ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: உலகம் முழுக்க ஒரே நாளில் 30,25,997 பேர் பாதிப்பு - 11,166 பேர் மரணம்
கொரோனாவால் உலகம் முழுவதும் ஒரே நாளில் 30,25,997 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 38,82,03,240 பேராக உயர்ந்துள்ளது.
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பாதிப்பின் வேகம் உலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் ஒரே நாளில் 30,25,997 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 38,82,03,240 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 11,166 பேர் மரணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை தன் பிடிக்குள் வைத்துள்ளது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ், ஓமிக்ரான் என பல வைரஸ்கள் மக்களை பாதித்துள்ளன. பல கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரும் புது புது வேரியண்ட் வைரஸ்கள் உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஓமிக்ரான் உடன் கொரோனா முடிந்து விடாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஓமிக்ரான் வைரஸ் பரவத் தொடங்கியதற்குப் பின்னர் உலகெங்கும் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது.

30,25,997 பேர் பாதிப்பு
உலகம் முழுவதும் ஒரே நாளில் 30,25,997 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 38,82,03,240 பேராக உயர்ந்துள்ளது. 23,59,914 பேர் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மொத்தம் 30,76,50,558 பேர் குணமடைந்துள்ளனர்.

11,166 பேர் மரணம்
கொரோனாவால் 11,166 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 2,261 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் மொத்தம் 57,29,492 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்து உலகம் முழுவதும் 7,48,23,190 பேர் சிகிச்சையில் உள்ளனர். 91,777 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்கா உச்சம்
கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 227,783 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 2,261 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்றைய பாதிப்பை விட இன்று குறைந்துள்ளது. ஒரே நாளில் 147,183 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 1,100 ஒரே நாளில் பேர் மரணமடைந்துள்ளனர். 235,100 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

பிரேசில் நாட்டில் அதிகரிப்பு
பிரேசில் நாட்டில் கொரோனா காட்டுத்தீயாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 286,050 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் 923 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். 138,477 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். ரஷ்யாவில் கொரோனா புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்155,768 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 667 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஜெர்மனியில் புது உச்சம்
ஜெர்மனி நாட்டிலும் கடந்த 24 மணி நேரத்தில் 240,218 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 274,352 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 264 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி நாட்டில் 112,691 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 414 பேர் கொரோனா தொற்று பலியாகியுள்ளனர். துருக்கி நாட்டில் ஒரே நாளில் 107,530 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி செலுத்தினாலும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்கள் தப்ப முடியவில்லை.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications