உலகம் முழுவதும் நாளுக்கு நாள் உயரும் கொரோனா: ஒரே நாளில் 29,80,802 பேர் பாதிப்பு - 11,328 பேர் மரணம்
கொரோனாவால் உலகம் முழுவதும் ஒரே நாளில் 29,80,802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 38,50,32,477 பேராக உயர்ந்துள்ளது.
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பாதிப்பின் வேகம் உலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் ஒரே நாளில் 29,80,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 38,50,32,477 பேராக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை தன் பிடிக்குள் வைத்துள்ளது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ், ஓமிக்ரான் என பல வைரஸ்கள் மக்களை பாதித்துள்ளன. பல கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரும் புது புது வேரியண்ட் வைரஸ்கள் உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஓமிக்ரான் உடன் கொரோனா முடிந்து விடாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஓமிக்ரான் வைரஸ் பரவத் தொடங்கியதற்குப் பின்னர் உலகெங்கும் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது.

38.50 கோடி பேர் பாதிப்பு
உலகம் முழுவதும் ஒரே நாளில் 29,80,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 38,50,32,477 பேராக உயர்ந்துள்ளது. 21,76,174 பேர் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மொத்தம் 30,50,06,127 பேர் குணமடைந்துள்ளனர்.

57,17,107 பேர் மரணம்
கொரோனாவால் 11,328 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 2,398 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் மொத்தம் 5,717,107 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்து உலகம் முழுவதும் 7,43,09,243 பேர் சிகிச்சையில் உள்ளனர். 91,831 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்கா உச்சம்
கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,59,828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 2,398 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்றைய பாதிப்பை விட இன்று அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 164,593 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 991 பேர் மரணமடைந்துள்ளனர்.

பிரேசில் நாட்டில் அதிகரிப்பு
பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 1,88,552 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 946 பேர் பிரேசிலில் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். 1,56,919 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 141,883 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 678 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸ் பாதிப்பு
பிரான்ஸ் நாட்டில் கொரோனா புதிய உச்சம் தொட்டுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 3,15,363 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 276 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி நாட்டில் 118,994 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். துருக்கி நாட்டில் ஒரே நாளில் 110,682 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனி நாட்டிலும் கடந்த 24 மணி நேரத்தில் 223,322 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி செலுத்தினாலும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்கள் தப்ப முடியவில்லை.












Click it and Unblock the Notifications