வேகமாக வளரும் திருவள்ளூர்.. அடுத்த 10 வருடங்களில் நடக்க போகும் மாஸ் முன்னேற்றங்கள்!
சென்னை: சென்னைக்கு அருகே இருக்கும் மிக வேகமாக வளரக்கூடிய மாவட்டங்களில் ஒன்று திருவள்ளூர். சமீப காலங்களில் திருவள்ளூர் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. முக்கியமாக கட்டுமான துறை தொடங்கி தொழிற்சாலைகள் வரை தொடர்ந்து பல துறைகளில் திருவள்ளூர் முன்னேறி வருகிறது.
அடுத்த 10 வருடங்களில் திருவள்ளூர் சில அசாத்திய மாற்றங்களை சந்திக்க உள்ளது. திருவள்ளூரில் அடுத்த 10 ஆண்டுகளில் நடக்க போகும் அதிரடி மாற்றங்கள் என்னென்ன? வளர்ச்சி திட்டங்கள் என்னென்ன? என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.

உள்கட்டமைப்பு திட்டங்கள்: வரும் ஆண்டுகளில் உள்கட்டமைப்பு திட்டங்களில் திருவள்ளூர் பெரும் வளர்ச்சியை சந்திக்க போகிறது. முக்கியமாக சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு (சிபிஆர்ஆர்) கட்டுமானம் இந்த பகுதியில் மிக சிறந்த சாலை போக்குவரத்தை கொடுக்கும்.இங்கே போக்குவரத்து நெரிசலை எளிதாக்கும். கூடுதலாக, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை திருவள்ளூர் வரை விரிவாக்கம் செய்வது தொடர்பாகவும் ஆலோசனை செய்து வருகிறது. இதனால் திருவள்ளூரில் குடியிருப்பாளர்களுக்கு சிறப்பான போக்குவரத்து வசதி வரும் நாட்களில் ஏற்படும்.
தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சி: திருவள்ளூர் மிக வேகமாக வளரக்கூடிய தொழிற்துறை மாவட்டம் ஆகும். பல்வேறு முக்கியமான இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் திருவள்ளூரில் முதலீடு செய்ய தொடங்கி உள்ளன. அதேபோல் சமீபத்தில் அமைக்கப்பட்ட ஸ்பெஷல் எக்கனாமிக் சோன் SEZs (Special Economic Zones) மூலம் திருவள்ளூரின் வளர்ச்சி வேகம் எடுத்துள்ளது. இந்த எக்கனாமிக் சோன் காரணமாக திருவள்ளூரின் முதலீடுகள், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் பொருளாதாரத்தை மட்டும் அதிகரிக்காமல் வேலைவாய்ப்பை, கட்டமைப்பு வளர்ச்சியையும் இது வரும் காலங்களில் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

குடியிருப்பு மற்றும் வணிக வளர்ச்சிகள்: திருவள்ளூரில் குடியிருப்பு மற்றும் வணிக இடங்களுக்கான தேவை அடுத்த பத்தாண்டுகளில் அதிவேகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கே உயரும் மக்கள்தொகையைப் பூர்த்தி செய்ய உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள், கேட்டட் கம்யூனிட்டிகள், மற்றும் ஒருங்கிணைந்த நகரங்களை உருவாக்குவதில் பல ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். கட்டுமான நடவடிக்கைகளின் இந்த எழுச்சி காரணமாக வணிக வளாகங்கள், மால்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் வரும் காலங்களில் திருவள்ளூரில் உருவாக்கப்படும். இதனால் அங்கே வாழும் மக்களின் அடிப்படை வாழ்க்கை தரமும் உயரும்.
கல்வி மற்றும் சுகாதார வசதிகள்: கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ அமைப்புகளின் விரிவாக்கம் மற்றும் மேம்பாடு திருவள்ளூரில் வேகமாக நடைபெற தொடங்கி உள்ளது. திருவள்ளூரில் தரமான கல்விக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய புதிய பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. அதேபோல் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகள், மருத்துவ மையங்கள் இங்கே அமைய உள்ளன.

பசுமை வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சி: உலகம் முழுக்க சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் நிலையில், திருவள்ளூரில் சுற்றுசூழலை மையமாக வைத்து பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவள்ளூரில் பல பசுமையான இடங்கள், பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு பகுதிகளை உருவாக்கவும், மேம்படுத்தவும், குடியிருப்பாளர்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கவும் மாவட்டம் திட்டமிட்டுள்ளது. அதேபோல் குப்பைகளை நீக்குதல், சரியாக கையாளுதல், தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை உருவாக்குதல் போன்ற பணிகளிலும் திருவள்ளூர் மாவட்டம் கவனம் செலுத்தி வருகிறது.
முடிவு: திருவள்ளூரின் எதிர்காலம் இதனால் மிக நம்பிக்கை அளிக்க கூடியதாக உள்ளது. வரப்போகும் கட்டுமான திட்டங்கள், பொருளாதார திட்டங்கள், மண்டலங்கள், தொழில்துறை வளர்ச்சி, குடியிருப்பு மற்றும் வணிக வளர்ச்சிகள், கல்வி மற்றும் சுகாதார வசதிகள், பசுமை வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவை அடுத்த 10 வருடங்களில் திருவள்ளூரில் ஏற்படும் சூழ்நிலைகள் உள்ளன. இது அங்கு உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மட்டுமின்றி முதலீடுகள், வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும். சென்னையின் வளர்ச்சிக்கு இணையாக திருவள்ளூரின் வளர்ச்சி வரும் நாட்களில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications