நுரையீரல் பாதிப்பு.. அறுவை சிகிச்சையும் பலனளிக்கவில்லை.. திடீரென உயிரிழந்த சீரியல் நடிகை!
சென்னை: பிரபல சீரியல் நடிகை நுரையீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில மாதங்களால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 37. இவரது மறைவு சின்னத்திரை நடிகர்களையும் அவரின் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
கன்னட நடிகையான ரஷ்மி லீலா, பாப்பா பண்டு, தெலுங்கு ஜானகி, காவலுதாரி, கன்னடி, காவ்யாஞ்சலி, பாந்தவ்யா, ஆனந்த சாகர், ஹூக்லி பிட் சர், கோதுலி மற்றும் ககனா குசுமா உள்ளிட்ட பல பிரபலமான தொடர்களில் நடித்துள்ளார். இவர் சீரியலைத் தவிர, அவர் பிராணா, கிராம தேவதே, சிஹி முத்து மற்றும் கெம்டு தீபா போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ரஷ்மி லீலாவின் கணவர் 'சரிக்கு மஞ்சு', கன்னட தொலைக்காட்சியில் எழுத்தாளர் மற்றும் வசன எழுத்தாளராக உள்ளார்.

நடிகை மறைவு: இந்நிலையில், நடிகை ரஷ்மி லீலாவின் கணவர் சரிக்கு மஞ்சு தனது இன்ஸ்டாகிராமில், ஒரு அதிர்ச்சியான பதிவினை ஷேர் செய்துள்ளார். அதில், என் மனைவி ரஷ்மி லீலா, பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவருக்கு 2019 ஆம் ஆண்டு முதல் நுரையீரல் ஃபைப்ரோஸிஸுடன் போராடி வந்தார். கடந்த சில ஆண்டுகளாக, அவர் தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சையில் இருந்தார். விரைவில் அவர் குணமடைந்துவிடுவார் என்கிற நம்பிக்கையில் அண்மையில் அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை மற்றும் தொடர்ச்சியான சிகிச்சையில் இருந்தபோதிலும், அடுத்தடுத்த நாட்களில் அவரது உடல்நிலை மோசமடைந்தால் துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்தார் என்பதை வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

கண்ணீருடன் இரங்கல்: அவரின் இறுதிச் சடங்கு இன்று மதியம் 1:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணிக்கு பனசங்கரி மின்மயானத்தில் நடைபெறும் என்றும், அவரின் உடல் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாக கூறியுள்ளார். நடிகை ரஷ்மி லீலாவின் மறைவு சக நடிகர்களையும், அவரின் நண்பர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. நடிகை ரஷ்மி லீலாவை இழந்து வாடும் அவரது கணவருக்கு பலர் ஆறுதல் கூறி கண்ணீருடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Credit: Filmibeat
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications