யூ டூ பவா.. படிக்காத ஜோவிகாவுக்கு சான்ஸ் கிடைக்கும்.. ஏழைகளுக்கு? மனுஷ்ய புத்திரனின் பிக்பாஸ் ரிவ்யூ
சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ள நடிகை வனிதாவின் மகள் ஜோவிகாவின் படிப்பு தொடர்பாக விசித்திரா தெரிவித்த கருத்தால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வெளியிலும் கல்வி முக்கியமா? இல்லையா? என்ற விவாதம் எழுந்து உள்ளது. இது தொடர்பாக எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் விரிவான விளக்கத்தை வழங்கி உள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது, "பிக்பாஸ் ஒரு அபத்தமான பொய்யான கருத்தை இன்று உண்மைபோல நிறுவ முயன்றது. விசித்ரா ஜோவிகாவிடம் ஒரு டிகிரி படிக்கிறது நல்லது என்று சொன்னதில் என்ன குற்றம் இருக்கிறது என்று தெரியவில்லை. அதற்கு ஜோவிகா 'படிப்பு வரலை.. படிக்காம இருக்கிறது என் உரிமை' என்று ஹிஸ்டீரிகலாக முழங்கியதையும் அதை பவா உட்பட அத்தனை இல்லவாசிகளும் ஆதரித்தையும் வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். சிலருக்கு பள்ளிப்படிப்பு சிரமமாக இருக்கலாம்.

அவர்களுக்கு எத்தனையோ மாற்றுக் கல்வி ஏற்பாடுகள் இருக்கின்றன. என் பிள்ளைகள் இருவருக்குமே முறையான கல்வி அமைப்பு பொருந்தவில்லை. ஆனால் அவர்கள் பள்ளிசாரா மாற்றுக் கல்வி அமைப்பின் மூலம் அம்மு பத்தாவதும் அப்பு பணிரெண்டாவதும் வந்துவிட்டார்கள். அம்மு படம் வரைகிறாள். அப்பு புகைப்படம் எடுக்கிறான். ஆனாலும் அவர்கள் கல்லூரிக்கு போகவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நானுமே இளமையில் பள்ளி கல்விக்கு பொருந்திபோகவில்லை. ஆனாலும் தொடர்ந்து அஞ்சல் வழியில் எம்.ஏ.வரை படித்து இரண்டாம் எம்.ஏவை நேரடியாக பல்கலைக் கழகத்தில் படித்தேன்.
அப்போது எனக்கு இரண்டு புத்தகங்கள் வெளிவந்திருந்தன. படிப்பும் பட்டமும் ஒரு உலகளாவிய ஏற்பாடு. அது ஒடுக்கப்பட்ட கல்வியறிவற்ற சமூகங்களில் இருந்து வருபவர்களின் தன்னம்பிக்கை. படிப்பு இல்லாமல் உயர்ந்தவர்கள் சிலர் இருக்கலாம். வீழ்ந்தவர்கள் கோடானு கோடிப்பேர். ஒரு நூற்றாண்டுக்கு முன் 90 சதவிகிதம் கல்வியறிவற்றிருந்த சமூகத்தை போராடி மீட்டெடுத்து மேலே கொண்டு வந்திருக்கிறோம். ஒரு குழந்தையால் ஒரு கல்வி அமைப்பில் பொருந்திப் போகமுடியவில்லை என்றால் பொருத்தமான மாற்றுக் கல்வி ஏற்பாட்டை உருவாக்கித் தரவேண்டும்.

அத்தகைய ஏற்பாடுகள் ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்றன. மாறாக " படிப்பு வரலை...படிக்காம இருக்கிறது என் உரிமை" என்பது போன்ற பேத்தல்களை ரொமான்டிசைஸ் செய்து ஆதரிப்பது பொறுப்பற்றதனம். ஜோவிகா போன்ற privilege சமூக பின்புலம் கொண்டவர்களுக்கு படிப்பு இல்லாவிட்டாலும் மாற்று வழிகள் இருக்கின்றன. ஆனால் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் பெண்களுக்கும் ஏழைகளுக்கும் அவர்கள் தங்கள் வரலாற்றுப் பாதாளங்களிலிருந்து மேலேவர படிப்பும் பட்டமும்தான் பற்றுக்கோடு.
'படிப்பு வராவிட்டால் தொழில் கல்விக்குபோ, படிப்பு வராவிட்டால் வேற ஏதாச்சும் பண்ணு..படிக்காத மேதை... படிப்புத்தான் அறிவா..." என்பதெல்லாம் கல்விக்கு எதிரான ஒரே குரல்கள். எண்ணும் எழுத்தும் தெரியாவிட்டால்கூட பரவாயில்லை என நியாயப்படுத்தும் அளவுக்கு இன்றைய ஷோவில் போனார்கள். இதில் ' நீட்' பற்றிய பேத்தல்கள் வேறு. தேவனே..இவர்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்." என்று தெரிவித்து உள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications