இந்த ஆண்டின் சிறந்த வில்லன் முனீஸ்காந்த் தான்.. வைரலாகும் தாய்கிழவி மீம்ஸ்
சென்னை: இந்த ஆண்டின் சிறந்த வில்லன் நடிகர் முனீஸ்காந்த் தான்.. ஒரு அடி அடிச்சதுக்கு நாலு லட்சம் பணம் வாங்கி தாய்கிழவிய காப்பாத்தி அந்தாளு பொண்டாட்டியவே ஆட்டைய போட்ட பலே வில்லன் முனீஸ்காந்த் என்று தாய் கிழவி படம் தொடர்பாக கிண்டல் மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள். இதுபற்றி சற்று விரிவாக பார்ப்போம்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலத்தில் கந்துவட்டிக்கு விடும் ஒரு வயதான பெண்மணி பற்றிய படம் தான் தாய்கிழவி . குடித்துவிட்டு ஊதாரியாக இருந்த கணவணுடன் குடும்பம் நடத்தி, நான்கு பிள்ளைகளை பெற்ற ராதிகா, மகளை மட்டும் கூடவே வைத்துக் கொண்டு மகன்களை விரட்டிவிடுவார்.. அவரிடம் சொத்துக்கேட்டு போன மகன்களை அவமானப்படுத்தி அனுப்பிவைப்பார். அதேபோல் போடாமல் விட்ட 3 பவுன் நகையை போட சொல்லி கேட்ட மருமகனை துரத்திவிடுவார்.

இறுதியில் அவருக்கு ஏகப்பட்ட நகைகள் இருக்கிறது என்பதை அறிந்த மகன்கள் தாயை காப்பாற்ற செலவு செய்கிறார்கள். அதற்கு திருமணமே ஆகாமல் இருக்கும் முனிஸ்காந்த் அதாவது பென்னிக்குக் உதவி செய்வார். இதனை அறிந்த இரண்டு இட்லி என்று அழைக்கப்படும் ஜவஹர்லால் நேருவும் கிழவியிடம் இருந்து நகையை வாங்க வேண்டும் என்று உதவி செய்வார்.. இறுதியாக ஆப்ரேஷனுக்கு 4 லட்சம் வேண்டும் என்கிற நிலையில், தாய் கிழவியை காப்பாற்ற ஜஹவர்லால் நேரு 4 லட்சம் கொடுப்பார். அவர் கொடுத்த உதவியை மறைக்கும் பென்னிக்குன் தான் உதவி செய்தது போல் கூறுவார்.
இறுதியாக பிழைத்து வரும் ராதிகா, திருமணமே ஆகாமல் இருக்கும் பென்னிக்குக்கிறகு தனது மகளை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைப்பார். இந்த படத்தில் நடித்த முனீஸ்காந்த் இரண்டு விதமான விஷயங்களுக்கு பெயர் வாங்கி உள்ளார். முதலில் திருமணமே ஆகாமல் தவிக்கும் ஒருவரின் வலிமையை சுமந்தவராக எதார்த்தமாக நடித்திருப்பார்.. மறுபக்கம்.. ஒரு அடி அடிச்சதுக்கு நாலு லட்சம் பணம் வாங்கி தாய்கிழவிய காப்பாத்தி அந்தாளு மனைவியையே திருமணம் செய்து கொள்வதாக கதை இருக்கும்.

இதை பற்றி நெட்சடின் ஒருவர் வெளியிட்ட மீம்ஸில், இந்த ஆண்டின் சிறந்த வில்லன் நடிகர் முனீஸ்காந்த் தான்.. ஒரு அடி அடிச்சதுக்கு நாலு லட்சம் பணம் வாங்கி தாய்கிழவிய காப்பாத்தி அந்தாளு பொண்டாட்டியவே ஆட்டைய போட்ட பலே வில்லன் முனீஸ்காந்த் என்று கூறியுள்ளார்.
அந்தாளுக்கும் மட்டுமே வில்லன். ஒன்னுமே செய்யாம ஒர்க் அவுட் பண்ணிட்டான் என்று இன்னொரு நெட்டிசன் கிண்டல் செய்துள்ளார். எனக்கும் அந்த கேரக்டர க்ளைமிக்ஸ்ல பார்க்க பாவமா இருந்தது மூன்றாவதாக நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications