"இது டெக் உலக WWE.." மார்க் ஜுக்கர்பெர்க் உடன் மோதும் எலான் மஸ்க்! தீவிரமாக இறங்கும் பேஸ்புக் ஓனர்
வாஷிங்டன்: உலகின் டெக் ஜாம்பவான்களில் முக்கியமானவர்களாக இருக்கும் எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோர் கேஜ் மேட்ச்சில் சண்டையிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இப்போது சர்வதேச அளவில் மிக பெரிய சமூக வலைத்தளங்களாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் தளங்களே இருக்கிறது. இதில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் நிறுவனங்கள் மார்க் ஜுக்கர்பெர்க் கைவசம் இருக்கிறது.
அதேநேரம் ட்விட்டர் நிறுவனத்தை டோர்சி ஆரம்பித்த போதிலும், கடந்தாண்டு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியிருந்தார். அதன் பிறகு அவரும் ட்விட்டரை வளர்த்தெடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இதற்கிடையே டெக் உலகில் டாப் இடத்தில் இருக்கும் எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் இடையே கேஜ் மேட்ச் நடக்க உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இதற்காக இருவரும் தனித்தனியாக மணிக் கணக்கில் பயிற்சியும் பெற்று வருகிறார்களாம். அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆய்வாளர் லெக்ஸ், மஸ்கின் திறன்களை வெகுவாக பாராட்டினார். மஸ்கின் பலம். வேகம், திறன் சிறப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் இருவரும் தற்காப்புக் கலைகளில் பயிற்சி செய்வதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இருவரும் கேஜ் பைட்டில் சண்டையிடக் கூடாது என்றும் அப்போது தான் உலகிற்கு அதிக பயன் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அது சரி இருவரும் இப்படி கேஜ் பைட்டில் மோதிக் கொள்வதாகப் பேச்சு எங்கிருந்து வந்தது எனக் கேட்கிறீர்களா.. வாங்க அது குறித்தும் பார்க்கலாம்.

முன்னதாக, பிரேசிலிய தற்காப்புக் கலையான ஜியு ஜிட்சு என்ற கலையை பேஸ்புக் ஓனர் மார்க் ஜுக்கர்பெர்க் பயின்று வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி டிரெண்டானது. இது பலரது கவனத்தையும் ஈர்த்தது. அங்கே பயிற்சிக்குச் சென்ற இதே லெக்ஸ், பேஸ்புக் ஓனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் அந்த பயிற்சி வீடியோவை பகிர்ந்திருந்தார். இதுவே இந்த மோதலுக்குக் காரணமாக அமைந்துவிட்டது.
அதாவது ட்விட்டருக்கு போட்டியாக த்ரேட்ஸ் (Threads) என்ற சமூக வலைத்தளத்தை லான்ச் செய்ய உள்ளதாக பேஸ்புக் அறிவித்தது. அதற்குப் பதிலடி கொடுத்த மாஸ்க், யாருக்கும் எந்தவொரு ஆப்ஷனும் இல்லாமல் ஒட்டுமொத்த உலகையும் மார்க் ஜுக்கர்பெர்க் கட்டுப்படுத்த முயல்வதாக எலான் மஸ்க் விமர்சித்திருந்தார். அப்போது நெட்டிசன் ஒருவர் மார்க்கின் ஜியு ஜிட்சு வீடியோவை பகிர்ந்தார்.
Here's a highlight video of Mark Zuckerberg and I training jiu jitsu. I look forward to training with @elonmusk as well. It's inspiring to see both Elon and Mark taking on the martial arts journey. See the full video here: https://t.co/G1ubUuxILK pic.twitter.com/WsLaRiFf1o
— Lex Fridman (@lexfridman) June 25, 2023
அப்போது தான் எலான் மஸ்க் தான் மார்க் ஜுக்கர்பெர்க்குடன் கேஜ் மேட்சில் மோத ரெடியாக உள்ளதாக அறிவித்தார். எலான் மஸ்க் எப்போதுமே இப்படி விளையாட்டுத்தனமாகப் பேசக் கூடிய நபர் தான். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த சேலஞ்சிற்கு மார்கும் ஒப்புக் கொண்டார் என்பதே ஹைலைட். இடத்தை சொன்னால் மோத வருகிறேன் என மார்க் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்தச் சூழலில் தான் எலான் மஸ்க் அதிரடியாகப் பயிற்சியில் இறங்கியுள்ளார். இந்தப் போட்டி உண்மையாகவே நடக்குமா.. அப்படி நடந்தால் யார் வெல்வார்கள் என்பது குறித்து நெட்டிசன்கள் இப்போதே விவாதித்து வருகின்றனர். அதேநேரம் பொறுப்பான இடத்தில் இருக்கும் இருவர் வன்முறையை ஊக்குவிக்கக் கூடாது என்று மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications