கேஏஜி டைல்ஸ் நிறுவனம் சார்பில் சென்னையில் 1 லட்சம் சதுரஅடியில் கண்காட்சி
சென்னை: சென்னை திருவேற்காடு சிக்னல் அருகே கேஏஜி டைல்ஸ் சார்பில் 1 லட்சம் சதுரஅடியில் பிரமாண்ட கண்காட்சி நடந்து வருகிறது. இந்த கண்காட்சி இன்று இரவுடன் முடிய உள்ளது.
தென்னிந்தியாவில் நம்பர் 1 பிராண்ட்டாக கேஏஜி டைல்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் இந்தியாவின் முதல் பிராண்ட் கண்காட்சி சென்னையில் தொடங்கியது.

கடந்த 15ம் தேதி முதல் 3 நாட்கள்தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடந்து வருகிறது. சென்னை திருவேற்காடு சிக்னல் அருகே கேஏஜி டைல்ஸ் எக்ஸ்பிரியன்ஸ் சென்டரில் கண்காட்சி நடந்து வருகிறது. 1 லட்சம் சதுர அடியில் டைல்ஸ் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் மொத்தம் 2,500 வகையான டைல்ஸ்கள் இடம்பெற்றுள்ளன. கேஏஜி பிராண்டின் ப்ளோர் டைல்ஸ் (Floor Tiles), வால் டைல்ஸ் ( Wall Tiles), ஸ்டேர்கேஸ் டைல்ஸ் (Staircase Tiles), பார்க்கிங் டைல்ஸ் (Parking Tiles), எலிவேஷன் டைல்ஸ் (Elevation Tiles), ரூப் டைல்ஸ் (Roof tiles), பிக்சர் டைல்ஸ் (Picture Tiles), சானிட்டரிவேர் (Sanitaryware), டேப்ஸ் (Taps), பாத் பிட்டிங்ஸ் (Bath Fittings) மற்றும் பல வகையான தரமான பொருட்கள் மிக குறைந்த விற்பனையில் பொதுமக்கள் வாங்கி செல்லலாம்.
புதுமையோடு வித்தியாசமான டைல்ஸ்கள் இடம்பெற்றுள்ளதால் இந்த கண்காட்சியை பார்வையிடும்போது டைல்ஸ் பற்றிய எண்ணம், சிந்தனை, வடிவம் என்பது நிச்சயம் மாறும். கண்காட்சிக்கு செல்லும் ஆர்க்கிடெக்ட், கட்டட ஒப்பந்தாரர்கள், கான்ட்ராக்டர், கட்டட என்ஜினீயர்களுக்கு சிறப்பு தள்ளுபடி அளிக்கப்பட உள்ளது.
இன்று கண்காட்சியின் இறுதி நாளாகும். இன்று இரவு 9 மணியுடன் கண்காட்சி நிறைவு பெற உள்ளது. இதனால் அரிய வாய்ப்பை மிஸ் செய்ய வேண்டாம் என கேஏஜி டைல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications