வானத்தில் "முத்தம்.." அப்படியே கிட்ட வந்து.. வியாழன், வீனஸ் கிரகங்களின் அதிசயம்! வியந்த மக்கள்
மிகவும் அரிய நிகழ்வாக இரு கிரகங்கள் மிக அருகே வந்ததை போன்ற படம் டிரெண்டாகி வருகிறது.
வாஷிங்டன்: மிக மிக அரிய நிகழ்வாக வானத்தில் பல லட்சம் கிமீ தொலைவில் இருக்கும் இருக்கும் இரண்டு கிரகங்கள் அருகருகே இருப்பது போலத் தோன்றியது. இந்த படங்களை நெட்டிசனக்ள் பகிர்ந்து வருகின்றனர்.
நமது சூரியக் குடும்பத்தில் சூரியனைச் சுற்றி மற்ற கிரகங்கள் சுற்றி வருவது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு சுற்று வட்டப் பாதையில் சென்று கொண்டு இருக்கிறது.
இரு கிரகங்களுக்கும் இடையே பல லட்சம் கிமீ தொலைவு இருக்கிறது. இருப்பினும், நாம் கீழே பூமியில் இருந்து பார்க்கும் போது சில நேரங்களில் அவை அருகருகே இருப்பது போல இருக்கும்.

இரண்டு கிரகங்கள்
அப்படியொரு அதிய நிகழ்வு தான் இப்போது நடந்துள்ளது. மிக மிக அரிய நிகழ்வாக இரு கிரகங்கள் இப்போது அருகருகே வந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வியாழன் மற்றும் வீனஸ் ஆகிய பிரகாசமான கிரகங்கள் வானத்தில் அருகருகே ஒன்றாகத் தோன்றியுள்ளன. கீழே நாம் பூமியில் இருந்து பார்க்கும் போது, இரண்டு கிரகங்களுக்கும் இடையே ஒரு விரல் அளவுக்கு மட்டுமே தூரம் இருந்தது. ஆனால், உண்மையில் அப்போது இரு கிரகங்களுக்கும் இடையே பல ஆயிரம் மைல் தொலைவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் எவ்வளவு தூரம்
அதாவது பூமிக்கும் சூரியனுக்கும் இருக்கும் தொலைவை விட இந்த இரு கிரகங்களுக்கும் இடையே இருக்கும் தொலைவு நான்கு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பிப்ரவரி மாதம் முழுக்க இரண்டு கிரகங்களும் சந்திரனுடன் இணைந்தே இருந்தன. இரு கிரகங்களும் நெருக்கமாகவே காணப்பட்டது. இரண்டு கிரகங்களும் இப்படி ஒரே இடத்தில் அருகருகே காணப்படும் நிகழ்வு அடிக்கடி நிகழும் என்று நாசா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓவர்டேக் செய்த கிரகம்
இந்த இரண்டு கிரகங்களும் சுமாராக ஒரு பரப்பில் (plane) சூரியனைச் சுற்றி வருகின்றன.. இதன் காரணமாகவே வானத்தில் நாம் பார்க்கும் போது அடிக்கடி இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அவை இரண்டும் சூரியனைச் சுற்றி வரும் நிலையில், சமீபத்தில் வீனஸ் வியாழனைக் கடந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து அமெரிக்கன் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரியின் வானியலாளரான ஜாக்கி ஃபஹெர்டி கூறுகையில், "சூரியனுக்கு அருகே இருக்கும் கிரகங்கள் தொலைவில் இருக்கும் கிரகங்களைக் காட்டிலும் வேகமாக நகரும். இதனால் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தை மின்னல் வேகத்தில் ஓவர்டேக் செய்வது போல இருக்கும்" என்றார்.

ஏன் இப்படி தெரிகிறது
பூமியில் இருந்து பார்க்கும் போது, இரு கிரகங்களும் 0.5 டிகிரி இடைவெளியில் இருப்பது போலத் தோன்றின. அதாவது இரு கோள்களும் வானத்தில் ஒரு விரலுக்கும் குறைவான இடைவெளியில் இருப்பது போல இருந்தது. கடந்த இரு நாட்களாகப் பூமியில் பல இடங்களில் இது வெறும் கண்ணிலேயே பார்த்தாலே நன்கு தெரிந்தது. நேற்று அதிகாலை இந்த இரண்டு பிரகாசமான கிரகங்களும் வானத்தில் கடந்து சென்றன. அதேபோல நேற்று வியாழன் இரவும் இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று நெருக்கமாகத் தோன்றியது.

நட்சத்திரங்கள்
இதையும் பல இடங்களில் மக்களால் பார்க்க முடிந்தது. முதலில் வானத்தைப் பார்த்தவர்கள் ஏதோ இரு நட்சத்திரங்கள் என்றே நினைத்தனர். இருப்பினும் வழக்கத்தை விட அவை பெரிதாகவும்.. ஒரு கிரகத்தை மற்றொன்று ஓவர்டேக் செய்யும் வகையிலும் இந்த நிகழ்வு நடந்தது. இந்த அரிய நிகழ்வைப் பலரும் படம் பிடித்து அதை இணையத்திலும் பகிர்ந்தனர். இரு கிரகங்களும் ஒன்றாக இருக்கும் இந்த படத்தைப் பலரும் ஆர்வமாகப் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications