Tata ACE Pro: பெட்ரோல் + பை-ஃபியூவல் + மின்சாரத்தில் இயங்கும் சரக்கு வாகனம் அறிமுகம்.. விலை இதுதான்
சென்னை: இதோ வந்து விட்டது முற்றிலும் புத்தம் புதிய Tata ACE Pro - இந்தியாவின் மிகவும் மலிவான மினி டிரக். இது, பெட்ரோல், பை-ஃபியூவல் மற்றும் எலக்ட்ரிக் என மூன்று எரிபொருள் வகைகளில் அசத்தலாக தயாரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் புதிய தொழில் தொடங்குபவராக இருந்தாலும், உங்கள் தொழிலை விரிவுபடுத்துவராக இருந்தாலும், இந்த சிறிய டிரக் உங்கள் தொழிலுக்கு உதவ மிகப்பெரிய சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது.
தற்போது, நகர்ப்புற சரக்கு போக்குவரத்தானது, அளவிலும், வேகத்திலும், நிலைத்தன்மையிலும் மிக விரைவான மாற்றம் கண்டு வருகிறது. இ-காமர்ஸ் துறையின் வளர்ச்சி மற்றும் கடைசி மைல் டெலிவரி ஆகியவை நவீன வர்த்தகத்தின் இதயத் துடிப்பாக மாறி விட்டதால், வணிகங்களுக்கு வேகமான, திறமையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் வாகனங்கள் அவசிய தேவையாகி விட்டன.

இதை கவனத்தில் கொண்டு, அடுத்த தலைமுறை சிறிய வணிக வாகனமாக (SCV) Tata ACE Pro உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மினி டிரக், அதிக செயல்திறன் கொண்டதோடு, குறைவான கார்பன் உமிழ்வை வெளியிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மோட்டார்ஸ் கமர்சியல் வேக்கில்சின் கச்சிதமான, சக்திவாய்ந்த தயாரிப்பான இந்த Tata ACE Pro இந்தியாவின் கடைக்கோடி பகுதியையும் சென்றடையும் திறன் கொண்டது.
நீங்கள் நிறைய வாகனங்களை நிர்வகித்து தொழில் செய்பவராக இருந்தாலும் அல்லது முதல் முறையாக தொழில் தொடங்கியவராக இருந்தாலும், ACE Pro-வை வாங்கி அதிக பயன் பெறலாம். பெட்ரோல், பை-ஃபியூவல் (சிஎன்ஜி + பெட்ரோல்) மற்றும் எலக்ட்ரிக் என மூன்று விதமான எரிபொருள் வாகன வகைகளுடன், இன்றைய லாஜிஸ்டிக் துறையின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மரபு மாறாமல் மறுஉருவாக்கம்
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, டாடா மோட்டார்ஸ் கமர்சியல் வேக்கில்ஸ் நிறுவனம் தனது ஒரிஜினல் ACE டிரக்கை அறிமுகப்படுத்தியபோது, அது 25 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில்முனைவோருக்கு கைகொடுத்து, சிறிய டிரக்குகளில் ஒரு புதிய பாணியை உருவாக்கியது. தற்போது அதே மரபு, ACE Pro உடன் இன்னும் வலுவாக தொடர்கிறது. வெறும் ரூ.3.99 லட்சம் ஆரம்ப விலையில், Tata ACE Pro இந்தியாவின் மிகவும் மலிவான மினி டிரக்காகவும், செயல்திறன், லாபம் மற்றும் முன்னேற்றத்தை வழங்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி டாடா மோட்டார்ஸ், நிர்வாக இயக்குநர் கிரிஷ் வாக் கூறுகையில், ''புதிய வாய்ப்புகளுக்காக கனவு காணும் புதிய தலைமுறையினருக்காக புதுப்பிக்கப்பட்ட நோக்கத்துடன், முற்றிலும் புத்தம் புதிய Tata ACE Pro உடன் நாங்கள் எங்கள் பாரம்பரியத்தை உருவாக்கி வருகிறோம்'' என்றார்.
விருப்பமான எரிபொருள் தேர்வு
பல தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ACE Pro மூன்று வகையான எரிபொருளை பயன்படுத்த முடியும்.
பெட்ரோல்: வலுவான 694cc எஞ்சின், அதிகபட்சமாக 30bhp பவரையும், 55Nm டார்க் திறனையும் வழங்கும். இது, பொது சரக்கு வாகன பயன்பாட்டிற்கு தேவையான சக்தியை தருவதோடு, எரிபொருளையும் சிக்கனப்படுத்தி, சரியான சமநிலையை ஏற்படுத்தும்.
பை-ஃபியூவல் (சிஎன்ஜி + பெட்ரோல்): செலவை குறைக்க விரும்புவோருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த பை-ஃபியூவல் வகை டிரக், சிஎன்ஜி மோடில் 26bhp மற்றும் 51Nm திறனை வழங்குகிறது. மேலும், டிரக்கின் ரேஞ்சையும், நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்க, 5 லிட்டர் பெட்ரோல் டேங்கை கொண்டுள்ளது.
எலக்ட்ரிக் (EV): நகர்ப்புற லாஜிஸ்டிக் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட ACE Pro EV, 38bhp மற்றும் 104Nm டார்க் திறன் கொண்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 155 கிமீ வரை பயணிக்கக் கூடியது. இதன் IP67-மதிப்பிடப்பட்ட பேட்டரி மற்றும் மோட்டார், அனைத்து வானிலை நிலைகளிலும் நம்பகமான செயல்திறனை உறுதி செய்கிறது.
கடினமான பேலோடு தாங்கும் திறன்
மொத்தம் 750 கிலோ பேலோடு தாங்கும் திறன் மற்றும் 6.5 அடி (1.98 மீ) லோடு டெக் உடன், ACE Pro சிறிய ரக லாஜிஸ்டிக் வாகனங்களில் வலுவான சுமை தாங்கும் திறனை கொண்டுள்ளது. இது பேக்டரி பிட்டட் பிளாட்பெட் அல்லது அரை-டெக் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இதன் மூலம், கன்டெய்னர், ரீஃபர் மற்றும் பல அடுக்கு பிட்மென்ட்கள் என இ-காமர்ஸ் மற்றும் குளிர்பதன சரக்குகளின் விநியோக சங்கிலிகள் அனைத்திற்கும் மிகப் பொருத்தமாக அமைகிறது.
ஓட்டுநரின் வசதிக்கு முக்கியத்துவம்
குறுகலான நகர்ப்புற வீதிகள் அல்லது கரடுமுரடான நிலப்பரப்புகளில் நீண்ட நேரம் சரக்கு வாகனம் ஓட்ட அதற்கேற்ப டிரைவர்களுக்கு சில வசதிகள் தேவைப்படுகின்றன. அதை கவனத்தில் கொண்டு, ACE Pro விசாலமான, பணிச்சூழலுக்கு ஏற்ற கேபினுடன் பொருட்களை வைக்க அகலமான இடவசதி உள்ளது. மேலும், AIS096-இணக்கமான செயலிழப்பு-சோதிக்கப்பட்ட வடிவமைப்பையும் கொண்டுள்ளது. இதுதவிர, ஓட்டுநர்களுக்காக பின்வரும் அம்சங்களும் இடம் பெற்றுள்ளன:
* டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்.
* ஆப்ஷனல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
* சோர்வின்றி வாகனம் ஓட்ட வசதியான இருக்கை
இவை வெறும் வாகனத்திற்கான சிறப்பம்சங்கள் மட்டுமல்ல; அவை ஓட்டுநரின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், பாதுகாப்பை அதிகரிப்பதற்கும், உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும் உதவும் கருவிகளும் என்பது குறிப்பிடத்தக்கது.
வணிக வளர்ச்சிக்கு உதவும் தொழில்நுட்பம்
ACE Pro, டாடா மோட்டார்ஸின் ஃப்ளீட் எட்ஜ் பிளாட்பார்முடன் இணைக்கப்பட்டுள்ளது. இது, இந்தியா முழுவதும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்களின் பாதுகாப்பை கண்காணிக்கிறது. இந்த பிளாட்பார்ம் பின்வரும் நன்மைகளை வழங்குகிறது:
* நிகழ்நேர வாகன உதிரிபாகங்களின் நிலை கண்காணிப்பு
* ஓட்டுநரின் நடத்தையை கண்காணித்தல்
* பராமரிப்பு முன்கணிப்பு அலர்ட் வசதி
* கியர் ஷிப்ட் அட்வைசர் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங்
* அசிஸ்டென்ட் போன்ற நேவிகேஷன் உதவி உபகரணங்கள் உண்டு
இதன் மூலம், டிரான்ஸ்போர்ட் நிறுவனம் மற்றும் வாகன உரிமையாளர்கள், அதிக நேரம் வாகனம் இயக்கப்படுவதை உறுதி செய்வதோடு, சிறந்த எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவுகளையும் உறுதி செய்ய முடியும்.
நாடு தழுவிய நெட்வொர்க், தடையற்ற பராமரிப்பு
நாடு முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட சர்வீஸ் மற்றும் உதிரிபாக விற்பனை நிலையங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, ஸ்டார் குரு நெட்வொர்க் மூலம் தொலைதூர இடங்களிலும் சேவை வழங்கப்படுவதால், தடையற்ற ஆதரவை டாடா மோட்டார்ஸ் உறுதி செய்கிறது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பிரத்யேக ஒர்க்ஷாப்கள் மற்றும் 24x7 ரோடுசைடு அசிஸ்டென்ட் ஆகியவை வணிகம் எந்த இடையூறும் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்க உதவுகிறது.
வாகனம் வாங்க உங்களுக்கு நிதி தேவையா? அதற்கும் முன்னணி வங்கிகள் மற்றும் என்பிஎப்சிக்களுடன் இணைந்து டாடா பின்வரும் உதவிகளை வழங்குகிறது:
* விரைவான கடன் ஒப்புதல்.
*வசதியான EMI திட்டங்கள்.
* தனிப்பயனாக்கப்பட்ட நிதி விருப்பங்கள்.
இதன் மூலம், டாடாவின் டிஜிட்டல் சேல்ஸ் தளமான ஃப்ளீட் வெர்ஸ் மூலம் ஆன்லைனில் உங்களுக்கு விருப்பமான ACE Pro வாகன வகைகளை முன்பதிவு செய்யலாம் அல்லது நாடு முழுவதும் உள்ள 1,250 வணிக வாகன டீலர்ஷிப்களில் ஏதேனும் ஒன்றை நேரடியாக அணுகலாம்.
நவீன இந்தியா முயற்சிக்கான உருவாக்கம்
ACE Pro வகைகள் - குறிப்பாக எலக்ட்ரிக் வாகனம், இன்றைய வளர்ந்து வரும் கடைசி மைல் விநியோக பொருளாதாரத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதாகும். மளிகைப் பொருட்கள் மற்றும் கூரியர்கள் முதல் மொபைல் விற்பனை மற்றும் குளிர்பதன சங்கிலி தளவாடங்கள் வரை, ஒவ்வொரு ஏஸ் ப்ரோ வாகன வகைகளும் இந்தியாவின் தொழில்முனைவோரின் தனித்துவமான தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
டாடா மோட்டார்ஸின் SCVPU - துணைத் தலைவரும், வணிக தலைவருமான பினாக்கி ஹல்தார் கூறுகையில், ''பல எரிபொருள் விருப்பங்கள், மலிவான விலை மற்றும் மேம்பட்ட ஓட்டுநர் அம்சங்கள் ஆகியவற்றுடன், Tata ACE Pro பல்வேறு பயன்பாட்டு தளங்களில் சிறந்த பங்களிப்பை வழங்குகிறது'' என்றார்.
ஒரே பிளாட்பார்ம், ஓராயிரம் கனவுகள்
நீங்கள் ஒரு ஜிக் ஒர்க்கராக உங்கள் டெலிவரி வணிகத்தைத் தொடங்குபவராகவோ அல்லது பல வாகனங்கைள நிர்வகிக்கும் வளர்ந்து வரும் நிறுவனமாகவோ எதுவாக இருந்தாலும் உங்களுக்கு Tata ACE Pro ஒரு நம்பகமான பங்குதாரராக இருக்கும். எரிபொரும் விருப்பத்தேர்வுகள், ஸ்மார்ட் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறையின் முன்னணி ஆதரவு ஆகியவற்றிற்கான விருப்பங்களுடன், இது ஒரு டிரக்கை என்பதை தாண்டி வளர்ச்சிகளின் வாய்ப்புக்கான ஒரு தளமுமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications