையில், அதன் பின்னரே அவரால் எதிர்காலத்தைப் பார்க்க முடிந்ததாம். இவர் சொன்ன பல விஷயங்கள் அப்படியே நடந்துள்ளன. அதுவும் அவை எல்லாம் சின்ன சின்ன விஷயங்கள் இல்லை. இரட்டை கோபுர தாக்குதல் தொடங்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது, செர்னோபில் பேரழிவு, இளவரசி டயானா மரணம், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி எனப் பல விஷயங்கள் அப்படியே நடந்துள்ளது.

இவரது கணிப்புகள் 80-85% வரை அப்படியே நடந்துள்ளன. இவர் இப்படிப் பல கணிப்புகளை வரும் 5079 வரை மேற்கொண்டிருக்கிறார். 5079இல் உலகம் அழியும் என இவர் கணித்துள்ளதால், அத்துடன் கணிப்புகளை நிறுத்திவிட்டார். இதற்கிடையே இவர் இந்தாண்டு கணித்த ஒரு மோசமான விஷயம் அப்படியே நடக்க ஆரம்பித்துள்ளது. அதாவது 2023இல் இந்தாண்டு இறுதிக்குள் ஒரு அணுசக்தி பேரழிவு ஏற்படும் என்று கணித்திருந்தார்.
அணுசக்தி பேரழிவைத் தொடர்ந்து சர்வதேச அளவில் அடுத்த மிகப் பெரிய பிரச்சினையும் ஏற்படும். அணுசக்தி பேரழிவு ஏற்படும்பட்சத்தில் அது குறிப்பிட்ட நாடுகளை மட்டும் பாதிக்காது. மேலும், அதன் பாதிப்பும் ஒரு தலைமுறையுடன் நிற்காது. இதற்கு நமக்கு ஜப்பான் நாடே மிகச் சிறந்த உதாரணம். இவரது இந்தக் கணிப்பு அப்படியே நடக்கத் தொடங்கியுள்ளதால் அச்சத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள் நெட்டிசன்கள். எது எப்படி எனக் கேட்கிறீர்களா..
உக்ரைன் போரில் ரஷ்யாவால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. இதனால் சில மாதங்களாகவே அவர்கள் திணறி வருகின்றனர். இந்த உக்ரைன் போரில் ரஷ்யா சிறிய அளவு அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாகப் பல மாதங்களாகக் கூறப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் பெலராஸ் நாட்டில் ரஷ்யா தனது அணு ஆயுதங்களை நிறுத்தியுள்ளது. இது தொடக்கம் தான் என்றும் இன்னும் பல அணு ஆயுதங்களை ரஷ்யா வழங்கும் எனக் கூறப்படுகிறது.
உக்ரைன் நாட்டிற்கு உலகின் டாப் நாடுகள் தொடர்ந்து உதவி செய்து வருகிறது. ரஷ்யா போன்ற ஒரு வலுவான நாட்டிற்கு எதிராக உக்ரைன் இத்தனை காலம் போரிட இந்த ஆயுதங்களே காரணம். உக்ரைனுக்கு மேற்குலக நாடுகள் ஆயுதங்கள் வழங்கும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே ரஷ்யா இந்த அணு ஆயுதங்களை நிறுத்தியுள்ளது.

அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் உலக நாடுகள் தலையிட வாய்ப்பு இருப்பதால் ரஷ்யா இதைப் பயன்படுத்த வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது. இருப்பினும், புதின் என்ன நினைக்கிறார் என்பதைக் கணிப்பது மிகக் கடினம். ஏனென்றால் உக்ரைன் மீது முழு வீச்சில் போரை ஆரம்பிக்க மாட்டார் என்றே பலரும் கூறினர். அதையெல்லாம் பொய்யாக்கும் வகையில் புதின் போரை ஆரம்பித்தார். எனவே, அணு ஆயுத தாக்குதலுக்கான வாய்ப்பை முற்றிலுமாக நீக்கிவிட முடியாது.
பாபா வாங்காவும் கூட இந்தாண்டு இறுதிக்குள் அணு ஆயுத தாக்குதல் நடக்கலாம் எனக் கணித்துள்ள நிலையில், பலரும் அச்சத்தில் இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications