சென்னை அமிர்தா இன்டர்நேஷனல் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூட் தலைவருக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விருது
சென்னை: ஹாஸ்பிட்டாலிட்டி கல்வியில் சிறந்து விளங்குமு் சென்னைஸ் அமிர்தா குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூட் தலைவர் ராஜுபூமிநாதனை பாராட்டி இன்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் 'பெஸ்ட் ஹாஸ்பிட்டாலிட்டி செக்டார் சவுத் இந்தியா' விருது வழங்கப்பட உள்ளது.
உலகில் உள்ள பழமையான, ஜனநாயக அமைப்புகளில் ஒன்றாக 'ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்' (House of Lords) உள்ளது. இது பிரிட்டனின் நாடாளுமன்றமாகும். லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் இந்த சபை அமைந்துள்ளது.

இந்நிலையில் தான் தற்போது இந்த பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் கவுரவிக்கப்பட உள்ளார். அவரது பெயர் தான் ராஜு பூமிநாதன்.
எதிர்கால சமூகத்தை கட்டமைக்கும் சக்தி தான் கல்வி. அதனை உணர்ந்து சென்னை அமிர்தா குரூப் ஆஃப் இன்ஸ்ட்டிடியூசன் தலைவராக இருக்கும் இருப்பவர் தான் ராஜூ பூமிநாதன். இந்த இன்ஸ்ட்டிடியூசன் சார்பில் 'ஹாஸ்பிட்டாலிட்டி' துறையில் சாதிக்க நினைத்த பல ஆயிரம் மாணவர்களின் கனவுகளை நனவாக்கி கொடுத்துள்ளார்.
இப்போது 'ஹாஸ்பிட்டாலிட்டி' கல்வியில் தென்இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அதனை பாராட்டி தான் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வைத்து'பெஸ்ட் ஹாஸ்பிட்டாலிட்டி செக்டார் சவுத் இந்தியா' விருது ராஜு பூமிநாதனுக்கு இன்று வழங்கப்பட உள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்றமான 'ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில்' இன்று இரவு The Next Economy Forum 2026 என்ற தலைப்பில் 2வது எடிசன் மீட்டிங் நடைபெற உள்ளது. இதில் உலகளாவிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் சென்னை அமிர்தாஸ் குரூப் ஆஃப்இன்ஸ்டிடியூசன் தலைவர் ராஜு பூமிநாதன் கவுரவிக்கப்பட உள்ளார்.
இதன்மூலம் 'ஹாஸ்பிட்டாலிட்டி' கல்வியியல் துறையில் இந்த சர்வதேச அங்கீகாரத்தை இந்தியாவில் இருந்து பெறும் முதல் நிறுவனமாக சென்னை அமிர்தா குரூப் ஆஃப் இன்ஸ்ட்டிடியூசன் பெருமை பெற உள்ளது. இதுவரை சென்னை அமிர்தா குரூப் ஆஃப் இன்ஸ்ட்டிடியூட் வழியாக 32 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பை பெற்றுள்ளனர். இவர்கள் சர்வதேச அளவில் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் சென்னை அமிர்தா குரூப் ஆஃப் இன்ஸ்ட்டிடியூசன் நிறுவனத்துக்கு விருதுகள் ஒன்றும் புதிது அல்ல. இதற்கு முன்பு பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வாங்கி குவித்துள்ளது. ஹோட்டல் மேனேஜ்மெண்ட் துறையில் எக்சலன்ஸ் மற்றும் இன்னோவேஷனை அங்கீகரிக்கும் வகையில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல்கலாம், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் பாராட்டு பெற்றுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா சார்பில் 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக ICon Of the Year விருது பெற்றுள்ளது. 2015ம் ஆண்டில் மலேசியாவின் IPD - OUM பல்கலைக்கழகத்தின் சிறப்புக்குரிய சாதனைக்கான விருது 2015 (Meritorious Award 2015) பெறப்பட்டுள்ளது. இதுதவிர இன்னும் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளது. அந்த வரிசையில் இன்று சென்னை அமிர்தா குரூப் ஆஃப் இன்ஸ்ட்டிடியூசன் தலைவர் ராஜு பூமிநாதனுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் 'பெஸ்ட் ஹாஸ்பிட்டாலிட்டி செக்டார் சவுத் இந்தியா' விருது வழங்கபட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications