தோனியின் 200 வது போட்டி.. சேப்பாக்கத்தில் பறக்கவிட்ட சிக்ஸர்கள்..பார்த்து ரசித்த சத்குரு..!
சென்னை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தனது 200வது போட்டியில் கேப்டனாக பங்கேற்றார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியை காண திரளான ரசிகர்கள் வந்திருந்தனர், அவர்களுடன் ஈஷா யோகா மையம் நிறுவனர் சத்குருவும் இப்போட்டியை கண்டு ரசித்தார்.
ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து 2008 ஆம் ஆண்டு முதல் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். அவரது தலைமையின் கீழ் சென்னை நான்கு முறை (2010, 2011, 2018 மற்றும் 2021) ஐபிஎல் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையில் நடந்த ஐபிஎல் போட்டி புதன்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இப்போட்டியை காண திறலான ரசிகர்கள் வந்திருந்தனர், அவர்களுடன் சத்குருவும் இப்போட்டியை கண்டுக்களித்தார்.
ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 175/8 ரன்கள் குவித்தது. அதன்பின்,176 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் கான்வே அரைசதமடித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரஹானே அதிரடியாக விளையாடி 31 ரன்கள் குவித்தார்.

ஆட்டத்தின் இறுதி வரை பரபரப்பாக சென்ற போட்டியில், கடைசி ஓவரில் 21 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், அணியின் கேப்டன் தோனி 2 சிக்ஸர்களை விளாசினார். பலரும் ஆரவாரத்துடன் தோனி அடித்த சிக்சர்களை கைதட்டி ரசித்தனர்.
ஹாட்ரிக் சிக்சரை பலரும் எதிர்பார்த்த நிலையில் சந்தீப்பின் துல்லியமான பந்துவீச்சால் தோனி 1 ரன் மட்டுமே எடுத்தார். அடுத்து வந்த ஜடேஜாவினாலும் ரன் எடுக்க முடியவில்லை. எல்லோரும் இறைவனை வேண்டிக்கொண்டிருந்தனர். தோனி ஹெலிகாப்டர் சிக்சர் அடிப்பார் என்று எதிர்பார்த்தனர். கடைசி 1 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டன. ரசிகர்களின் பிரார்த்தனை பலிக்கவில்லை. கடைசி பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்தார் தோனி. சென்னை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் போராடித் தோற்றது.

தோனியின் 200வது போட்டி எதிர் அணியினருக்கு மிரட்டலை ஏற்படுத்தியது. ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு கேலரியில் நின்று ஆர்வத்துடன் இந்த கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications