களத்திலும் வெற்றி கணிதத்திலும் வெற்றி - கோவையில் கொண்டாட தயாராகும் அதிமுக
அரசியல் வெற்றியைத் தீர்மானிப்பதில் களம் எவ்வளவு முக்கியமோ கணக்கும் அவ்வளவு முக்கியம். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி தன் திராவிட பாரம்பரிய முதிர்ச்சியை அசாத்தியமாக வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக கோவை தொகுதியில் அடடே போட வைத்திருக்கின்றன அதிமுகவின் கணக்கான தேர்தல் பணிகள்.
களம் கொள்கை ரீதியிலும் தலைவரின் உறுதித்தன்மையாலும் கட்டமைக்கப்படும். அந்தவகையில் பாஜக எதிர்ப்பு, வலிமையான விமர்சனங்கள், திமுகவை வெளுத்தெடுத்த பிரசாரம் என களத்தை தனக்கு சாதகமாக அமைத்துக்கொண்டார். அதிலும் குறிப்பாக கோவையில் மிக மிகக் கூர்மையான உத்திகள் வகுக்கப்பட்டு நேர்த்தியாக வாக்கு சேகரிப்பு செய்யப்படுகிறது.

கோவை களத்தில் அதிமுக சார்பில் சிங்கை ஜி. ராமச்சந்திரன், திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், பாஜக சார்பில் அண்ணாமலை, நாம் தமிழர் சார்பில் கலாமணி ஜெகநாதன் என நான்கு பிரதான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆனால், நேரடி போட்டி களத்தில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையில் மட்டும்தான் நடந்து வருகிறது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்வதோடு, சிறு சிறு யூட்யூப் ஊடகங்களையும் கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். ஆனால், கட்சிக் கட்டமைப்பு என்றளவில் பூத் கமிட்டிக்கான ஆட்கள் கிடைக்காமல் திணறி வருகிறார்கள் என்பதே களத்திலிருந்து கிடைக்கும் தகவல்.
திமுக தன் பலத்தைக் காட்ட எந்த எல்லைக்கும் போய் முயற்சி செய்து வருகிறது. இன்னும் கட்டுகள் நிறைய அவிழ்க்கப்படாததால் அதிருப்தியில் பணிசெய்ய மறுக்கிறார்களாம் உடன் பிறப்புகள்.

ஆனால் அதிமுகவில் இயங்குநிலை வேறாக இருக்கிறது. "நேரடியாக பூத்-வாரியாக இலக்குகள் குறி வைக்கப்பட்டு அதற்கென கணிசமான தொகையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வேலைகள் நடந்து வருகின்றன. குறிப்பாக 1636 பூத்களில் 5 வாக்குகளுக்கு ஒரு நபர் வீதம் பொறுப்பாளர்கள் நியமனம் செய்து தற்போது வரை 5 லட்சம் வாக்குகளை எங்கள் பக்கம் திருப்பியுள்ளோம். அதிமுக தொண்டர்களை சீண்டிப்பார்த்த மற்ற கட்சியினருக்கு தங்கள் பலம் என்னவென்று காட்டும் உறுதியோடு பணியாற்றி வருகிறோம்" என்று தெரிவித்தனர் அதிமுகவினர்.

மேலும் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் துடிப்பான இளைஞராகவும் தெளிவு மிக்க சிந்தனையுடனும் செயல்படக்கூடியவர் என்ற நல்லெண்ணம் பொது மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே இருக்கின்றது. சமீபத்தில் அவர் வழங்கி வரும் பேட்டிகள் கவனத்தையும் ஈர்ப்பையும் பெறும் வகையில் அமைந்துள்ளன.
கோவையின் பிரதானமான தொழில்துறையும் கூட, பாஜக வந்தால் வேண்டாத பணப்பிடுங்கல் என்று வேதனை கொள்வதை ஏராளமான இடங்களில் கேட்க முடிந்தது. நீங்களும் சில வீடியோக்களைப் பார்த்திருக்கலாம்.

மொத்தத்தில், மூன்றாம் இடத்துக்கான போட்டியை யார் வேண்டுமானாலும் போடட்டும். ஆனால், இந்த முறை கோவையில் சிங்கை ராமச்சந்திரன் வெற்றியை உறுதி செய்வதே எங்கள் நோக்கம் என்று வெற்றியை உறுதி செய்யத் துடிக்கிறது அதிமுக. நாம் பார்த்தவரையில் கோவையில் மற்ற கட்சிகளிடமும் சுணக்கம்தான் இருக்கிறது. பாஜக தட்டுத் தடுமாறி திணறிக்கொண்டிருக்கிறது.

40 தொகுதிகளில் நடைபெறும் இந்த போட்டியில் கோவையின் நிலவரம் குறித்து சமூக ஊடகங்களில் காண்பிக்கப்படும் நிலைமை, உண்மையில் இல்லை என்பதே களநிலவரம். தனது கட்டமைப்பு பலம் மற்றும் கள அரசியல் கணக்குகளால் கோவையில் முந்துகிறது அதிமுக.
-
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
எடப்பாடி பழனிசாமி போட்ட 3 கண்டிஷன்? தஞ்சையில் தினகரன் சொன்ன 1 விஷயம்.. உடைந்தது அரசியல் மர்மம் -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ் -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் கதி அதோ கதிதான்.. புட்டுபுட்டு வைத்த அதிமுக முன்னாள் நிர்வாகி -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்! -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
அமித் ஷாவின் அதிரடி 30.. மோடி-யோகியின் 11:11 வியூகம்.. மம்தா கோட்டையை தகர்க்க மெகா பிளானில் பாஜக











Click it and Unblock the Notifications