சிம்பயோசிஸ் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்கனுமா? ஸ்நாப் தேர்வுக்கு விண்ணப்பிக்க நல்ல வாய்ப்பு
சிம்பயோசிஸ் இன்டர்நேஷனல் (Symbiosis International) (டீம்ட் யுனிவர்சிட்டி or Deemed University) சார்பில் ஆண்டுதோறும் ஸ்நாப் எனும் சிம்பயோசிஸ் நேஷனல் ஆப்டிட்யூட் டெஸ்ட்(Symbiosis National Aptitude Test or SNAP) (எஸ்என்ஏபி) என்பது நடத்தப்பட்டு வருகிறது.
சிம்பயோசிஸ் பி-பள்ளிகளில் எம்பிஏ படிக்க விரும்புவோரை தேர்வு செய்வதற்காக இந்த நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2004ம் ஆண்டு சேர்க்கைக்கான ஸ்நாப் நுழைவு தேர்வு என்பது டிசம்பர் 2023ல் 3 நாட்கள் நடைபெற உள்ளது. டிசம்பர் 10, 17, 22 ஆகிய தேதிகளில் ஸ்நாப் நுழைவு தேர்வு நடத்தப்பட உள்ளது.

இந்த தேர்வு ஒரு மணிநேரம் நடக்க உள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறுவோர் 16 சிம்பயோசிஸ் பி-பள்ளிகளில் எம்பிஏ படிப்பில் சேர்த்து கொள்ளப்பட உள்ளனர். இந்தியாவில் 16 சிம்பயோசிஸ் பி-பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இங்கு எம்பிஏ பயிலும் வகையில் ஸ்நாப் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 2,500 எம்பிஏ இடங்கள் இருக்கும் நிலையில் சுமார் 1 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
இந்த நுழைவு தேர்வு என்பது 60 கேள்விகள் அடிப்படையில் நடத்தப்படும். ஆங்கிலம், லாஜிக்கல் ரிசனிங் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். இது ஒரு Computer Based Test (CBT) தேர்வாகும். தேர்வு நேரம் என்பது 60 நிமிடம். அதாவது ஒரு மணிநேரமாகும். ஒருவர் 3 தேர்வில் பங்கேற்கலாம். இதில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கிறாரோ, அது கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.
இந்த நுழைவுத்தேர்வுக்கு https://www.snaptest.org/test-cities.html இணையதளம் மூலம் ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். இதற்கான பதிவு என்பது ஆகஸ்ட் 23ம் தேதி தொடங்கியது. நவம்பர் 23ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த பதிவின்போது 6 மாதத்துக்குள் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை பயன்டுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.2,250 செலுத்தப்பட வேண்டும்.
அதன்பிறகு டிசம்பர் 10, 17, 22 ஆகிய தேதிகளில் ஸ்நாப் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக மொத்தம் 84 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். சென்னை, மதுரை, கோவை, திருவனந்தபுரம், திரிச்சூர் உள்ளிட்ட இடங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் குறித்த விபரங்கள் ஹால்டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும். தேர்வு மையங்களின் முழு விபரங்களை https://www.snaptest.org/test-cities.html இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு ஸ்நாப் தேர்வு எழுதுவோர், நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு குரூப் எக்சர்சைஸ், தனிப்பட்ட உரையாடல் மூலம் அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும் கூடுதல் விபரங்கள் அறிய https://www.snaptest.org/test-cities.html அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications