சாட்ஜிபிடியால் லாட்டரியில் அடித்த யோகம்.. அதிர்ஷ்ட எண்ணை கொடுத்த ”ஏஐ”.. பரிசு மழையில் நனைந்த பெண்
வாஷிங்டன்: லாட்டரியில் பலரும் தங்களுக்கு பிடித்த எண்களை தேர்வு செய்து அதற்கு பரிசு அடிக்கிறதா என காத்திருப்பார்கள். அமெரிக்காவில் பெண் ஒருவர் சாட்ஜிபிடியிடம் ஐடியா கேட்டு அது பரிந்துரை செய்த எண்ணை வாங்கியுள்ளார். இந்த எண்ணுக்கு இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம் பரிசு அடித்துள்ளது. சாட்ஜிபிடி இதையெல்லாம் கூடவா செய்கிறது என பலரும் வியப்போடு பார்த்து வருகிறார்கள்.
சினிமாக்களில் வருவது போல திடீர் அதிர்ஷ்டம் நமக்கும் அடித்துவிடாதா? என்று பகல் கனவு காணும் பலரை காண முடியும்.. அதிலும் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கிவிட்டு, பரிசு அடிக்கும் முன்பே கவுண்டமணி பட காமெடி போல, கற்பனையில் சிலர் மிதப்பதை பார்க்க முடிகிறது.

லாட்டரி டிக்கெட் விற்பனை
லாட்டரிகளை பொறுத்தவரை அது ஒரு வகை சூதாட்டம் என்றாலும் கூட உலகம் முழுக்கவே அதன் மீதான ஈர்ப்பு அதிகமாகவே உள்ளது. பல லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே மெகா பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது என தெரிந்தும் அந்த ஒருவர் நாமாக இருந்துவிட மாட்டோமா என்ற ஆசையில் எத்தனை முறை ஏமாற்றம் அடைந்தாலும் மீண்டும் மீண்டும் லாட்டரி வாங்கி ஏமாந்து போகும் பலரையும் காணலாம்.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரிகள் பிரபலமாக உள்ளது. கேரளாவிற்கு செல்லும் வெளி மாநில பயணிகள் கூட லாட்டரி டிக்கெட்டுகளை வாங்க முடியும். ஏன், ஒரு சிலர் லாட்டரி டிக்கெட் மீதான மோகத்தால் மெனக்கெட்டு கேரளா சென்று லாட்டரி வாங்கி ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்த போதிலும் அப்போதும் லாட்டரி ஆசை தீரவில்லை என சமூக வலைத்தளங்களில் புலம்புவதை பார்க்க முடிகிறது.
சாட் ஜிபிடி உதவியை கேட்ட பெண்
லாட்டரி டிக்கெட்டுகளை பொறுத்தவரை எந்த எண்ணிற்கு பரிசு அடிக்கும் என்பது யூகிப்பது கடினமானது. இதனால், சிலர் தங்கள் பிறந்த தேதி, அதிர்ஷ்ட எண் என, எதையாவது மனதில் வைத்துக்கொண்டு டிக்கெட்டுகள் வாங்குவார்கள். ஒரு சிலருக்கு இப்படி அதிர்ஷ்டம் அடித்ததாக சொல்லும் செய்திகள் வெளியாவதை கேள்வி பட்டிருக்கோம்.
ஆனால், அமெரிக்காவில் பெண் ஒருவர், சாட்ஜிபிடி உதவியால் லாட்டரியில் பரிசு வென்று இருக்கிறார். சாட்ஜிபிடி இதையெல்லாம் கூடவா செய்கிறது என வியப்போடு பார்ப்பது புரிகிறது. இதை பற்றிய விவரங்கள் வருமாறு:-
ரூ.88 லட்சம் பரிசு அடித்தது
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்தவர் டாமி கார்வே (வயது 45). இவருக்கு லாட்டரி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 1.787 பில்லியன் டாலர் தொகை கொண்ட பவர்பால் ஜாக்பாட் லாட்டரியை வாங்கியிருக்கிறார். ஆன்லைனில் லாட்டரி வாங்கிய இவர், நம்பரை செட் செய்வதற்கு, சாட்ஜிபிடியிடம் ஒரு எண்ணை கூறுமாறு கேட்டிருக்கிறார்.
சாட்ஜிபிடியும் 4 எண்களை உருவாக்கி கொடுத்துள்ளது. வழக்கம் போல இந்த லாட்டரியும் புஷ்வானமாகத்தான் போகும் என்று நினைத்த அவருக்கு $500,000 பரிசு அடித்தது. மீண்டும் லாட்டரியை விளையாடிய போது இருமடங்காக பரிசு அடித்தது. இந்திய மதிப்பில் சுமார் 88 லட்சம் பரிசாக அடித்துள்ளது. லாட்டரி அடித்ததை தன்னாலும் தனது கணவராலும் நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார் அந்த பெண்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications