Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மோடி தான் நம்பர் ஒன்".. உலகில் அதி நம்பகமான தலைவர் யார்? டாப் 5க்குள் வராத டிரம்ப்.. முழு லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உலகிலேயே அதி நம்பகமான தலைவர் யார் என்ற பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டாப் 5 இடங்களுக்குள் வராமல் 8 வது இடத்தில் உள்ளது. இந்த சர்வே முடிவு பற்றிய முழு விவரம் வருமாறு:

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு ‛மார்னிங் கன்சல்ட்' என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் என்பது பிசினஸ் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் நிறுவனமாகும். இந்நிலையில் தான் உலகில் ஒவ்வொரு நாடுகளின் தலைவர்களை மையப்படுத்தி இந்த நிறுவனம் சர்வே மேற்கொண்டது.

world-most-trusted-leader-list-pm-modi-ranked-number-1-and-donald-trump-is-not-in-the-top-5-positio

அந்த வகையில் உலகில் அதி நம்பகமான தலைவர் யார்? என்ற சர்வேயை ‛மார்னிங் கன்சல்ட்' நிறுவனம் செய்தது. ஜூலை 4ம் தேதி முதல் ஜூலை 10ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சர்வேக்கு பதிலளித்தனர்.

இந்த சர்வேயில் அனைத்து உலக தலைவர்களையும் பின்னுக்கு தள்ளி பிரதமர் மோடி முதலிடம் பிடித்தார். மோடியின் செயல்பாட்டை 75 சதவீதம் பேர் ஆதரித்தனர். 7 சதவீதம் பேர் கருத்து சொல்ல விரும்பாத நிலையில் 18 சதவீதம் பேர் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இருப்பினும் 75 சதவீதம் பேர் ஆதரவு அளித்ததன் அடிப்படையில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்தார்.

இந்த பட்டியலில் 2வது இடத்தில் தென்கொரியா அதிபர் லி ஜே மயுங் பிடித்துள்ளார். இவர் சமீபத்தில் தான் அந்த பதவியை எட்டிப்பிடித்த நிலையில் 2வது இடத்தை பிடித்துள்ளார். 3வது இடத்தில் அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலேய் பிடித்தார். 4வது இடத்தில் கனடா அதிபர் மார்க் கார்னி உள்ளார். 5வது இடத்தில் ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பென்ஸ் உள்ளார்.

6வது இடத்தில் மெக்சிகோவின் அதிபர் கிளாடியா ஷீன்பாம், 7 வது இடத்தில் ஸ்வீட்சர்லாந்தின் அதிபர் கரின் கெல்லர் - சுட்டர், 8 வது இடத்தில் டொனால்ட் டிரம்ப், 9 வது இடத்தில் போலந்து நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க், 10வது இடத்தில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதில் டொனால்ட் டிரம்பின் செயல்பாட்டுக்கு 44 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர். 6 சதவீதம் பேர் கருத்து சொல்ல விரும்பாத நிலையில் 50 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பாஜகவின் ஐடி விங்க் பிரிவின் பொறுப்பாளர் அமித் மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். இதுபற்றி அவர், ‛‛ஒரு பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களால் நேசிக்கப்பட்டு, உலகமெங்கும் இருக்கும் மில்லியன் கணக்கான மக்களால் மதிக்கப்படும் பிரதமர் நரேந்திர மோடி ‛மார்னிங் கன்சல்ட்' நடத்திய குளோபல் லீடர் அப்ரூவர் டிராக்கரில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். உலகளவில் மிகவும் மதிப்பு மற்றும் நம்பகமான தலைவராக அவர் உள்ளார்'' என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+