நான் இறக்க போகிறேன்..என் இறுதி ஆசை நிறைவேற உதவுங்கள்..கேரளா பெண் கோரிக்கை..நெகிழ வைத்த சத்குரு
கோவை: நவீன அறிவியலின் படி நான் இறக்க சில மாதங்கள் மட்டுமே இருக்கிறது, இறப்பதற்கு முன்பு என் இறுதி விருப்பத்தை நிறைவேற்ற யாராவது உதவி செய்யுங்கள் என்ற கோரிக்கையை ட்வீட்டரில் பதிவிட்ட கேரளாவை சேர்ந்த பெண்ணிற்கு சத்குரு நெகிழ வைக்கும் பதிலை அளித்துள்ளார்.
சமூக வலைதளங்கள் வெறும் கேளிக்கைகளுக்கானது என்பதைத் தாண்டி சில நேரங்களில் நம் நெஞ்சை தொட்டுவிடும் சம்பவங்களையும் நடத்திவிடுகிறது. அந்த வகையில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் ட்வீட்டர் மூலம் நடந்தேறி இருக்கிறது.

காயத்ரி என்ற பெண்மணி தன் இறுதி விருப்பம் குறித்த பதிவொன்றை டீவீட்டரில் பதிவிட்டு இருந்தார். அதில் அவர் "சத்குரு அவர்களை சந்திப்பது என்பது என் வாழ்நாள் விருப்பமாக இருந்து வருகிறது. நான் வாழ்வதற்கு இன்னமும் சில மாதங்கள் மட்டுமே எஞ்சி இருக்கிறது என நவீன அறிவியல் சொல்கிறது. யாரேனும் நான் என் குருவை சந்திக்க உதவ முடியுமா? நான் யாருமில்லை தான், இருந்தாலும் என் இறுதி விருப்பத்தை நான் உணர தயவுசெய்து உதவி செய்யுங்கள்." என்று பதிவிட்டுள்ளார்.

அந்த பெண்ணின் உருக்கமான கோரிக்கைக்கு சத்குரு அவர்கள் பதில் அளித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில் " வணக்கம் காயத்ரி. நான் தற்போது பாரதத்திற்கு வெளியே பயணத்தில் இருக்கிறேன். உணர்வளவில் நான் உங்களுடன் இருக்கிறேன். திரும்பும்போது உங்களை சந்திப்பதை எதிர்நோக்கி இருக்கிறேன். மிகுந்த அன்பும் ஆசியும் " என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பலரின் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது. சத்குரு அவர்கள் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மக்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமானவராக இருக்கிறார். அவர் நிறுவிய ஈஷா யோகா மையம் மூலம் நடந்தப்படும் யோக வகுப்புகள் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications