அம்மாவிற்காக ஏங்கும் சிறுவன்.. அவரோ ஐசியூவில்.. நீங்கள் உதவினால் இவர் உயிர் பிழைப்பார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விபத்தால் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் இந்த பெண்ணுக்கு நீங்கள் உதவினால் உயிர் பிழைப்பார். அப்பா இல்லாத மகன் தன்னுடைய அம்மா எப்போது வீட்டிற்கு உயிரோடு திரும்பி வருவார் என்று காத்துக் கொண்டு இருக்கிறார்.

பாட்டி.. அம்மா எங்க? அவங்க இன்னைக்கு திரும்ப வருவாங்கன்னு நீங்க சொன்னீங்க, இன்னும் வரல''

You can save Mahalakshmi who is under treatment in ICU after met with a tragic accident

அவங்களுக்கு உடம்பு சரியில்லை, அவங்க ஹாஸ்ப்பிட்டல்ல இருக்காங்க.. சீக்கிரம் வந்துடுவாங்க

ஆனா அவங்க ஏன் போன் கூட பண்ணவில்லை?

You can save Mahalakshmi who is under treatment in ICU after met with a tragic accident

13 வயது நிரம்பிய கோவிந்த் என்ற சிறுவன் தன் அம்மா மஹாலட்சுமியை கடந்த 15 நாட்களாக இப்படித்தான் தேடிக்கொண்டு இருக்கிறான். தன்னுடைய பாட்டி லக்ஷ்மம்மாவிடம் தன் அம்மா குறித்து மாறி மாறி இப்படி கேள்விகளாக எழுப்பி வருகிறான்.

You can save Mahalakshmi who is under treatment in ICU after met with a tragic accident

கோவிந்திற்கு தன்னுடைய அம்மா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரியும். ஆனால் ஏன் தன்னுடைய அம்மா மருத்துவ மனையில் இருக்கிறார் என்று முழு விபரம் தெரியாது. அவனுடைய பாட்டி, உங்க அம்மாவிற்கு உடம்பு சரியில்லை, ஜுரம், சீக்கிரம் திரும்பி வந்து விடுவார் என்று கூறி அவனை சமாளித்து வருகிறார்.

ஆனால் பேரனுக்கு அவ்வளவு நம்பிக்கை கொடுத்தாலும், எங்கு தன்னுடைய மகள் தன்னை விட்டு போய் விடுவாளோ என்று பெரும் அச்சத்தில் இருக்கிறார் லக்ஷ்மம்மா.

You can save Mahalakshmi who is under treatment in ICU after met with a tragic accident

கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி மஹாலட்சுமி தன்னுடைய அலுவலக வேலைக்கு பைக்கில் சென்று கொண்டு இருந்தார். ஆனால் போகும் போது அவரின் வாகனம் சாலையில் வழுக்கி கீழே விழுந்தது. முதல் நாள் பெய்த மழையில் பைக் சறுக்கி விழுந்தது.

இதில் தவறி கீழே விழுந்த மஹாலட்சுமி தலையில் பெரிய காயம் ஏற்பட்டது. அங்கேயே மயங்கி விழுந்த மஹாலட்சுமி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் மஹாலட்சுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

You can save Mahalakshmi who is under treatment in ICU after met with a tragic accident

அப்போது தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட மஹாலட்சுமி இப்போது வரை உயிருக்கு போராடியபடி இருக்கிறார். என்னுடைய மகள் வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் அவர் அனைத்தையும் எதிர்த்து கடுமையாக போராடினார். அதில் வென்றார். அவர் இப்போது இந்த போராட்டத்தில் இருந்தும் மீண்டும் வருவார் என்று நம்புகிறேன், என்று மஹாலட்சுமியின் தாய் லக்ஷ்மம்மா குறிப்பிட்டார்.

6 வருடங்களுக்கு முன் மஹாலட்சுமி அவரின் கணவரால் கைவிடப்பட்டார். அப்போதும் அவரின் குழந்தைக்கு 7 வயதுதான் ஆகி இருந்தது. அப்போது தன்னுடைய அம்மாவின் வீட்டிற்கு சென்றவர். இப்போது வரை அங்குதான் வசித்து வருகிறார். குடும்ப தேவைகளை சரி செய்வதற்காக பார்லர் ஒன்றில் மஹாலட்சுமி வேலை பார்த்து வருகிறார்.

You can save Mahalakshmi who is under treatment in ICU after met with a tragic accident

எல்லாம் சரி ஆகி வரும் வேளையில்தான் தற்போது மஹாலட்சுமிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய லக்ஷ்மம்மா ''இத்தனை நாட்கள் விபத்து பற்றி என் பேரன் கோவிந்திடம் நான் பொய் சொல்லி வைத்தேன். எனக்கு இந்த பொய்யை சொல்ல மேலும் வலிமை இல்லை. தன்னுடைய அம்மா குறித்து கோவிந்த் கேட்காத ஒரு நாள் கூட இல்லை.'' என்று கூறியுள்ளார்.

மஹாலட்சுமியின் நிலை தற்போது மோசமாக இருக்கிறது. அவருக்கு மண்டையில் அடிபட்டு மூளை பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தலையில் frontotemporal contusion பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் oedema பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

இதற்காக அவர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவரின் குடும்ப சூழ்நிலை இந்த சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. அவருக்கு சிகிச்சையை தொடர்ந்து செய்ய மேலும் 25.09 லட்சம் ரூபாய் தேவை. இதுவரை இருந்த நகைகளை விற்று அவரின் அம்மா கொஞ்சம் பணம் கொடுத்துள்ளார்,

ஆனால் இந்த பணம் கண்டிப்பாக சிகிச்சைக்கு போதாது. தன்னுடைய அம்மா மஹாலட்சுமியின் முகத்தை பார்க்க மாட்டோமா என்று கோவிந்த் வீட்டில் ஏங்கிக் கொண்டு இருக்கிறான். சிகிச்சைக்கு பணம் கிடைத்தால்தான் மஹாலட்சுமி உயிர் பிழைக்க முடியும்.

இதுகுறித்து பேசிய லக்ஷ்மம்மா ''நான் எப்போதெல்லாம் மருத்துவமனையில் என் மகளை பார்க்கிறேனோ அப்போதெல்லாம் அவளின் கையை பிடித்து தைரியமாக இரும்மா என்று கூறிவிட்டு வருகிறேன். ஆனால் எனக்கு தான் தைரியமும், நம்பிக்கையும் சொல்ல ஆள் இல்லை.'' என்று கூறியுள்ளார்.

நீங்கள் நினைத்தால் இந்த பெண்ணின் உயிரை காப்பாற்றலாம். நீங்கள் நினைத்தால் இவருக்கு உதவி செய்து உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வைத்து, உயிரை காப்பாற்ற முடியும். உங்களால் முடிந்த தொகையை உடனே இந்த லிங்கை கிளிக் செய்து கொடுத்திடுங்கள்.. உங்களின் ஒரு ரூபாய் கூட அந்த பெண்ணின் உயிரை காத்திடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+