Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹேய், எப்புட்றா.. அடங்காத ஆசையால் அசிங்கப்பட்ட இளம்பெண்.. பாலாடைக்கட்டியா.. பாவம் அந்த பியூட்டிஷியன்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: "மேலைநாட்டு மோகம்" ஒரு பெண்ணை எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது தெரியுமா.. செய்யக்கூடாத காரியங்களை எல்லாம் செய்துவிட்டு, அந்த மேடம் இப்போது ஜெயிலில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்கா மிகச்சிறப்பு வாய்ந்த அறிவியல் ஆய்வுக் கூடங்களையும் பல்கலைக்கழகங்களையும் சக்திவாய்ந்த நிறுவனங்களையும் கொண்ட தேசமாகும்.

Who is this Victoriya and why did russian young woman gets 21 years jailtime

அதனால்தான், உலகெங்கும் உள்ள படித்த இளைஞர்கள் தங்களின் வளமான எதிர்காலத்திற்காக, அமெரிக்காவுக்கு செல்ல விரும்புகிறார்கள்..

லேசானதல்ல: ஆனால் அமெரிக்கா செல்வது அனைவருக்கும் எளிதான காரியமல்ல.. ஏகப்பட்ட விதிமுறைகள், மற்றும் காலதாமதம் காரணமாக, உச்சக்கட்ட விரக்திக்கு பலர் சென்றடைவதுண்டு.. அதிலும், அமெரிக்காவில் குடியுரிமை பெறுவது என்பது பெருத்த சவாலான விஷயமும்கூட.. இப்படிப்பட்ட சூழலில், அமெரிக்காவில் வேலை செய்ய ஒரு ரஷ்ய பெண் ஆசைப்பட்டுள்ளார்.. அந்த பெண்ணின் பெயர் விக்டோரியா நாசிரோவா.. ஆனால் இவருக்கு லேசில் பாஸ்போர்ட் கிடைக்கவில்லை..

Who is this Victoriya and why did russian young woman gets 21 years jailtime

அதனால் விபரீத முயற்சி ஒன்றில் இறங்கினார்.. அச்சுஅசல் தன்னை போலவே உருவம் கொண்ட பெண் எங்காவது இருக்கிறாரா? என்று தேட ஆரம்பித்தார். அப்படி தேடும்போது, தன்னை போலவே ரஷ்ய மொழி பேசும் ஓல்கா ஸ்விக் என்ற பெண் இருப்பதை கண்டுபிடித்தார்.. அவர் ஒரு பியூட்டிஷியன்.. இவரும் ரஷ்யாவை சேர்ந்தவர் என்பதால், ஒரே மொழி + கருங்கூந்தல் + முக ஜாடை + பாடிலேங்வேஜ் என அத்தனையும் பொருந்தியிருந்ததை கண்டு விக்டோரியாவே ஆச்சரியப்பட்டார்..

Who is this Victoriya and why did russian young woman gets 21 years jailtime

யார் இந்த விக்டோரியா: மேலும் அந்த பெண், அமெரிக்காவில் வேலை செய்வதற்காக அனுமதியை பெற்று, விசாவையும் வைத்திருக்கிறார் என்பதையும் விக்டோரியா தெரிந்து கொண்டார்.. இதையடுத்து, வலிய சென்று பியூட்டிசனுடன் பழகினார் விக்டோரியா.. தன்னுடைய பர்சனல் பியூட்டிஷனாகவே அவரை நியமித்துக்கொண்டார்.. இப்போது இன்னும் நெருங்கி அவருடன் பழகினார்.. இதனால் ஓல்காவின் பாஸ்போர்ட்டை திருடிவிட முடியும் என்று நம்பினார் விக்டோரியா.
இதற்காக இன்னொரு ரிஸ்க்கையும் கையிலெடுத்தார் விக்டோரியா.. அந்த பியூட்டிஷியன் நிறைய பாலாடைக்கட்டியை விரும்பி சாப்பிடுவாராம்.. இதை தெரிந்து கொண்ட விக்டோரியா, கடந்த 2016 ஆகஸ்ட் 28ம் தேதி பாலாடைகட்டியை ஓல்காவிற்கு ஆசை ஆசையாக வாங்கி தந்துள்ளார்.. ஓல்காவும் அதை விரும்பி சாப்பிட்டுள்ளார். ஆனால், அடுத்தடுத்த நாட்களில் அவருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட துவங்கியது.. ஒருகட்டத்தில், சுயநினைவையே இழந்து, வீட்டிற்குள் மயங்கி விழுந்துவிட்டார்..

இதற்கு பிறகு, மருத்துவமனையில் அனுமதிக்கும் சூழலுக்கும் ஆளானார்.. அங்கு தீவிரமான சிகிச்சை ஓல்காவுக்கு நடந்தது.. ஒருவழியாக உயிர்பிழைத்துக்கொண்டு, மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு டிஸ்சார்ஜ் ஆகி வந்துள்ளார்.. அப்போதுதான்,தனது பாஸ்போர்ட்டை காணாமல் அதிர்ந்தார்.. அத்துடன் வீட்டில் இருந்த நகைகளையும் காணவில்லையாம்.. உடனே போலீசுக்கு ஓடினார்.. விசாரணையில்தான், தன்னுடைய தோழி செய்த காரியம் வெட்டவெளிச்சமானது.. அதுமட்டுமல்ல, வீட்டிற்குள் சுயநினைவை இழந்து ஓல்கா விழுந்தபோது, அவரை சுற்றிலும் தூக்க மாத்திரைகளை கொண்டுவந்து கொட்டி உள்ளார் விக்டோரியா..

தூக்க மாத்திரை: அதாவது, ஓல்கா தற்கொலை செய்து கொண்டதாக நிரூபிப்பதற்காக, விக்டோரியவின் மாஸ்டர் பிளான் அது.. ஆனால், எந்த மாஸ்டர் பிளானும் போலீஸ் முன்பு எடுபடுமா? இந்த விஷயத்தையும் கிண்டி எடுத்துவிட்ட போலீசார், விக்டோரியாவை கைது செய்தனர்.. அமெரிக்க நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தினர்.. தண்டனையும் அறிவிக்கப்பட்டது.. என்ன தண்டனை தெரியுமா? மொத்தம் 21 வருடங்கள் சிறைத்தண்டனையாம்.. ஒரு பாஸ்போர்ட்டை திருட போய், கடைசியில், தன் வாழ்வாள் முழுவதும் கம்பி எண்ண போகிறார் விக்டாரியா.. அமெரிக்க மோகம் யாரை விட்டது???

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+