உலக மக்களிடையே மீளும் நம்பிக்கை - கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 24,62,706 பேர் மீண்டனர்
உலகம் முழுவதும் ஒரே நாளில் 20,09,826 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41,99,83,847 பேராக உயர்ந்துள்ளது.
வாஷிங்டன்: உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாரிக்கப்பட்டவர்களை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் ஒரே நாளில் 20,09,826 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 24,62,706 பேர் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை தன் பிடிக்குள் வைத்துள்ளது. பல கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரும் புது புது வேரியண்ட் வைரஸ்கள் உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ், ஓமிக்ரான் என பல வைரஸ்கள் மக்களை பாதித்துள்ளன.
ஓமிக்ரான் கொரோனாவுக்கு பின்னர் உலகெங்கும் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது.

20,09,826 பேர் பாதிப்பு
உலகம் முழுவதும் ஒரே நாளில் 20,09,826 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41,99,83,847 பேராக உயர்ந்துள்ளது. 24,62,706 பேர் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மொத்தம் 34,38,21,579 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் 11,085 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் மொத்தம் 58,80,420 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்

அமெரிக்காவில் அதிகரிக்கும் மரணங்கள்
கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 97,797 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 2,080 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,707 பேர் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 496 பேர் மரணமடைந்துள்ளனர்.

பிரேசில் நாட்டில் புதிய உச்சம்
அதே போல பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 1,29,266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,129 பேர் பிரேசில் நாளில் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர்.ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 180,622 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 790 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஜெர்மனியில் 2,27,613 பேர் பாதிப்பு
பிரான்ஸ் நாட்டில் 92,345 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 287 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி நாட்டில் 57,890 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் 2,27,613 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 244 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய சூழலில் தடுப்பூசி மட்டுமே கொரோனாவில் இருந்து நம்மைக் காக்கும் ஒரே ஆயுதமாகப் பார்க்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications