மகா சிவராத்திரி பூஜை.. அடடே வணங்கான் பட ஹீரோயினும் ஈஷா யோகா மையத்தில் என்னம்மா டான்ஸ் ஆடுறாங்க!
கோவை: ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் முதல் பிரபல நடிகைகள் வரை பலரும் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி பூஜையில் கலந்துக் கொண்டு இரவு முழுவதும் உற்சாக நடனமாடிய காட்சிகள் ரசிகர்களை பரவசப்படுத்தி உள்ளன.
நடிகைகள் தமன்னா, சாரா அர்ஜுன், ஸ்ரீனிதி ஷெட்டி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த ஆண்டு நடைபெற்ற மகா சிவராத்திரி பூஜையில் கலந்துக் கொண்டு உற்சாக நடனமாடிய காட்சிகள் வைரலாகின.

இந்நிலையில், பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான் படத்தில் நடித்த நடிகை ரோஷினி பிரகாஷும் தனது அம்மாவுடன் ஈஷா யோகா மையம் சென்று சிவராத்திரியை கொண்டாடிய நிலையில், அங்கே நடனமாடிய வீடியோவையும் புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார்.
பிரமாண்டமாக கொண்டாடப்படும் மகா சிவராத்திரி: அம்மனுக்கு கொண்டாடப்படும் நவராத்திரி விழா தசரா பண்டிகை என நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சிவனுக்காக கொண்டாடப்படும் மகா சிவராத்திரி விழா தமிழ்நாட்டில் உள்ள பஞ்சபூத தலங்கள் முதல் நாடு முழுக்க வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையில் ஈஷா யோகா மையத்தில் பிரம்மாண்டமாக ஆதியோகி சிலை உருவாக்கப்பட்ட நிலையில், பல சினிமா பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் அங்கே ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்று வருகின்றனர்.

தமன்னா முதல் சாரா அர்ஜுன் வரை: நடிகை சமந்தா சமீபத்தில் தனது 2வது திருமணத்தையே ஈஷா யோகா மையத்தில் தான் நடத்தினார். இந்த ஆண்டு சமந்தா வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பங்கேற்றது போல தெரியவில்லை. லவ் பிரேக்கப் ஆன நடிகை தமன்னா இந்த ஆண்டு சிவராத்திரி விழாவில் பங்கேற்று உற்சாக நடனமாடினார். துரந்தர் படத்தின் மூலம் 1000 கோடி ஹீரோயினாக மாறிய நடிகை சாரா அர்ஜுனும் இந்த திருவிழாவில் பங்கேற்றார். மேலும், கேஜிஎஃப் நடிகை ஸ்ரீனிதி ஷெட்டி, பராசக்தி பட ஹீரோயின் ஸ்ரீலீலா, நாகினி நடிகை மெளனி ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.
வணங்கான் ஹீரோயின் டான்ஸ்: பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான வணங்கான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்திய நடிகை ரோஷினி பிரகாஷ் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்று நடனமாடிய காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வணங்கான் படத்தில் தனது மொத்த நடிப்புத் திறமையும் ரோஷினி வெளிக்காட்டி செம போல்டாக நடித்திருப்பார். தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
Credit: Filmibeat
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications