Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முற்றிலும் புதிய அவதாரத்தில் Maruti Suzuki Alto K10... மைலேஜ், வசதிகள் என எல்லாமே அமர்க்களம்!

Subscribe to Oneindia Tamil
Maruti Suzuki Alto K10 in a completely new avatar, mileage, facilities, security everything!

சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான Maruti Suzuki, புத்தம் புதிய Alto K10 காரை, சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. சுமார் 2 ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர், Maruti Suzuki Alto K10 கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருப்பது சிறப்பான ஒரு விஷயம் ஆகும்.

புதிய Alto K10 காரின் வருகையை கொண்டாடும் விதமாக, #IndiaKiChalPadi என்ற ஹேஷ்டேக் உடன், இந்த ஹேட்ச்பேக் காரை, Maruti Suzuki நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Maruti Suzuki Alto காரானது, இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான ஹேட்ச்பேக் கார் ஆகும். Maruti Suzuki Alto கார் இந்திய சந்தையில் 22 ஆண்டு காலமாக பயணம் செய்து வருகிறது. 43 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள்*** இந்த ஹேட்ச்பேக்கை நம்பிக்கையுடன் தேர்வு செய்துள்ளனர்.

Maruti Suzuki Alto K10 in a completely new avatar, mileage, facilities, security everything!

புதிய மாடலின் வருகை, இந்தியாவில் Maruti Suzuki Alto காரின் பயணத்திற்கு மேலும் உத்வேகம் அளிக்கும். முதல் முறையாக கார் வாங்குபவர்களை புதிய Alto K10 கவரும் என எதிர்பார்க்கப்படுவதுதான் இதற்கு காரணம். இந்தியாவில் கடந்த 22 ஆண்டுகளாக ஒரு மணி நேரத்திற்கு 100 Alto கார்களை Maruti Suzuki நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அத்துடன் தொடர்ந்து 16 ஆண்டுகளாக இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார் என்ற பெருமையையும் Alto பெற்றுள்ளது. இந்த சாதனைகளை எல்லாம் மேலும் அதிகரிக்கும் வகையில், புதிய Alto K10 காருக்கு கவர்ச்சிகரமான டிசைனை Maruti Suzuki நிறுவனம் வழங்கியுள்ளது.

Maruti Suzuki Alto K10 காரின் முன் பகுதியில் புதிய ஹெட்லைட்கள் மற்றும் தேன்கூடு வடிவில் புதிய க்ரில் அமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. அத்துடன் இதன் பக்கவாட்டு மற்றும் பின் பகுதியில், மாடர்ன் லுக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் முழு வீல் கவருடன் கூடிய இந்த காரின் 13 இன்ச் வீல்களும் கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளன.

பயணத்திற்கு தயாராக உள்ளே வரும் பயணிகளை, Maruti Suzuki Alto K10 காரின் விசாலமான இடவசதியுடன் கேபின் உற்சாகமாக வரவேற்கிறது. புதிய Maruti Suzuki Alto K10 காரின் இன்டீரியரில், இருக்கைகளுக்கு க்ரே கலர் அப்ஹோல்ஸ்ட்ரி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பழுப்பு நிற அலங்கார வேலைப்பாடுகளும் கூடுதல் கவர்ச்சியை சேர்க்கின்றன. டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் மற்றும் 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் ஆகியவையும், இன்டீரியரின் முக்கியமான வசதிகள் ஆகும். இந்த செக்மெண்ட்டை சேர்ந்த ஒரு காரில், 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

முன் வரிசை மற்றும் இரண்டாவது வரிசையில் கால்களை தாராளமாக வைத்து கொள்ள கூடிய வகையில், Maruti Suzuki Alto K10 காரின் கேபின் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இருக்கைகள் சௌகரியமாக இருப்பதுடன், ஏறி, இறங்குவதும் எளிமையான விஷயம்தான். அத்துடன் உங்கள் செல்போன், வாட்டர் பாட்டில் போன்ற அத்தியாவசியமான பொருட்களை எல்லாம் வைத்து கொள்வதற்கு தேவையான 'ஸ்டோரேஜ் ஸ்பேஸ்' வசதியும் தாராளமாக இருக்கிறது.

Maruti Suzuki Alto K10 in a completely new avatar, mileage, facilities, security everything!

டேஷ்போர்டின் மைய பகுதியில், Maruti Suzuki நிறுவனத்தின் 7 இன்ச் ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் நடுநாயகமாக வீற்றுள்ளது. ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ என இரண்டையும் இது சப்போர்ட் செய்யும். Alto K10 காரின் ஸ்டியரிங்கில் உள்ள பட்டன்களை பயன்படுத்தியும், இந்த ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தின் வசதிகளை, வாடிக்கையாளர்கள் கண்ட்ரோல் செய்ய முடியும். குரல் கட்டளைக்கும் இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் கீழ்படியும் என்பது கூடுதல் சிறப்பு.

அத்துடன் Alto K10 கார், வாடிக்கையாளர்களுக்கு இனிமையான ஓட்டுதல் அனுபவத்தை வழங்குகிறது. புதிய K10C இன்ஜினுக்குதான் இதற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். Maruti Suzuki Alto K10 காரின் அடுத்த தலைமுறை K-சீரிஸ் இன்ஜின், ட்யூயல் ஜெட் மற்றும் ட்யூயல் விவிடி தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 65.7 பிஹெச்பி பவரையும், 89 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

அத்துடன் மாருதி சுஸுகி நிறுவனத்தின் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட S-CNG சிஸ்டத்துடனும் புதிய Alto K10 கார் கிடைக்கிறது. எஸ்-சிஎன்ஜி வெர்ஷன்களில் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 55.9 பிஹெச்பி பவரையும், 82.1 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஜிஎஸ் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன் Maruti Suzuki Alto K10 கார் கிடைக்கும். பிஸியான நகர சாலைகளில் சௌகரியமான பயணத்தை விரும்புபவர்கள் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்யலாம். இதில் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 24.39 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும்*. அதே நேரத்தில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல், இதை விட அதிகமான மைலேஜை கொடுக்கும். இதன் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 24.90 கிலோ மீட்டர் ஆகும்*. இதை விட அதிக மைலேஜ் வேண்டும் என நினைப்பவர்கள் S-CNG மாடலை தேர்வு செய்யலாம். ஏனெனில் புதிய Maruti Suzuki Alto K10 காரின் S-CNG மாடல், ஒரு கிலோவிற்கு 33.85 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும்*.

Maruti Suzuki Alto K10 in a completely new avatar, mileage, facilities, security everything!

சுஸுகியின் ஹார்டெக்ட் பிளாட்பார்ம் அடிப்படையில், புதிய Alto K10 கார் உருவாக்கப்பட்டுள்ளது. இது மேம்பட்ட பாதுகாப்பையும், வலிமையையும் வழங்கும். அத்துடன் இந்த காரில், 15க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன**. இதில், 2 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

கடந்த 2000ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, 43 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் Maruti Suzuki Alto காரை வாங்கியுள்ளனர்***. புதிய Alto K10 மாடல் மூலமாக, கார் வைத்திருக்கும் சந்தோஷத்தை இன்னும் ஏராளமான வாடிக்கையாளர்களுக்கு வழங்க மாருதி சுஸுகி நிறுவனம் விரும்புகிறது. சுறுசுறுப்பான செயல்திறன் கொண்ட மற்றும் வசதிகளுக்கு பஞ்சமில்லாத ஒரு காரை எதிர்பார்ப்பவர்களுக்கு இது நல்ல தேர்வு. உங்களுக்கான புதிய Alto K10 காரை நீங்கள் வாங்க விரும்பினால், அருகில் உள்ள Maruti Suzuki அரேனா ஷோரூமுக்கு செல்லுங்கள். இதன் மூலம் #IndiakiChalPadi புரட்சியில் நீங்களும் இணையலாம். இந்த காரை நீங்கள் டெஸ்ட் டிரைவ் செய்ய விரும்பினால், Maruti Suzuki நிறுவனத்தின் இணையதளத்தில் 'புக்' செய்து கொள்ளலாம்.

* மைலேஜானது, சிஎம்விஆர் 1989-ன் விதி 115-ன் கீழ், சோதனை நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்டது ஆகும்.

** ஏர்பேக் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளின் செயல்பாடுகள் குறித்த விபரங்களுக்கு, உரிமையாளர் கையேட்டை பார்க்கவும்.

*** 2022 ஜூலை வரையிலான ஒட்டுமொத்த ஆல்டோ விற்பனை

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+