கனடாவில் அகதிகளை சிறையில் அடைக்கும் சட்டங்களில் புதிய திருத்தங்கள்
டொரண்டோ: கனடாவில் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளை சிறையில் அடைப்பது தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன.
கனடாவில் அரசு அகதிகளின் ஏற்பும், மறுப்பும் குறித்து C - 31 என்ற புதிய சட்டத்தை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது Canadian Medical Association Journal -ல் சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அதில், புகலிடம் தேடி வருவோரை சிறையில் அடைப்பது அவர்களது மன வேதனையை அதிகமாக்கி மனநலத்தைக் கெடுக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
இதேபோல் அகதியாக ஏற்கப்பட்ட தமது குடும்பத்தை அழைத்து வருவதற்கு ஐந்து ஆண்டுகளாவது வேண்டும் என்ற நிபந்தனையும், தனியாக வாழும் அந்த அகதியின் மனநலத்துக்குக் கேடு விளைவிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் 16 வயதுக்கும் குறைவான பிள்ளைகளைத் தாய்மாரிடமிருந்து பிரித்து வைப்பதும் அவர்களுக்கு தீமை விளைவிப்பதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து சட்டத்தில் தற்போது சில திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளன. முதலில், ஒரு ஆண்டுகாலம் வரை அகதிகளை அடைத்து வந்த நிலையை மாற்றி இனி ஆறு மாதம் மட்டுமே அடைக்கப்படுவர். அகதிகளின் மருத்துவ நலம் குறித்துப் புதிய கொள்கை அறிமுகமாகிறது. மருந்து, பல் பாதுகாப்பு, கண் பாதுகாப்பு போன்றவை கவனிக்கப்படும் என மாற்றம் செய்யப்பட உள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications