6 வருஷமாக ஒரே எண்ணை லாட்டரியில் வாங்கிய பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி! இப்போ கோடிக்கு அதிபதி
வாஷிங்டன்: 6 வருஷமாக லாட்டரி டிக்கெட் வாங்கிய பெண்ணுக்கு தற்போது அதிர்ஷ்டம் அடித்துள்ளது. தன் தங்கை கொடுத்த ஐடியா படி அந்த பெண் கடந்த 6 வருடங்களாக ஒரே லாட்டரி டிக்கெட் எண்ணையே வாங்கி வந்துள்ளார். என்றைக்காவது ஒருநாள் அதிர்ஷ்டம் அடிக்கும் என நினைத்தவருக்கு தற்போது அதிர்ஷ்டம் கொட்டியுள்ளது. இதனால் ஒரே நாளில் கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
லாட்டரியில் யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதே தெரியாது.. பல நாட்கள் லாட்டரி வாங்கியவருக்கு ஒரு நாள் கூட அதிர்ஷ்டம் அடித்து இருக்காது. ஆனால் எதேச்சையாக லாட்டரி வாங்கியவருக்கு, திண்ணையில் இருந்தவருக்கு திடுக்கென அடித்ததாம் யோகம் என்ற பழமொழிக்கு இணங்க ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகிவிடுவார்.

6 வருஷமாக ஒரே டிக்கெட் எண்
அந்த அளவுக்கு லாட்டரியின் மூலம் ஒரு சில பணக்காரர்கள் ஆகி விடுகிறார்கள். ஒரே ஒருமுறை பரிசு அடித்தாலும் அவர்களது வாழ்க்கை மாறிவிடும் என்பதால் தொடர்ந்து லாட்டரி வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். எனினும் பலர் லாட்டரியால் பணத்தை இழந்து வாழ்க்கையை தொலைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அமெரிக்காவில் பெண் ஒருவர் கடந்த 6 வருஷமாக லாட்டரி வாங்கி வருகிறாராம். ஆனால் அந்த 6 வருஷமும் அவர் ஒரே ஒரு நடைமுறையை பின்பற்றியிருக்கிறார். அதாவது 6 வருஷமும் ஒரே லாட்டரி எண்ணையே வாங்கியிருக்கிறார். அந்த பெண்ணின் சகோதரி கொடுத்த யோசனைப்படி இவர் இப்படி லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்.
1 கோடியே 30 லட்சம் பரிசு
6 ஆண்டுகளாக அதிர்ஷ்டம் அடிக்காமல் இருந்தாலும் தற்போது அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே 30 லட்சம் பரிசாக அடித்துள்ளது. இப்போது அந்த பெண் உற்சாகத்தில் துள்ளி குதித்து வருகிறாராம். எப்படியும் அடித்துவிடும் என நம்பியதாகவும், இதற்காக என் சகோதரிக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:-
அமெரிக்காவின் கரோலினா மகாணத்தில் ஹோப் மில்ஸ் நகரைச் சேர்ந்த பெண் பார்பரா மன்ஃபோர்ட். லாட்டரி வாங்குவதில் ஆர்வம் இருந்துள்ளது. ஆனால் என்றைக்காவது ஒருநாள் பரிசு அடித்துவிட வேண்டும் என்றும் தன் தங்கையிடம் பேசி வந்தாராம். அப்போது அவரது தங்கை ஒரு ஐடியா கொடுத்துள்ளார். அதாவது அடிக்கிறதோ இல்லையோ தொடர்ந்து நீ ஒரே நம்பரில் லாட்டரி வாங்கு அக்கா என கூறியுள்ளார்.
தங்கை கொடுத்த ஐடியா
தங்கையில் ஐடியா இவருக்கு பிடித்து போயுள்ளது. இதனால் கடந்த 6 வருஷமாக லாட்டரியில் ஒரே எண்ணையே வாங்கி வந்துள்ளார். 6 வருஷம் ஆகிவிட்டு என்பதற்காக இவர் அந்த ஐடியாவே மாற்றவில்லை. தொடர்ந்து அதே எண்ணில் வாங்கியிருக்கிறார். இந்த நிலையில் இரு தினஙக்ளுக்கு முன்பு அவர் தனது டிக்கெட் எண்ணை சரிபார்த்துள்ளார்.
பரிசுத் தொகையை பெற்றுக்கொண்டார்
அப்போது அந்த எண்ணுக்கு இந்திய மதிப்பில் ரூ.1.3 கோடி பரிசு அடித்துள்ளது தெரியவந்தது. இதனால் சந்தோஷத்தின் எல்லைக்கே சென்ற அவர் துள்ளி குதித்துள்ளார். கடவுளே என்னால் நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் தன் தங்கையிடமும் இதுபற்றி கூறியிருக்கிறார். ஹோப் மில்ஸ் நகரில் உள்ள லக்கி ஸ்டாப் கடையில் லெஜியன் சாலையில் தான் அந்த டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்.
நேற்று தனது பரிசுத் தொகையை பெற்றுக்கொண்டார். வரி பிடித்தம் போக மீதி உள்ள $110,616 அதாவது இந்திய மதிப்பில் 97 லட்சம் கிடைத்துள்ளது. இந்த பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்ய இருப்பதாக அந்த பெண் கூறியுள்ளார்.
-
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
அமெரிக்க தாக்குதலால் பற்றி எரிந்த கப்பல்! நடுக்கடலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக மீட்பு..திக் திக் பின்னணி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
அவசரமாக தரையிறங்கிய ஜெட் விமானம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்! ஷாக் வீடியோ! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications