ஜெயிலர் 2 முதல் ரணபாலி வரை.. இந்த வாரம் OTT தளங்களில் ரிலீஸ் ஆகியுள்ள சூப்பர் படங்கள் லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: OTT தளங்களில் இந்த வாரம் ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர் 2', விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ரணபாலி உள்ளிட்ட முக்கியமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியுள்ள படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

தீபாவளியை ஒட்டி திரையரங்குகளில் வெளியான படங்கள் நல்ல வசூலை பெற்று வரும் நிலையில், ஓடிடி ரசிகர்களுக்காக இந்த வாரம் பல படங்கள் வெளியாகியுள்ளன.

Jailer 2 to Ranabali Check Out This Week s Exciting OTT Releases

ஜெயிலர் 2

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான படம் 'ஜெயிலர் 2'. இந்தப் படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்​ணன், நமோ நாராயணன், சுராஜ் வெஞ்​சரமூடு, யோகி பாபு, வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா உள்​ளிட்டோர் நடித்துள்ளனர். மோகன்லால், சிவ ராஜ்குமார், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்டோர் கௌரவ வேடங்களில் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் செய்திருக்கும் 'ஜெயிலர் 2' படம் கடந்த அக்டோபர் 15 அன்று திரையரங்குகளில் வெளியானது. ஜெயிலர் 2 படம் நவம்பர் 12 அன்று அமேசான் ப்ரைம் வீடியோஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

டாய்ரா

மேஹ்னா குல்சர் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியான படம் 'டாய்ரா'. இந்தப் படத்தில் கரீனா கபூர், ப்ரித்விராஜ் சுகுமாரன், பரமோத் சங்கீ உள்ளிட்டோர் நடத்துள்ளனர். கொடூரமான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் காவல்துறையினரால் கொல்லப்படும் ஒரு சர்ச்சைக்குரிய என்கவுண்டரைச் சுற்றி இப்படத்தின் கதை சுழல்கிறது.

செப்டம்பர் 18 ஆம் தேதி திரைக்கு வந்த இந்த த்ரில்லர் படம் நவம்பர் 13 ஆம் தேதியான இன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

ரணபாலி

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடித்துள்ள ரணபலி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று (நவ. 13) வெளியாகி உள்ளது. இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் உருவான இந்தப் படம், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அதிகாரத்தை எதிர்த்துப் போராடும் சிங்கனமாலா பொப்பிலி ரணபாலியின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

பீரியட் ஃபிலிமாக உருவாகி, 4 இந்திய மொழிகளில் வெளியான ரணபாலி திரைப்படம் இன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

பரிவாரிக் மனுரஞ்சன்

வருண் வி. ஷர்மா இயக்கிய இந்தி காதல் நகைச்சுவைத் திரைப்படமான ' பரிவாரிக் மனுரஞ்சன்' படத்தில் பங்கஜ் திரிபாதியும் அதிதி ராவ் ஹைதரியும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். லக்னோவில் நடக்கும் இந்தக் கதை, ஒரு பிரம்மாண்டமான பரம்பரை மாளிகையில் வசிக்கும் திருமணமாகாத இளைஞரான ரஞ்சன் துபேயைப் பற்றியது. இப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

வைப்

குணால் கெம்மு இயக்கி, நடித்துள்ள ' வைப்' என்ற இந்தி படத்தில் ப்ரீத்தி ஜி ஜிந்தா மற்றும் ஸ்பார்ஷ் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் இன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது.

தி தேர்ட் மர்டர்

சுனில் இப்ராஹிம் இயக்கத்தில் வெளியான படம் 'தி தேர்ட் மர்டர்'. இந்தப் படத்தில், சைஜு க்ருப், இந்திரன்ஸ், வினய் ஃபோர்ட், அனன்யா, லியோனா லிஷோய், மணிகண்டன் பட்டாபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அக்டோபர் 2 அன்று திரையரங்குகளில் வெளியான இந்த சைக்கலாஜிகல் க்ரைம் த்ரில்லர் படம் மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாக இருக்கிறது.

கிரேஸி கல்யாணம்

பத்ரப்பா ராஜுலா இயக்கத்தில் வெளியான தெலுங்கு படம் 'கிரேஸி கல்யாணம்'. இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், தருண் பாஸ்கர் தாஸ்யம், விஜய் கிருஷ்ண நரேஷ், அகில் ராஜ் உத்தேமரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அக்டோபர் 16 அன்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் நவம்பர் 13 ஆம் தேதியான இன்று ஆஹா வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

ஹேப்பி ஜர்னி

அபிராம் நாயுடு இயக்கத்தில் வெளியான படம் 'ஹேப்பி ஜர்னி'. இந்தப் படத்தில் வம்ஷிதர் கவுட், பாயல் ராதாகிருஷ்ணா, ரவி சிவா தேஜா, அன்னபூர்ணா, ஆமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏழு பெண்கள் மேற்கொள்ளும் பயணத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது. நேற்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+