வாட்ஸ்அப் க்ரூப்பிற்குள் புகுந்த மெட்டா AI.. நாம் அனுப்பும் எல்லா மெசேஜ்களையும் படிக்குமா? பரபர

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: வாட்ஸ்அப் தளத்தில் மெட்டா ஏஐ மாடலை அந்நிறுவனம் அறிமுகப்படுத்திய நிலையில், இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரம் வாட்ஸ்அப் க்ரூப்களிலும் மெட்டா ஏஐ மாடலை பயன்படுத்தலாம் என்பது பலருக்கும் தனியுரிமை சார்ந்த கேள்விகளை எழுப்பியுள்ளது. க்ரூப்பில் நாம் அனுப்பும் அனைத்து மெசேஜ்களையும் மெட்டா ஏஐ படிக்குமா.. இது எப்படிச் செயல்படும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

இப்போது உலகமே முழுக்க முழுக்க ஏஐ வசமாகி வருகிறது. சாட் ஜிபிடிக்கு போட்டியாகப் பல நிறுவனங்களுக்கும் ஏஐ வசதிகளைக் கொண்டு வருகின்றன. அதன்படி மெட்டா நிறுவனமும் தனது ஏஐ மாடலை வாட்ஸ்அப் தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ai Whatsapp artificial intelligence

க்ரூப் சாட்: தனிப்பட்ட சாட்டில் இந்த மெட்டா ஏஐயை பயன்படுத்துவது ரொம்பவே ஈஸி.. நமது வாட்ஸ்அப் செயலியில் கீழே வலது பக்கம் நீல நிறத்தில் ஒரு வட்டம் தெரியும். அதை கிளிக் செய்தால் போதும். மெட்டா ஏஐ உடனான சாட் ஓபன் ஆகும், அதில் கண்டிஷன்களை ஓகே சொன்னால் போதும்.. அதன் பிறகு மற்றவர்களுடன் சாட் செய்வது போல நார்மலாக சாட் செய்யலாம்.. மெட்டா ஏஐ அதற்கு பதில் அளிக்கும்.

இதற்கிடையே மெட்டா ஏஐ வசதி தனிப்பட்ட சாட் மட்டுமின்றி க்ரூப் சாட்களிலும் இருக்கிறது. எது க்ரூப் சாட்டிலா.. இந்த வசதியை எப்படிப் பயன்படுத்த வேண்டும்.. க்ரூப்பில் வரும் எல்லா மெசேஜ்களையும் மெட்டா ஏஐ படிக்குமா எனப் பல சந்தேகங்கள் வரும்.. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.

எப்படிப் பயன்படுத்த வேண்டும்: முதலில் வாட்ஸ்அப் க்ரூப்பில் மெட்டா ஏஐ எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.. நீங்கள் எந்த க்ரூப்பில் மெட்டா ஏஐ பயன்படுத்த வேண்டுமோ.. அதை ஓபன் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. மெசேஜில் @ என்பதை டைப் செய்யுங்கள். அதை டைப் செய்த உடன் வழக்கமாக க்ரூப்பில் இருக்கும் நபர்களின் பெயர்கள் வரும். இப்போது அதற்கு மேலே மெட்டா ஏஐ என்பது இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள். முதல்முறை கிளிக் செய்த உடன் பாலிசி எல்லாம் ஓகேவா என கேட்கும். அதை ஓகே கொடுத்தால் போதும் அவ்வளவுதான்.

அதன் பிறகு நீங்கள் என்ன கேட்க வேண்டுமா.. அதை வழக்கம் போல டைப் செய்து கேட்கலாம்.. ஆனால் அந்த மெசேஜ்ஜில் @ கிளிக் செய்து மெட்டாவை டேக் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அதற்கான பதிலை மெட்டா அளிக்கும். அதேபோல மெட்டா ஏஐ மாடலுக்கு ரிப்ளை செய்ய வேண்டும் என நினைத்தால்.. வழக்கமாக ரிப்ளை செய்வது போலக் குறிப்பிட்ட மெசேஜை வலது புறம் ஸ்வைப் செய்யுங்கள் போதும். தானாகவே அது மெட்டா ஏஐ-க்கு டேக் ஆகிவிடும். அப்போது நீங்கள் அனுப்பும் ரிப்ளையை படித்து அது பதில் அளிக்கும்.

படிக்குமா: அதேநேரம் இதுபோல க்ரூப்பில் கூட மெட்டா ஏஐ இருப்பது பலருக்கும் தனியுரிமை சார்ந்த கேள்விகளை எழுப்பலாம்.. தனிப்பட்ட சாட் என்றால் கூட ஓகே க்ரூப் சாட் என்றால் நாம் அனுப்பும் அனைத்து மெசேஜ்களையும் அது படிக்குமா என்ற கேள்வி பலருக்கும் வரும்.

பலரும் இது குறித்து கேள்விகளை எழுப்புவார்கள் என்பதைத் தெரிந்தே மெட்டா நிறுவனம் இதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளது. அதாவது க்ரூப் மெசேஜ் அனைத்தையும் மெட்டா ஏஐ மாடலால் படிக்க முடியாது. எந்த மெசேஜ்ஜை மெட்டாவுக்கு @ கொடுத்து டேக் செய்கிறோமோ, அதை மட்டுமே படிக்க முடியும். டேக் செய்யாமல் அனுப்பப்படும் மற்ற மெசேஜ்களை மெட்டா ஏஐ மாடலால் படிக்கவே முடியாது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், வாட்ஸ் அப் நிறுவனம் எப்போதும் மெசேஜ் மற்றும் கால்களுக்கு என்ட்-டு-என்ட் என்க்ரிப்ட் வழங்குவதால்.. மற்ற மெசேஜ்களை வாட்ஸ்அப் அல்லது மெட்டா நிறுவனத்தால் கூட படிக்க முடியாது என்றே கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+