வானளவு சென்ற சிவகார்த்திகேயன் வளர்ச்சி.. மிரள வைக்கும் சொத்து மதிப்பு.. இத்தனை கோடிக்கு அதிபதியா?
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான பராசக்தி திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் வசூலில் கெத்து காண்பித்துவிட்டது. அடுத்ததாக அவர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்ற படத்திலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் அவர் இன்று 41ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். பலரும் அவருக்கு தங்களது வாழ்த்தை தெரிவித்துவரும் சூழலில்; எஸ்கேவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் இணையத்தில் பரவ ஆரம்பித்திருக்கின்றன.
திருச்சியில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து தந்தையை இழந்து ரொம்பவே கஷ்டப்பட்டவர் சிவகார்த்திகேயன். தனக்குள் இருக்கும் மிமிக்ரி திறமையை வைத்து முன்னேறிவிடலாம் என இருந்த அவருக்கு குடும்பத்தினர் பெரிதாக சப்போர்ட் செய்யவில்லை. இருந்தாலும் மனம் தளராத அவர்; தொடர்ந்து முயன்று சின்னத்திரை ரியாலிட்டி ஷோ டைட்டில் வின்னராக மாறினார். அதிலிருந்து தனக்கு கிடைத்த அடுத்தடுத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி அதே சேனலில் தவிர்க்க முடியாத தொகுப்பாளராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.

சினிமாவில் சிவகார்த்திகேயன்: சேனலில் அவர் செய்த ஆங்கரிங் ஸ்டைல் மற்ற ஈவென்ட்டுகளுக்கும் அழைத்து சென்றது. அப்போது திரை பிரபலங்களின் கவனத்தையும் அவர் ஈர்க்க; தனுஷும், பாண்டிராஜும் சினிமாவுக்கு அவரை அழைத்து வந்தார்கள். தனுஷ் தான் ஹீரோவாக நடித்த 3 படத்தில் ஒரு ரோலை கொடுக்க; பாண்டிராஜ் ஹீரோவாக அறிமுகம் செய்தார். இரண்டையும் சரியாக செய்ததால் திரைத்துறையில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. சிவா ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தபோது பத்தே படங்களில் காணாமல் போய்விடுவார் என்று பலர் ஆருடம் கூறினார்கள்.
சிவகார்த்திகேயன் வானத்தில் ஒரு நட்சத்திரம்.. மகள் வாங்கிய விருது.. அப்பாவா எவ்வளவு பெருமை பாருங்க
ஆருடம் கூறியவர்களை காணவில்லை: ஆனால் அப்படி ஆருடம் கூறியவர்களைத்தான் இப்போது காணவில்லை. சிவாவோ கோலிவுட்டின் டயர் 1 ஹீரோக்கள் லிஸ்ட்டில் வந்துவிட்டார். அவர் நடித்த டாக்டர், டான், அமரன், பராசக்தி ஆகிய நான்கு படங்கள் 100 கோடி ரூபாயை வசூலித்திருக்கின்றன. இவை தவிர்த்து மாவீரன், மதராஸி உள்ளிட்ட படங்கள் 80 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாகவும் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படி கமர்ஷியல் ரீதியாக சக்சஸ்ஃபுல் ஹீரோவாக உயர்ந்ததோடு மட்டுமின்றி; விஜய் சினிமாவை விட்டு விலகுவதால் அவரது இடத்தையும் எஸ்கேதான் பிடிப்பார் என்று பலரும் சொல்கிறார்கள்.
எவ்வளவோ விமர்சனங்கள்: ஒருவர் வளர்ச்சியடைந்தாலே அவரை வீழ்ச்சியடைய செய்வதற்கு ஒரு கூட்டம் தொடர்ந்து வேலை செய்யும். அப்படி சிவாவுக்கு எதிராகவும் ஒருதரப்பினர் வேலை செய்துகொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்களது எந்த சதியும் சிவாவின் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை. ஒவ்வொரு படத்துக்கும் அவரது மார்க்கெட்டும், சம்பளமும் உச்சத்தில்தான் சென்றுகொண்டிருக்கின்றன. சினிமாவின் காட்ஃபாதர் என்று புகழப்படும் கமலின் தயாரிப்பில் இரண்டாவது படமாக சேயோன் படத்தில் நடிக்கவும் கமிட்டாகிவிட்டார் அவர். இதற்கடுத்து பிரமாண்ட பட்ஜெட்டில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார்.
சிவகார்த்திகேயன் பிறந்தநாள்: இந்நிலையில் அவர் இன்று தனது 41ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவரும் சூழலில்; சிவாவின் சொத்து மதிப்பு குறித்த தகவலும் வெளியாகியிருக்கிறது. அமரன் வெற்றிக்கு பிறகு எஸ்கேவின் சம்பளம் 50 கோடி ரூபாயை நெருங்கிவிட்டதாம். மொத்தம் அவரிடம் 120 கோடி ரூபாயிலிருந்து 130 கோடி ரூபாய்வரை சொத்து மதிப்பு இருக்கிறதாம். சென்னையில் சகல வசதிகளுடன் பங்களா வைத்திருக்கும் அவர்; பென்ஸ், மினி கூப்பர், பிஎம்டபிள்யூ சொகுசு கார்களை வைத்திருக்கிறார். தயாரிப்பாளராகவும் மின்னும் அவர் அதிலிருந்தும் வருமானம் ஈட்டுகிறார்.
Credit: Filmibeat
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications