5 பேரை பலி வாங்கிய டைட்டன் நீர் மூழ்கி கப்பல்.. தி ஓசன் கேட் மீது கொலை வழக்கு பாயுமா?
வாஷிங்டன்: டைட்டன் நீர் மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து 5 பேர் மரணமடைந்த நிலையில் தி ஓசன் கேட் நிறுவனத்திற்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கனடா நாட்டின் அட்லாண்டிக் கடலில் 1912 ஆம் ஆண்டு பயணிகளுடன் சென்று கொண்டிருந்த டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் 1200 பேர் இறந்துவிட்டனர். மேலும் பலர் மீட்பு படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து டைட்டானிக் என்ற படம் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. இந்த படத்தை பார்த்தாலே நிஜ டைட்டானிக் கப்பலின் விபத்து குறித்து ஒரு ஸ்கெட்ச்சை நம்மால் வரைந்து கொள்ள இயலும்.
இந்த டைட்டானிக் கப்பல் 12,500 அடி ஆழத்தில் கிடக்கிறது. இந்த கப்பலை மீட்பதில் சில சட்ட சிக்கல்களும் பண விரயங்களும் இருக்கின்றன. மேலும் இந்த கப்பலை மீட்பது என்பது ஆபத்தான ஒன்று என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த கப்பலை ஆய்வு செய்யும் பணியில் தி ஓசன் கேட் என்ற நிறுவனம் இறங்கியுள்ளது.
இது பைலட்டுடன் சேர்த்து 5 பேர் அமரக் கூடிய ஒரு நீர் மூழ்கி கப்பலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்தது. இந்த நீர் மூழ்கி கப்பலில் இதுவரை 48 பேர் பயணம் செய்து டைட்டானிக் கப்பலை பார்த்துவிட்டு வந்துள்ளனர். அந்த வகையில் கடந்த 18ஆம் தேதி 5 பேர் கொண்ட குழு இந்த கப்பலில் பயணம் செய்தது.
இந்த கப்பல் புறப்பட்ட 1.45 மணி நேரத்தில் இதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து இந்த கப்பலை தேடும் பணியில் அமெரிக்க கடலோர காவல் படை ஈடுபட்டது. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று நீர் மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்களை கடலோர படையினர் கண்டுபிடித்தனர். எனவே இந்த கப்பல் அதிக அழுத்தம் காரணமாக வெடித்து சிதறியிருக்கலாம் என தெரிகிறது.
இந்த கப்பலில் பயணம் செய்த 5 பேரும் இறந்திருக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களின் உடல்களை மீட்பது என்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த கப்பல் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதாவது தவறான மரணத்தை ஏற்படுத்துதல், கவனக் குறைவு போன்ற வழக்குகள் இந்த ஓசன் கேட் நிறுவனத்திற்கு எதிராக போடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. டைட்டான் நீர் மூழ்கி கப்பலில் பயணம் செய்வது அபாயம் என்று குறிப்பிட்டு அதில் பயணிகளிடம் அந்த நிறுவனம் கையெழுத்து பெற்றுக் கொண்டது. இதனால் பயணிகள் சொந்த ரிஸ்க் எடுத்து சென்றுள்ளனர். எனவே அந்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கும்.
-
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
வீட்டிலிருந்தே வேலை.. IT ஊழியர்களுக்கு உடனே WFH! வல்லுனர் பரிந்துரை! பெட்ரோல் தட்டுப்பாடு எதிரொலி -
ஒரே வாரத்தில்.. 28% க்கும் மேல் வளர்ச்சி அடைந்த அதானி டோட்டல் கேஸ்.. சர்ரென உயர்வு! பின்னணி என்ன? -
சமையல் எரிவாயு விலை உயர்வு.. LPG உயர்விற்கு பின் உள்ள உண்மையான காரணம் என்ன? - முழு பின்னணி -
இரவு 2 மணி.. நீண்ட வரிசை.. சென்னை வீதியில் ஒரு ‘பெட்ரோல்’ யுத்தம்! கதிகலங்க வைக்கும் நேரடி அனுபவம் -
பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு வந்தால்.. செல்போன் டவர் கூட எடுக்காது? உண்மை என்ன? அதிர்ச்சி பின்னணி -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
மோடி போனில் கேட்ட ரூட்.. நோ சொன்ன ஈரான்! 'சிக்கலில் இந்தியா'.. அந்த போன் காலில் பேசியது என்ன? -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல்












Click it and Unblock the Notifications